Are you a big family?.. Vastu direction and benefits of bedrooms for family members to sleep peacefully.
குடும்ப தலைவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய குறிப்புகள்
மனநிம்மதியுடன் உறங்க வாஸ்து முறைப்படி குடும்ப உறுப்பினர்களுக்கான படுக்கை அறைகளின் அமைப்பு திசை மற்றும் பலன்கள் அறிய வேண்டுமா??.. இது உங்களுக்கான பதிவு..
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது வலைதளமான Astrologyinformation7 க்கு நீங்கள் தரும் உங்களின் தொடர் ஆகரவுக்கு மிக்க நன்றி. வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் கேள்விகளுக்கு விடை கொடுக்கும் விதமாக வாரந்தோறும் பதிவினை கொடுக்கின்றோம். அந்த வகையில் இன்று ஒரு தலைப்பை எடுத்துள்ளோம்.
வீட்டில் உள்ள படுக்கை அறைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வாறு இருக்க வேண்டும்.??
மானுட வாழ்கை என்பதே போராட்ட வாழ்க்கையாக இன்றைய காலகட்டம் அமைந்துள்ளது. பணம் , செல்வத்தை தேடி நாம் ஒவ்வொருவரும் இரவு, பகல் பாராது ஓடி ஓடி உழைக்கின்றோம்.
அதிலும் பெரும்பாலானோர் தனது கணவு, இலட்சியத்திற்காக நேரம் பாராது கடினமாக வேலை செய்பவர்கள் ஆவர். அவ்வாரு உழைப்பவர்களுக்கு உழைத்து, களைப்பு ஆறும் இடமாக அமைவது நமது வீட்டின் படுக்கை அறையே ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் படுக்கை அறை என்பது ஒரு வீட்டின் இதயம் ஆகும். ஆகையால் ஒரு வீட்டில் கட்டப்படும் அறைகளிலேயே படுக்கை அறையே மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய அறை ஆகும்.
படுக்கை அறைகளின் முக்கியத்துவம்
ஏனெனில் படுக்கை அறை என்பது நமது உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு, நிம்மதி மற்றும் நிலையான சிந்தனை தரும் இடம் ஆகும். அதிலும் பெரும்பாலும் குடும்ப தலைவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடும் அறையும் படுக்கை அறையே ஆகும். மேலும் குடும்ப சந்ததியினை விருத்திக்கும் பயன்படும் அறையும் படுக்கை அறையே ஆகும்.
இப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த படுக்கை அறையினை நாம் புதிதாக வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரடி அமைப்பதே சிறந்த செயல் ஆகும். சிலர் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என கூறி தட்டிகளிப்பர். அது மிகவும் தவறான செயல் ஆகும். இதனால் பாதிப்பு உண்டாகி பின்விளைவுகள் ஏற்படுத்தும்.
தவறான முறையில் படுக்கை அறை அமையப்பெற்றால் ஏற்படும் விளைவுகள் என்ன ?
தவறான முறையில் ஒருவருக்கு படுக்கை அறை அமையப்பெற்றால் அவருக்கு நல்ல உறக்கத்தினை இழக்க நேரிடும். மனஅழுத்தம் ஏற்படும். மேலும் மனதில் ஏதேனும் தொழில், உறவுகள், பிள்ளைகள் போன்றவற்றால் ஏற்படும் சிக்கல்களால் மனகுழப்பம் அதிகரிக்கும். இதனால் தூக்கமின்றி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவு வர நேரிடலாம்.
எனவே, நமது மன நிம்மதிக்காகவாது வீட்டின் படுக்கை அறைக்கு அனைவரும் கன்டிப்பாக முக்கியத்துவம் தர வேண்டும்.அதுவே குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லது ஆகும்.
படுக்கை அறைகளின் திசை மற்றும் வாஸ்து குறிப்புகள்
வாஸ்து படி வீட்டின் படுக்கை அறை தென்மேற்கு திசையில் அமைத்து கொள்வது சிறப்பு ஆகும்.
கூட்டு குடும்பமாக இருப்பின் அல்லது குழந்தைகளுக்கு தனி அறைகள் அமைப்பது போன்றஇரண்டு, மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு ஆயின் அவர்களுக்கு எந்த திசையில் உள்ள படுக்கை அறையினை ஒதுக்க வேண்டும் என பார்ப்போம்.
முதவில் கூட்டு குடும்பத்திற்கு படுக்கை அறைகளை அமைத்துக்கொள்ளும் முறைகளை பார்ப்போம்
- ஒரு குடும்பத்தில் மூத்த வயதில் உள்ளவர்கள்
- அதாவது தாத்தா பாட்டி, இருப்பின் அவர்களுக்கு தென்மேற்கு திசையில் உள்ள படுக்கை அறையினை அமைத்து கொள்வது நலம் சேர்க்கும்.
