Late Marriage Pariharam-“முப்பது 30 வயதை கடந்தும் இன்னும் உங்களுக்கு திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருக்கின்றதா??..

Late Marriage Pariharam-“முப்பது 30 வயதை கடந்தும் இன்னும் உங்களுக்கு திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருக்கின்றதா??..

LATE MARRIAGE PARIHARAM

OR MARRIAGE POSTPONED SOLUTION – ஆண் பெண் இருவருக்கும் ஆன விரதமுறை

இதோ இது உங்களுக்கான பதிவு..

முப்பது 30 வயதை கடந்தும் இன்னும் உங்களுக்கு திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருக்கின்றதா. இதோ இது உங்களுக்கான பதிவு..

marriage postponed solution

பொதுவாக திருமணம் என்பது ஆண்களுக்கு  28 வயதிற்குள்ளும் பெண்களுக்கு 24 வயதிற்குள்ளும் திருமணத்தை பெற்றோர்கள் நடத்தி முடிப்பது சிறந்தது ஆகும்.

திருமணத்தை பல்வேறு காரணங்களுக்குக்காக பெற்றோரும், பிள்ளைகளும் தள்ளிப்போடுகிறார்கள் . அவற்றில் பெரும்பாலும் படிப்பு கடன் , புதிய வீட்டுக்க்கடன் , உடன்பிறந்தோர் திருமண செலவு , போன்ற குடும்ப சுமைகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக திருமணத்தை இளவயதில் தள்ளிபோடுகின்றனர்.

மேலும்  சிலரோ காதல் தோல்வியாலும் சில காலம் திருமணத்தை தள்ளிப்போட்டு 30 வயது கடந்த பின்னர் பெற்றோரின் கட்டாயத்திற்காக திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு வரன் தேடுங்கள் என்கிறார்கள்.

love failure
love failure pariharam

 மனிதனுக்கு கடமை என்பது எப்போதுமே தீராத ஒன்று தான். அதற்கு ஒரு கால நிர்ணயம் செய்து திருமணத்தை தள்ளி போடுவதினால் மன உளைச்சல் தான் உங்களுக்கு அதிகம் ஏற்படுமே தவிர கடமைகள் குறைய போவதில்லை. எனவே முதலில் வாழ்க்கையில்  செட்டில் ஆக வேண்டும் என்றால் அது திருமண பந்தம் ஏற்பட்டால் தான் முழுமை அடையும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது கடமை என்பது எல்லாக்கால கட்டத்திலும் நம்மளை பின் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எனபதால் தான் நம் முன்னோர்கள் எல்லாம் இளம் வயதினிலையே திருமணம் செய்து கொண்டார்கள்.

 அதை போலவே காதல் தோல்வியும். நினைக்க மனம் குடுத்த இறைவன் மறக்க மூளையும் நமக்கு கொடுத்துள்ளான் என்பதை சிந்தியுங்கள். அந்தக் காதலும் கடந்து போகும். எதிர்காலத்தை நோக்கி நகர்வீர்கள்.

shivanya herbal hair oil powder
shivanya hair oil

திருமண நேரம் என்பதை ஜாதக ரீதியாக பார்க்கும் போது குருவின் பார்வை எப்போது கிடைக்கிறதோ அப்போது தான் உங்கள் வீட்டில் மங்கள் யோகம் உண்டாகும்.

ஜாதக ரீதியாக லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ குருவானவர்  2,5,7,9,11 ஆம் இடங்களில் குரு வருவதால் மட்டுமே குரு பலம் என அழைக்கிறோம்.

இது ஆன் பெண் இருவருக்கும் பொருந்தும். சில சமயங்களில் யாராவுது ஒருவர் ஜாதகத்தில் குருவின் பார்வை கிடைத்தால் கூட இரு மனமும், குடும்பமும் ஒத்துப்போனால் நிச்சயம் திருமணம் கை கூட வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், ராகு கேது,நாக தோஷம்,களத்திர தோஷம், பித்ரு தோஷம் அல்லது சுத்த ஜாதகம் போன்ற எதுவாக இருந்தாலும் திருமணம் கைகூடவில்லை என்றால்  சில எளிய பரிகாரம் மூலம் அதை சரி செய்யலாம்.

guru bhagavan

ஒரு வேலை முன்னரே நீங்கள் பரிகாரம் செய்தும் எந்த பலனும் இல்லை என நினைத்தால்  கூட இந்த வழிபாடு நம்பிக்கையோடு செய்யுங்கள் நிச்சயம் திருமணம் கைகூடும். இவற்றிற்கு பொருட்செலவு பிரையான செலவு போன்ற எதுவும் கிடையாது. மிகவும் ஏழ்மையில் இருப்பவர்கள், வசதி படித்தவர்கள் கூட இதை முறையாக செய்தால்  நிச்சயம் திருமணத்தடை நீங்கும்.

