VASTU FOR SOUTH EAST KITCHEN DIRECTION -தென்கிழக்கு சமையலறை வாஸ்து (SOUTH EAST KITCHEN)

cokking direction vastu

VASTU FOR SOUTH EAST KITCHEN DIRECTION -தென்கிழக்கு சமையலறை வாஸ்து (SOUTH EAST KITCHEN)

தென்கிழக்கு ஆக்கிநேயமூலையில் சமையலறை எப்படிகட்டவேண்டும்? vastu for SouthEast corner kitchen construction

SOUTH EAST KITCHEN VASTU

kitchen vastu

vastu for southeast kitchen-ஒரு வீடு என்று இருந்தால் படுக்கை அறை , ஓய்வு அறை , போர்டிகோ போன்ற அறைகள் கூட இல்லாமல் இருக்கும். ஆனால் நிச்சயம் சமையல் அறை இல்லாமல் வீடு என்று ஒன்று இருக்காது. ஒரு வேளை வீட்டில் சமையலுக்கு என்று தனி அறை ஒதுக்க இடம் இல்லாவிட்டாலும் நிச்சயம் சமையல் மேடை போன்று ஒரு திட்டினை அமைத்து சமையல் செய்வார்கள். ஏனெனில் “உணவே மருந்து” என்று தொன்று தொட்டு தமிழர்களின் மரபாக இருப்பது சமையல் கருவூலம் ஆகும்.

அப்படி முக்கியத்துவம் வாய்ந்த சமையல் அறையினை பலரும் வசதி மற்றும் அழகுக்காக வாஸ்து முறை படி கட்ட தவறி விடுகின்றனர். இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர். எனவே சமையல் அறைகளை கட்டுவதற்கான  வாஸ்து குறிப்பினை  நான்கு திசைகளில் எங்கு அமைக்க வேண்டும், எங்கு அமைக்க கூடாது . மற்றும் அதன் பலன்களை தனி தனி பதிவாக வாசகர்களுக்காக கொடுக்க உள்ளோம்.

house vastu

நீண்ட நாட்களாக தொடர்ந்து இந்த சமையல் அறையின் வாஸ்து சந்தேகத்தினை பற்றிய  பதிவினை கேட்கும் அன்பு வாசகர்களுக்காக விரிவான 4 பதிவாக கொடுக்க உள்ளோம். உங்களுக்கான பதிவினை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்றைய தலைப்பு தென்கிழக்கு ஆக்கிநேய மூலையில் சமையல் அறை அமைக்கலாமாஅமைக்க கூடாதா?. வாருங்கள் பதிவிற்கு செல்வோம்.

ஆக்கினேய மூலை என்றால் என்ன? South East corner vastu

ஆக்கினேய மூலை என்பது தென்கிழக்கு மூலை ஆகும். வீட்டின்  சமையலறை கட்ட மிக உகந்த இடம் என்றால் அது தென்கிழக்கு மூலையே ஆகும். சிலர் இவற்றை அக்னி மூலை என்றும் கூறுவார்கள்.

ஆக்கினேய மூலையில் ஏன் அடுப்பறையை கட்ட வேண்டும்?

Reason For Kitchen Construction in SouthEast Corner/Direction

AGNI BHAGAVAAN

அஷ்டதிக் பாலகர்களின் ஒருவரான பவித்ரத்தின் புனிதமான அக்னி பகவான் பிறக்குமிடம் தென் கிழக்கு திசை ஆகும். அதே போல் அக்னியை தன்னுள் கொண்ட பகவான் சூரியதேவர் உதிக்கும் இடமும் கிழக்கு திசையே ஆகும். இதனால் உஷ்ணத்தை பிறப்பிடமாக கொண்ட திசை தென்கிழக்காக பார்க்க படுகின்றது.

