OUTDOOR KITCHEN VASTU IN TAMIL -வீட்டின் வெளிப்புற சமையலறை வாஸ்து குறிப்பு

outdoor kitchen1

OUTDOOR KITCHEN VASTU IN TAMIL -வீட்டின் வெளிப்புற சமையலறை வாஸ்து குறிப்பு

OUTDOOR KITCHEN VASTU –வாஸ்து முறைப்படி வீட்டிற்கு வெளியே சமையலறை கட்டுவது எப்படி ?

BEST KITCHEN VASTU IN TAMIL

சரி இனி தலைப்பிற்கு வருவோம். பெரும்பாலும் சமயலறையினை வீட்டின் உள்ளே தென்கிழக்கு மூலையில் வாஸ்துமுறைபடி கட்டுவார்கள். சிலரோ வீட்டின் வெளிப்புற முற்றத்திலோ அல்லது காலி இடங்களில் கட்டுவார்கள். அவற்றை அவுட்டோர்  கிட்சேன் OutDoor Kitchen என கூறுவார்கள். அவற்றை வாஸ்து முறைப்படி கட்டுவது எப்படி என தனிப்பதிவாக இங்கே கொடுக்க உள்ளோம்.தேவைப்படுபவர்கள் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்றைய தலைப்பு வாஸ்து முறைப்படி வீட்டிற்கு வெளியே சமையலறை கட்டுவது எப்படி ? OUTDOOR KITCHEN VASTU IN TAMIL என அனைத்து திசைகளுக்கான வீட்டிற்கும் பார்க்க உள்ளோம்.

வீட்டிற்கு உள்ளே வாஸ்து முறைப்படி சமையலறை கட்டுவது எப்படி என தெரிந்துகொள்ள வாஸ்துபடி சமையலறை கட்டுவது எப்படி?  BEST VASTU FOR KITCHEN DIRECTION

வாஸ்து முறைப்படி வீட்டிற்கு வெளியே சமையலறை கட்டுவது எப்படி ?

OUTDOOR KITCHEN VASTU IN TAMIL

வீட்டிற்கு வெளியே சமையலறை கட்டினால் வாஸ்து பார்க்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் வாஸ்து பார்க்க வேண்டும். ஏனெனில் அதுவும் சமையலறையே. இம்முறை நீங்கள் பார்க்க வேண்டியது சமையலறைக்கும் மட்டும் அல்லாது உங்கள் வீட்டிற்கும் ,வெளிப்புற சமையலறை இருக்கும் இடத்திற்கும் உள்ள காலி இடத்தின் அளவிடும் அளந்து வாஸ்து முறைப்படி எடுத்து கட்ட வேண்டும்.

உங்கள் மனையின் திசையினை பொறுத்து எங்கு அதிகமான காலியிடம் விட வேண்டும் ? எங்கு குறைவாக இடம் விட வேண்டும்? எங்கு கட்டலாம்? மற்றும் எங்கு கட்டக்கூடாது? போன்ற அனைத்து தகவல்கள் மற்றும் உங்கள் சந்தேகங்களுக்கு  பதில் அளிக்க உள்ளோம். பதிவினை முழுமையாக படிக்கவும். 

கிழக்கு முகவாசல் வீட்டிற்கு வெளிப்புற தனிசமையலறை கட்டுவதற்கான வாஸ்து குறிப்பு

Outdoor Kitchen vastu for East Facing house

உங்கள் வீடு கிழக்கு பக்கம் வாசல் கொண்ட வீடாயின் நீங்கள் உங்கள் வீட்டிற்கு வெளிப்புறத்தில் தனியாக சமையலறை கட்ட நினைத்தால் கீழே குறிப்பிட்டுள்ள வாஸ்து குறிப்பினை பின்பற்றி கட்டிக்கொள்ளுங்கள்.

