MANACHANALLUR ARULMIGU UTHAMAR KOVIL DETAILS இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத ஏழு குருபகவானும், மூமூர்த்திகளும் முப்பெருந்தேவிகளும் ஒன்றாக வீற்றிருக்கும் ஸப்த திருமூர்த்திகளின் குருஸ்தலம்.

thirumoorthi sthalam

MANACHANALLUR ARULMIGU UTHAMAR KOVIL DETAILS இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத ஏழு குருபகவானும், மூமூர்த்திகளும் முப்பெருந்தேவிகளும் ஒன்றாக வீற்றிருக்கும் ஸப்த திருமூர்த்திகளின் குருஸ்தலம்.

UTHAMAR KOVIL

PARIHARA STHALAM – அனைத்து தோஷங்களுக்கான பரிகார ஸ்தலம்

Mummorthy god temple

படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை கொண்ட மும்மூர்த்திகளும் , கல்வி , செல்வம், வீரம் கொண்ட மூன்று தாயார்களும் ஒன்றாக அவர்களுக்கான தனி சன்னதியில் சிறப்பாக காட்சி அளிக்கும் புண்ணிய திருத்தலம் ஆகும். நம் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.அது மட்டுமின்றி நம் இந்திய திருநாட்டில் ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இதுவாகும். இக்கோவிலின் திருநாமம் உத்தமர் திருக்கோவில் ஆகும்.

sri purushothamar temple

வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். எங்கள் வலை தலமான astrologyinformation7.comக்கு நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்றைய பதிவு மனித  வாழ்க்கையின் பாவசுமைகளை குறைக்கும் வழியினையும், சாபம் மற்றும் அனைத்து விதமான தோஷத்தை நிவர்த்தி செய்யும்  மிக முக்கியமான ஸ்தலம் பற்றி அறிய உள்ளோம். இது நம் தாய்மாநிலம் ஆன தமிழ்நாட்டில் அமைந்திருப்பது நமது தமிழ் மக்கள் அனைவருக்கும் மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

 உத்தமர் கோவில் எங்குள்ளது?

tiruchy uthamar kovil

இக்கோவில் அமைந்ததுள்ள ஊர் சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாகவும் உள்ள காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி என்ற திருச்சி மாவட்டம் ஆகும். திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில்  மண்ணச்சநல்லூர் என்கின்ற ஊரில் உள்ளது உத்தமர் திருக்கோவில் ஆகும்.

உத்தமர் கோவிலின் திருமூர்த்திகளின் குருஸ்தலம் தல வரலாறு
History of Thirumurthy’s shrine of Utthamar temple

  • சிவனும் – ப்ரஹ்மஹத்தி தோஷமும்
lord bhramma

ஒருமுறை சிவபெருமானுக்கு படைக்கும் கடவுள் பிரம்மாவின் சாபத்தால் ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. சிவபெருமானுக்கு தோஷம் நிவர்த்தியான ஸ்தலம் உத்தமர் கோவில் ஆகும். சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி, அவரை தனது கணவர் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.

இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அத்துடன்  பிரம்மாவின் வெட்டுப்பட்ட ஐந்தாவது தலையின் மண்டை ஓடு சிவனின் கையுடன் ஒட்டிக் கொண்டு  கபாளமாக  கையில் மாறியது.

  • பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பரிகாரம்

Remedies for Brahmahati dosha

uthamar kovil

எம்பெருமான் ஈசன் எவ்வளவோ முயன்றும் அவரால் அந்த கபாளத்தை தன் கையில் இருந்து பிரிக்க முடியவில்லை. இதற்கு சாப விமோட்சனமாக பிரம்ம தேவர் காபலத்தில் உணவுகள் தன்னிறைவு அடையும் பொழுது ஈசனின் கையை விட்டும் விலகும் என்றார். ஆனால் அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. தாயார் அன்னபூரணியால் கூட அந்த கபாலத்தை அன்னத்தால் நிறைக்க முடியவில்லை .  இதனால் அகில உலகத்துக்கும் படி அளக்கும் படைக்கும் கடவுளான ஈசனே பசியில் வாடினார். அப்படி பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார்.

dhosam pariharam

அப்படி செல்லுகையில் இறுதியாக அவர் பெருமாளின் இல்லமான உத்தமர் கோவில் எனும் இத்தலத்திற்கு வந்து சேர்ந்தார்.  பின் இறைவனான பெருமாளை சந்தித்து தன் நிலையினை அறிந்து இந்த ப்ரம்மஹத்தி தோஷத்தில் இருந்து தன்னை ரட்சிக்குமாறு ஈசன் பெருமாளிடத்தில் வேண்டினார். பெருமாளும் தோஷத்தை போக்க மகாலட்சுமியிடம் சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி  கூறினார். தாயார் மகாலக்ஷ்மியும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் கையை விட்டு கபாலம் விலகியது. மேலும் எம்பருமானின்  பசியை நீக்கியது. இதனால் தாயார் மகாலட்சுமி  பூரணவல்லி என்ற பெயரும் பெற்றாள். மேற்கொண்டு பெருமாளும் பள்ளிகொண்ட கோலத்தில் புருஷோத்தமராக சிவனுக்கு காட்சி கொடுத்தார்.