LATE MARRIAGE PARIHARAM

திருமண தடை நீங்க மிகவும் சக்தி வாய்ந்த மிகவும் விசேஷமான விநாயகர் வழிபாடுகளில் ஒன்றான அரச மரத்து  பிள்ளையார் வழிபாடும் ஒன்றாகும். இதை சிரத்தையாக மனதில் விநாயகரை நினைத்து பக்தியோடு தொடர்ந்து தொடர்ச்சியாக நாற்பத்தி எட்டு நாட்கள் 48

(ஒரு மண்டலம் ) நாட்கள் செய்யவும்.

தடைகளை உடைக்கும் வல்லமை கொண்டவர் விநாயகப்பெருமான் ஆவார். அவரை உள்ளன்போடு பிராத்தித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய முறை மூலம் நம்பிக்கையோடு செய்யுங்கள். நாற்பத்தி எட்டு (48 )நாட்கள் முடிவதற்குள் உங்களின் வீடு தேடி நல்ல வரனாக உங்கள் மனதிற்க்கு பிடித்த துணையாக வரன் அமையும்.

திருமண தடை நீங்க மிகவும் சக்தி வாய்ந்த  எளிமையான விநாயகர் வழிபாடு ..

ஆண் பெண் இருவருக்கும் ஆன விரதமுறை

—————————————-

கிழமை நாள்

 வளர் பிறை சுபமுகூர்த்தம் கூடிய புதன் (அல்லது) வெள்ளிக்கிழமை நாளில் தொடங்கலாம்.

 வழிபடும் முறை

காலையில் எழுந்து சுத்தமாக தலைக்கு நீராடி நம் வீட்டின் அருகிலே இருக்க கூடியஅரச மரத்துடன் கூடிய பிள்ளையார் மற்றும் நாகசர்பம் இருக்கும் கோவிலுக்கு சென்று தொடர்ந்து தொடர்ச்சியாக நாற்பத்திஎட்டு நாட்கள் (ஒரு மண்டலம் ) அருகம்பில் விநாயகரின் சிரசின் மீது வைத்து  மஞ்சள் கலந்த நீரை கொண்டு சிலை மீது ஊற்ற வேண்டும் .. தொடர்ந்து அரச மரத்தை சுற்றியும் ஊற்ற வேண்டும் ..

பின்பு தினமும் மஞ்சள் மற்றும் குங்குமம் சிலை மீது தூவி அதன் அருகிலேயே அனைவரும் வைக்கும் படி சிறுது மஞ்சள் குங்குமம் கொட்டி வரவும் ..

செம்பருத்தி, வெள்ளெருக்கன், மல்லி போன்ற ஏதேனும் பூக்கள் வைத்து விநாயகரை ,நாக சர்பத்தினை வழிபாடு செய்யவும் ..

பின்பு பஞ்சு திரியில் மஞ்சள் தடவி இரண்டு நெய் தீபம் ஏற்றி திருமணம் தடை நீங்க மனம் உருக  பிராத்திக்கவும் ..

 இதை தொடர்ந்து ஒரு மண்டலம் செய்யவும்..

vinayagar for marriage

48ஆவது நாளில் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து , வழக்கம் போல் மஞ்சள் நீர் ஊற்றி தங்களுக்கு எத்தனை வயது ஆகிறதோ (உதாரணமாக 32 வயது  என்றால் 32 விளக்கு) அத்தனை நெய்விளக்கு போட்டு விரதத்தை முடிக்கவும்.

வசதி இருப்பின் பசும்பால் கொண்டு 48 நாட்களும் சர்ப்பம் மற்றும் விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் மேலும் அதிசிறப்பு…

 குறிப்பு -மஞ்சள் நீர் அபிஷேகம் குறையின்றி சிலை முழுவதும் நினையும் படி நீரினை ஊற்றவும் .

மேலும் விரதம் முடியும் வரை அசுப காரியங்கள் செல்வதை முற்றிலும் விர்க்கவும்..

மஞ்சள் குங்குமம் கொட்டுவதால் திருமண தடை நீங்கி விரைவில் இல்லறம் தொடங்கும்.. தீர்க்க ஆயுள் செல்வம் கொண்ட நல்ல துணை வெகு விரைவில் கிட்டும் …

ஓம் விநாயகா போற்றி.

marriage pariharam

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். தடைகளை தகர்ப்பவர் விநாயகபெருமான். அனைத்திற்கும் முதன்மையானவன். விநாயகரின் ஆசி கிடைத்தால் தான் குருயோகமே வந்தாலும் திருமனத் தடை விலகும். எனவே பக்தியோடு செய்தால் உங்கள் ஜாதகத்தில் இருந்த திருமண  தடைகள் விலகி வெகு விரைவில் எண்ணி நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் திருமண வரன் நிச்சயம் நடக்கும். மங்கள யோகம் கிட்டட்டும். சுபம்

astrologyinformation details
vastu details

நன்றி!! மீண்டும் வேற ஒரு நல்ல தலைப்புடன் அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.

மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் கிடைக்க பெற Astrology Information7 Tamil என்ற Whatsapp channel மூலம் பின்தொடரவும் அல்லது Astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை மின்னஞ்சல் (email) மூலம் subscribe செய்து கொள்ளுங்கள்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

Also follow us on facebook to get notification on regular life updates.

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

Rating: 5 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

predict your life before and succeed it by divine.

This Post Has 2 Comments

Leave a Reply