 கிழக்கு முகவாசல் வீட்டினை கொண்டவர்கள் சமையலறையைத் தனியாக ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும் எனில் உங்கள் வீட்டிற்கு பின்புறத்தில் கட்டிக்கொள்ளலாம். அதாவுது வீட்டிற்கு மேற்கில் காலியிடம் இருப்பின் அதில் உங்கள் வீட்டின் மேற்குச் சுற்றுச்சுவற்றின் (காம்பௌண்ட்)  மீதிருந்து கிழக்கு பக்கத்திற்கு சாய்வாக  வராண்டாப் போல போட்டுக்கொண்டு, அதில் ஆக்கிநேயத்தில் அடுப்பை வைத்து சமையலறையாக அமைத்துக்கொள்ளுங்கள்.

இதுபோன்று சமையலறைக்கு சாய்வான கோணத்தில் மேற்கூரை அமைத்தால்;சமையலறை மேற்கூரை மட்டமானது  உங்கள் முதன்மை பிரதான வீட்டின்  உயரம் அளவுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை வெளிப்புற சமையலறை ஆனது கான்கிரிட் ஸ்லாப்மாடி கொண்டு அமைத்தால்; உங்கள் முதன்மை பிரதான வீட்டை விட  சமையலறை மேல் மட்டமானது சற்று உயரமாக கட்ட வேண்டும்.

அதே போன்று உங்கள் முதன்மை வீட்டுக் கர்பத்தின் தரையைவிட வராண்டாவின் தரைமட்டம் சிறிது உயரத்தில் அமைக்க வேண்டும். மேலும் முக்கியமாக வீட்டிற்கும் சமயலறைக்கு  இடைவேளை அளவீடு பார்க்கவேண்டும். 

அதாவுது கிழக்கு வீட்டிற்கு பின்புறம் அமைக்கும் இந்த சமையலறை வராண்டாவிற்கும், உங்கள் முதன்மை பிரதான வீட்டிற்கும் இடையில் உள்ள காலியிடமானது உங்கள் வீட்டின் முன்பக்கமாக இருக்கும் கிழக்கு திசையின் வெற்றிடத்தை விட குறைவாக இருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இடைவேளை என்பது வீட்டின் முன்பக்கத்தை (கிழக்கு) விட பின்பக்கம் (மேற்கு) குறைவாக இருத்தல் நலம் சேர்க்கும். 

வடக்கு முகவாசல் வீட்டிற்கு வெளிப்புற தனிசமையலறை கட்டுவதற்கான வாஸ்து குறிப்பு

Outdoor Kitchen vastu for North Facing house

வடக்கு திசை வாசல் கொண்ட வீட்டினர் ஆக்கினேய அறையில் ஆக்கினேய மூலையில் சமையலறை அமைப்பது சிறந்த பலனை தரும்.வடக்கு திசை வாசல் கொண்ட வீட்டினர் ஒருவேளை வீட்டின் பின்புறம் தனியாக சமையலறையை கட்ட நினைத்தால் இது உங்களுக்கான பதிவு ஆகும்.

வடக்கு பக்கம் வாசல் உள்ள வீட்டிற்கு பின்புறம் என்பது தெற்கு திசை ஆகும். உங்கள் வீட்டிற்கு தெற்கில் காலி இடம் இருப்பின் தெற்கு சுற்றுசுவரிலிருந்து வடக்கு திசை நோக்கி தாழ்வாரம் போன்று போட்டுகொண்டு , அதில் ஆக்கிநேயத்தில் அடுப்பை அமைத்து சமயலறையாக உபயோகிக்கலாம்.

அதேபோன்று   வடக்குப்பக்கம் இருக்கும் உங்கள் முதன்மை வீட்டின் கர்ப்பத்தரை மட்டத்தைவிட நீங்கள் அமைக்கும் தெற்குப்புறம் சமையலறை வராண்டாவின் தரைமட்டம் சற்று உயரத்தில் இருக்கவேண்டும்.

மேலும் வடக்கு பக்கம் வாசல் கொண்ட உங்கள் முதன்மை ப்ரதான வீட்டிற்கும் , நீங்கள் கட்ட இருக்கும் வெளிபுற சமையலறை வராண்டாவிற்கும் இடையில் உள்ள காலி இடத்தின் அளவீடு மதிப்பினை கருத்தில் கொண்டு கட்ட வேண்டும்.