- ஒரு வேளை மூத்த தலைமுறையினர் இல்லையென்றால் அந்த வீட்டின் தலைமகன் அதாவது மூத்த அண்ணன் தென்மேற்கு திசையில் படுக்கை அறையினை அமைக்க வேண்டும்.
- அதற்கு அடுத்து வரும் இளையவர் தென்கிழக்கு ஆக்கினேயத்தில் படுக்கை இருந்தால் அங்கு அவருக்கு படுக்கை அறையினை அமைத்துக் கொள்வது சிறப்பு ஆகும்.
- அதற்கு அடுத்து வரும் இளையவர் வடமேற்கு திசையில் வாயாவியத்தில் படுக்கை அறையினை அமைத்து படுக்க வேண்டும்.
- ஈசனியம் வடகிழக்கு பகுதியில் பொதுவாக படுக்கை அறையினை அமைக்க கூடாது. ஒருவேளை குடும்பம் பெரிதாக இருப்பின் ..வடகிழக்கில் ஆன அறையில் படுக்கை அறை அமையப் பெற்றால் அதில் தம்பதிகள் பயன்படுத்த கூடாது.மாறாக வயதானோர், பிள்ளைகளுக்கு அந்த அறையினை படுக்கை அறையாக ஒதுக்கலாம்.
இந்த முறைகள் அனைத்து குடும்பங்களுக்கும் பொருந்துமா??
மேலே கூறிய இம்முறையினையே கூட்டு குடும்பம், சிறிய குடும்பம், பெரிய குடும்பம் என அனைத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொருத்தும்.
இன்னும் எளிதாக புரிய வேண்டும் என்றால் ..ஒரே குடும்பத்தை சேர்ந்த சந்ததிகளாக ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பின்..
→முதல் சந்ததி (குடும்பத்தின் வயதில் முத்தோர்) தெற்கு மேற்கு அறையும்,
→ அதற்கு இரண்டாம் சந்ததி (அடுத்த வயதினர்) தென்கிழக்கு அறையும்,
→இதுவே, சிறிய குடும்பமாக பெற்றோர், இரண்டு பிள்ளைகளோடு இருப்பவர்கள் ஆயின்
முதல் சந்ததி பெற்றோர் தெற்கு மேற்கு அறையும், இரண்டாம் சந்ததியின் முதல் வர்கமான உங்கள் பிள்ளைகளில் முத்தவருக்கு தென்கிழக்கு அறையினை ஒதுக்கவும்.
→ இரண்டாம் சந்ததியின் இரண்டாம் வர்கமான (அடுத்த வயதினர்), வடமேற்கு வாயாவிய அறையில் உங்களின் இளைய மகனுக்கு படுக்கை அறையினை ஒதுக்கவும்.
படுக்கை அறையில் கட்டாயம் பின் பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்
→ வடக்கில் தலைவத்து கண்டிப்பாக படுக்க கூடாது.மீறி படுப்பவர்கள் உடல் நலம் குன்றி நோய்வாய்பட்டு அவதிக்குள்ளாவாரகள்.
→படுக்கை அறையின் கட்டிலை தெற்கு மேற்கு திசை பக்கவாட்டில் போட வேண்டும்.
→கிழக்கு வடக்குகளில் அதிகமாக வெற்றிடம் அமையும்படி கட்டிலை போட வேண்டியது அவசியம் ஆகும்.
→தெற்கு அறையில் படுக்கை இருந்தால் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.
→அதே போல் மேற்கு அறையில் படுக்கை இருந்தால் மகிழ்ச்சியான சுகம் நிறைந்த வாழ்க்கை உங்களுக்கு கிட்டும்.
→ முடிந்த வரையில் கிழக்கு, வடக்கு அறையில் படுக்கை அமைக்க வேண்டாம். அது வாழ்வில் நஷ்டங்களை உண்டாக்கும். உடல் நலக் கோளாரை ஏற்படுத்தும்.
→ கிழக்கு, வடக்கு அறையில் படுக்கை அமைக்க பெற்றால் சிறுவர்கள்,வயதில் பெரியோற்கள் அந்த அறையில் படுக்கலாம். தம்பதிகள் கட்டாயம் அங்கு படுக்கை அறையினை அமைக்க கூடாது. இதுவே வாஸ்து விதி மூலம் படுக்கை அறைகளை அமைத்துக்கொள்ளும் முறை ஆகும்.
இந்த தொகுப்பின் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கான படுக்கை அறைகளின் வாஸ்து திசை பலன்கள் மற்றும் முக்கிய குறிப்புகளை உங்களுக்கு முழுமையாக கொடுத்துள்ளோம். வசகர்களுக்கு இருந்த அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கொடுத்துள்ளோம் என நம்புகின்றோம்.
நன்றி! வணக்கம்!
…மீண்டும் சந்திபோம்…
அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.
மேலும் இது போன்ற தகவல்களுக்கு Astrologyinformation7 Subscribe வலைதளத்தைசெய்து கொள்ளவும்.
சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.
To share post with your friends please follow the links…
Predict Your Life Before And Succeed It by God Divine
Leave a Reply