எனவே தான் வீட்டிற்கும்  தென்கிழக்கு திசையிலே சமையலறையை அமைக்க வேண்டும் என்பது வாஸ்துவின் விதி ஆகும். அவ்வாறு கட்டும் பொழுது அது வீட்டின் ஆக்கினேய மூலையாக மாற்றபடுவதினால் உங்கள் வீட்டிற்கும், குடும்ப தலைவிக்கும் சிறந்த பலனை உண்டாக்கும்.

south east kitchen vastu

இங்கே குறிப்பாக பார்க்கப்படவேண்டிய விஷயம் என்ன வென்றால்  சமையல் அறை என்பதினால் இது குடும்பத்தலைவகளுக்கான அறை என்ற அர்த்தம் இல்லை. உண்மையில் நெருப்பு என்பது பவித்ரம் ஆகும். பெண் என்பவளும் பவித்ரம் கொண்டவள் ஆவாள். இங்கே நெருப்புக்கு வாஸ்து திசை தவறாக அமைந்தால் அந்த வீட்டின் பெண்ணிற்கும் பாதிப்புகள் நேரிடும்.

இன்னும் விளக்கி சொல்ல வேண்டும் என்றால்,

ராமாயணத்தில் மாதா சீதாதேவி ராவணனின் சிறைவாசம் பின்பு அக்னி பிரவேசம் செய்து தனது கற்பு நெறியினை உலகிற்கு பறைசாற்றினார். அதே போல் மகாபாரதத்திலும் பாஞ்சாலி பிறந்த இடமும் அக்னி வேள்வியே ஆகும். அவ்வளவு ஏன் நாம் வீட்டில் யாகங்கள் கூட அக்னி வேள்வியாக வளர்த்து அதில் இடும் காணிக்கைகள், தானங்கள் அனைத்தும் தேவர்களிடத்தில் நமக்காக கொண்டு சேர்ப்பதும் அக்னி பகவானே.

homam

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அக்னிபகவான் அவருக்கான இடத்தில் அல்லாது வேறு இடத்தில் சமையலறை அமைத்து அங்கு அக்னி உண்டாக்கினால் பண நஷ்டம் ஏற்படும். மேலும் குடும்ப தலைவிகளுக்கு கண்டிப்பாக பாதிப்பு உண்டாக்கும்.

வாஸ்துப்படி ஆக்கிநேய மூலையில் சமையல் அறை எப்படி கட்ட வேண்டும்?Kitchen Construction Vastu for SouthEast Direction

முன்பே கூறியது போல வீட்டின் தென்கிழக்கு திசையின் ஆக்கிநேய அறையில் ஆக்கிநேய மூலையில் அடுப்பை அமைத்துக் கொள்வது சிறந்த செயல் ஆகும். ஒரு வேலை வாயவிய அறையில் சமையலறையினை  கட்டினாலும் அந்த அறையின் ஆக்கினேய மூலையில் சமையல் மேடை அமைத்து அடுப்படி வைப்பதே நல்லது ஆகும். இங்கே கூறிய வாஸ்து முறைப்படி இதற்கும் பின்பற்றி கட்டிக்கொள்ளுங்கள்.

village kitchen vastu

vastu for southeast kitchen-சமைப்பது என்பது தரையின் மீதும் அடுப்பை வைத்து அமர்ந்தும் ஆக்கினேய மூலையில் சமைக்கலாம். அல்லது பெரும்பாலும் நவீன காலத்தில் நின்றுகொண்டு சமைப்பதும் வழக்கமாக இருக்கின்றது.அது போலே தரையின் மீதல்லாமல் சிறிது உயரத்தில் அடுப்பை வைக்க நினைத்தால், தரையிலிருந்து ஒன்றரை அல்லது இரண்டடி உயரத்தில் திண்ணையை கட்டி கொள்ளுங்கள்.