அவை எப்படி இருக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டின் வடக்கு பக்கம் உள்ள சுற்றுசுவர் அதாவுது முன்பக்கம் காம்பவுண்ட் சுவர் மற்றும் உங்கள் முதன்மை பிரதான வீட்டிற்கும் இடையில் உள்ள காலி இடத்தை விட; இந்த சமையலறை வராண்டாவிற்கும், உங்கள் முதன்மை பிரதான வீட்டிற்கும் இடையில் உள்ள காலி இடத்தின் அளவீடானது கட்டாயம் குறைந்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முன் பக்கம் வடக்குபுறம் காலியிடம் அதிகமாகவும் தெற்குபுறம் காலியிடம் குறைவாகவும் இருக்க வேண்டும்.

மேற்கு முகவாசல் வீட்டிற்கு வெளிப்புற தனிசமையலறை கட்டுவதற்கான வாஸ்து குறிப்பு

Outdoor Kitchen vastu for West Facing house

மேற்குபக்கம் வாசல் கொண்ட வீடாயின் உங்கள் வீட்டின் ஆக்கிநேய அறையில் ஆக்கிநேய மூலையில் அடுப்பை வைத்து சமையலறையாக அமைத்துக் கெள்வது சிறந்த பலனை தரும்.

மேற்கு பக்கம் வாசல் கொண்ட வீட்டினர் தனியாக சமையல் அறையை ஏற்படுத்த நினைத்தால் உங்கள் வீட்டின் பின்புறம் கிழக்குக் காலி இடத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

அப்படி அமைக்கும் பொழுது  வீட்டின் வெளிபுற சமையலறையின் தரைமட்டமானது, உங்கள் முதன்மை பிரதான வீட்டின் தரைமட்டத்தைவிட உயரம் அதிகமாக இருக்கக்கூடாது. சமமாகவோ அல்லது சற்று குறைந்தோ இருக்கவேண்டும்.

ஆனால் அதே சமயம் உங்கள் முதன்மை பிரதான வீட்டிற்கும், வெளிபுற சமையலறைக்கும் இடையிலுள்ள இடத்தை விட, வெளிபுற சமையலறைக்கும், கிழக்கு சுற்றுசுவருக்கும் இடையிலுள்ள இடம் அதிகமாக இருக்கவேண்டும்.

இன்னும் விலக்கி சொல்ல வேண்டும் என்றால் வீட்டின் பின்புற கிழக்கு சுற்றுசுவரை ஒட்டி சமையலறையினை கட்ட கூடாது.  உங்கள் மேற்கு பார்த்த வீட்டின் பின் பக்கம்  கிழக்கில் இருக்கும் சமையலறைக்கும் , வீட்டிற்கும்  உள்ள காலியிடத்தினை அளந்து அவற்றை விட அதிகமாக வீட்டின் பின்புறம் நீங்கள் கட்டும் சமையலறைக்கும் அதன் அருகாமையில் இருக்கும் சுற்றுச்சுவர் என்கின்ற காம்பௌண்ட் வாளிற்கும்  உள்ள கிழக்கு காலியிடமானது அதிகமாக இருத்தல் வேண்டும்.  இதுவே மேற்கு முகவாசல் வீட்டிற்கு வெளிப்புற தனிசமையலறை கட்டுவதற்கான வாஸ்து குறிப்பு ஆகும்.

இதுவே வெளிப்புற சமையலறை அமைக்கும் வாஸ்து விதி ஆகும்.

நன்றி!! மீண்டும் வேற ஒரு நல்ல தலைப்புடன் அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.

மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் கிடைக்க பெற Astrology Information7 Tamil என்ற Whatsapp channel மூலம் பின்தொடரவும் அல்லது Astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை மின்னஞ்சல் (email) மூலம் subscribe செய்து கொள்ளுங்கள்.

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

மேலும் இது போன்ற  தகவல்களுக்கு  Astrologyinformation7.com வலைதளத்தை Subscribe

செய்து கொள்ளவும்.

சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.

To share with your friends please follow the links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

Leave a Reply