உத்தமர் கோவிலின் மூலவர் சிறப்பு

UTHAMAR KOVIL GOD SPECIAL

–> மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன், அருகருகே தனித்தனி சன்னிதிகளில் அமைந்து அருளும் திருத்தலம் நம் இந்திய திருநாட்டிலேயே இது ஒன்றே ஆகும். காக்கும் கடவுளான பெருமாள் தன் பக்தர்களுக்கு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்தில் இப்புனித தளத்தினில் அருள் தருகின்றார்.

–>பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் எம்பெருமான் ஈசன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் காட்சி தருகின்றார்.

thirumoorthi sthalam

–>மேலும் இத்திருக்கோவிலில் தென்முக கடவுளான குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னிதியில் படைக்கும் கடவுளான பிரம்மா பக்தர்களுக்கு அருளும் தலமாக இங்கே விளங்குகின்றார்.

–>மேலும் பிரம்மாவின் இடதுபுறம் தனது மனைவியான சரஸ்வதிக்கு தனி சன்னிதி உள்ளது. அதில் கல்விக்கு கற்க தடைகள் நீக்கும் ஞான சரஸ்வதியாக அருள்பாலிக்கும் தல மாகவும் இக்கோவில் அமைந்திருக்கிறது.

–>இதனால் இத்திருக்கோவில்  திருமூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகின்றது

–> மேலும் இத்திருக்கோவிலுக்கு ஸப்த குருஸ்தலம் என்று மற்றோரு சிறப்பு பெயரும் உண்டு.

ஏழு குருபகவான்கள் வீற்றிருக்கும் சப்த குருஸ்தலம்
Uthamar kovil sabtha Gurusthalam

uthamar kovil sabtha gurusthalam

1. பிரம்மகுரு

2. விஷ்ணுகுரு

3. சிவகுரு

4. சக்திகுரு

5. சுப்ரமணியகுரு

6. தேவகுரு பிரஹஸ்பதி

7. அசுரகுரு சுக்ராச்சார்யார்

ஆகிய ஏழு குருபகவான்கள் இத்தலத்தில் ஒரே இடத்தில் வீற்றிருக்கின்றனர்.        மேலும் இங்கே உற்சவர் பெருமாள் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்தில்  உத்யோக விமானத்தின் கீழ் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதனால் புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமாதலால், உத்தமர் கோவில் எனும் புகழை கொண்டு தனி சிறப்பும் இத்திருத்தலம் பெற்றுள்ளது.

shivanya herbal hair oil
shivanya herbal shikaikai powder

திருமூர்த்திகளின் குருஸ்தலம் சென்று வந்தால் என்ன பலன் அடையலாம்

What are the benefits of visiting Thirumurthy’s temple?

நான் முன்பே கூறியதை போல் ஏழு குருபகவான் வீற்றிருக்கும் சப்த குருஸ்தலம் இந்தியாவிலேயே இத்திருக்கோவில் இது ஒன்றே ஆகும். மேலும் படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை கொண்ட மும்மூர்த்திகளும் , கல்வி ,செல்வம், வீரம் கொண்ட மூன்று தாயார்களும் ஒன்றாக அவர்களுக்கான தனி சன்னதியில் சிறப்பாக காட்சி அளிக்கும் புண்ணிய திருத்தலம் ஆகும். ஈசனின் சாபமும்,ப்ரம்மாவின் சாபத்தையும் நிவர்த்தி பன்னும் புருஷோத்தமராக  பெருமாள் தென்முக கடவுளாக இத்திருத்தலத்தில் வீற்றிருக்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்திற்கு நாம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவுது சென்று தரிசித்து வந்தோமே ஆனால் நிச்சயம் நம் பாவ கர்மாவை குறைத்து வாழ்வில் மகிழ்ச்சி அடையாளம்.

uthamar perumal kovil

கல்வி மேம்பட, வேலைவாய்ப்பு கிடைக்க, உடல் நலம் சிறக்க,குழந்தை பேறு கிட்ட, மன உளைச்சல் நீங்கி மன நிம்மதி அடைய போன்ற அனைத்து துன்பங்களும் விலகி உங்கள் வாழ்க்கையில் சகல சௌபாக்யத்தோடு  வாழ நாம் அனைவரும் நமது வாழ்வில் நிச்சயம் ஒருமுறையாவுது தரிசிக்க வேண்டிய மிக முக்கிய திருத்தலம் உத்தமர் திருக்கோவில் ஆகும்.

நன்றி!! மீண்டும் வேற ஒரு நல்ல தலைப்புடன் அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.

மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் கிடைக்க பெற Astrology Information7 Tamil என்ற Whatsapp channel மூலம் பின்தொடரவும் அல்லது Astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை மின்னஞ்சல் (email) மூலம் subscribe செய்து கொள்ளுங்கள்.

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

மேலும் இது போன்ற  தகவல்களுக்கு  Astrologyinformation7.com வலைதளத்தை Subscribe

செய்து கொள்ளவும்.

சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.

To share with your friends please follow the links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

This Post Has One Comment

Leave a Reply