அப்படி கட்டும்பொழுது உங்கள் வீட்டின் சமயலறையின் வடக்குச் சுவரை  தொடாமல் குறைந்தது 3 அங்குலம் இடத்தை விட்டு கிழக்குச் சுவரை  சார்ந்து  திண்ணையை அமைத்து கட்டி அதன்மேல் அடுப்பை வைக்கவும்.

இல்லையென்றால் சமையல் அறையின் திண்ணையை பெரிதாக இரண்டுபக்க சுவருக்கு கட்ட வேண்டும் என்றால் மேலே கூறியது போலவே வடக்குச் சுவரைத் தொடாமல் குறைந்தது 3 அங்குலம் இடத்தை விட்டு கிழக்குச் சுவரையொட்டி தொடர்ந்து தெற்கு ஆக்கிநேயம் வரையும் கட்டிக்கொள்ளுங்கள். பின் அதிலிருந்து தெற்குச் சுவர் முதல்  மேற்கு சுவர் குபேர மூலை என்கின்ற நைருதி வரையிலும் முழுமையாக திண்ணையை அமைத்துக் கொள்ளலாம்.

kitchen vastu

ஒருவேளை சமையல் அறை பெரிதாக கட்ட வேண்டும்மூன்று பக்கம் திண்ணை அமைக்க வேண்டும் என்றால், மேற்கூறிய போல இரண்டு பக்கம் அமைத்து கொண்டு மேற்கு நைருதி முதல் மேற்கு வாயவியம் முழுமையாகவோ அல்லது வாயவியம் விட்டோ  அமைத்துக்கொள்ளலாம்

சமையலறை புகைக்கூண்டு வாஸ்து முறை

Vastu for Kitchen chimney

vastu form chimney construction

  மேற்கத்திய நாடுகளில் வீட்டின் கூரை மேல் புகை கூண்டு கட்டுவர். இந்த முறை கிழக்கு ஆக்கினேயம் பொறுத்தவரை தவறு ஆகும்.கிழக்கு ஆக்கினேய பொறுத்தவரை கிழக்குச் சுவரில் கூண்டு அமைத்து அடுப்பை ஏற்படுத்தக்கூடாது. அப்படி செய்தால் அந்த அறையில்  கிழக்கு ஆக்கிநேயம் வளர்ந்ததாகி வாஸ்து தோஷத்தை வீட்டிற்கு ஏற்படுத்தும்.

எனவே ஆக்கினேயம் வளராத வகையில் உயரம் குறைவாக இருக்கும் நவீன மாற்றத்துடன் விற்கப்படும் புதிய வகை சிம்னிகளை பயன்படுத்தலாம். இல்லையென்றால் புகை வெளியேற்றும் விசிறியினை (Exhaust Fan) கிழக்கு சுவற்றின் மேலே அமைத்துக்கொள்ளுங்கள்.

வீட்டின் சமையலறையில் அடுப்பு எத்திசையில் இருக்க வேண்டும்?Vastu Direction for Cooking

cokking direction vastu

 வீட்டில் சமையல் செய்பவர்கள் சமயலறையில் கிழக்கு முகமாக கிழக்கு திசையை நோக்கி பார்த்து இருக்கவேண்டும். எனவே வீட்டின் அடுப்பு மேற்கைப் பார்த்து இருத்தல் வேண்டும்.

இதுவே வாஸ்துப்படி தென்கிழக்கு ஆக்கிநேய மூலையில் சமையல் அறை எப்படி கட்ட வேண்டும் என்னும் விதி ஆகும். இந்த பதிவின் மூலம் தென்கிழக்கு ஆக்கினேய மூலையில் சமையலறை கட்டுவது எப்படி என அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.கட்டாயம் வஸ்துவை பின்பற்றி கட்டுங்கள். வாழ்க்கையில் சுபிட்சமாக வாழுங்கள்.

நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம் 

சந்திக்கின்றோம். தகவலை உடனுக்குடன் பெற  astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

To share with your friends please follow the links…

Rating: 4.5 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

This Post Has 2 Comments

Leave a Reply