புது வீட்டில் இதை முடிக்காமல் கிரஹ பிரவேசம் கூடாது

புது வீட்டில் இதை முடிக்காமல் கிரஹ பிரவேசம் கூடாது

Graha pravesam should not do in a new house without completing this construction

புதிதாக வீடு கட்ட நினைக்கிறீர்களா..? அல்லது கட்டிய வீட்டிற்கு கிரஹ பிரவேசம் செய்யபோகிறீர்களா..? இதோ உங்களுக்கான பதிவு இங்கேமுழுமையாக படிக்கவும்..

சொந்த வீடு கட்டுதல் என்பது நமது எல்லோரின் கனவாகும். குறிப்பாக வாடகை வீட்டில் உள்ளவர்கள் தனது கனவு இல்லத்திற்காக அவர்களின்  வருமானத்தில் ஒரு மிகப் பெரும் தொகையினை சேமிப்பாக எடுத்து வைப்பார்கள். ஒரு சிலர் வங்கியின் மூலம் வீட்டுக் கடன் பெற்று புது வீட்டினை அரும்பாடு பட்டு கட்டுவார்கள். இன்னும் சிலரோ தங்களிடம் உள்ள தங்க நகையினை விற்றோ, பூர்விக பூமி போன்ற இடத்தை விற்றும் கூட தங்களின் கனவு இல்லத்தை கட்டி முடிப்பார்கள்.

ஒரு வீட்டினை கட்டி முடிப்பது என்பது வெறும் செங்கல், மணல், சிமெண்ட் போன்ற பொருட்கள் கொண்டு கட்டப்பட்ட வெறும் கட்டிடம் அல்ல. அது ஒரு குடும்பத்தின் உழைப்பு, தியாகம், கனவு திட்டம் ஆகும்.

இதை ஒருவர் ஜாதக ரீதியாக பார்க்கும் போது சொந்த வீடு கட்டும் யோகமானது எப்போது அமையும் என்றால் அதற்கு ஜாதகத்தில் கிரகங்களின் பார்வை, கூட்டணி நன்மை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் சொகுசான வாழ்க்கையும் கிடைக்கும் என்கிறது ஜோதிட விதி. நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் அமைவதைப் பொறுத்து மாடமாளிகையில் வசிக்கும் யோகம் அமைகிறது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால்.. குடும்பம் ஒன்று சேரும் இடமானது நம் இல்லம் ஆகும். நமது உடல் ஆரோக்யம், மன ஆரோக்யம், குழந்தைகள் வளர்ப்பு போன்றவை அனைத்திற்கும் முக்கிய பங்காக அமைவது நமது வீடு ஆகும். நமது சுகம்,துக்கம், கடன் கொடுக்கல் வாங்கல், நமது பிள்ளைகளின் திருமண நிகழ்வு போன்றவை  எதுவாயினும் நமது வீட்டின் வாஸ்து முறை கொண்டே நமக்கு அனைத்தும் அமைகின்றது என நமது சாஸ்திரம் சொல்கின்றது.

ஏனெனில் நமது குடும்பத்தை பாலமாக இணைப்பது நம் வீடு ஆகும். நம் வீட்டில் தான் அனைவரும் ஒன்றாக அமர்ந்து முடிவு எடுக்கின்றோம். எனவே தான் வீடு நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிடுகின்றது.

இன்னும் சொல்ல போனால் வேலைக்காக வெளியூர் செல்லும் பிள்ளைகளை விட்டு கூட பெற்றவர்கள் இருப்பார்கள். ஆனால் குடியிருக்கும் சொந்த வீட்டினை விட்டு பிள்ளைகளுடன் செல்ல மனம் ஒப்பாது.

மேலும் குடும்பத் தலைவனுக்கு மன உளைச்சலும்,ஒரு குடும்பத்தின் மன நிம்மதியும் கட்டாயம் வீடு வாஸ்து முறையில் அமைந்தால் மட்டுமே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

வாஸ்து என்பது வாடகை வீட்டிற்கும் பொருந்தும். எனவே வாடகைக்கு குடிபோகும் போதும் கட்டாயம் வாஸ்து முறையில் வீடு அமைந்துள்ளதா என ஆராய்ந்து செல்லவும்.எனவே வீடு என்பது நமது இந்து மத சாஸ்திரப்படி வாஸ்து முறையில் கட்டுவதே சாலச்சிறந்த செயல் ஆகும். வாஸ்துவின் விவரம் பற்றி மேலும் விவரமாக இன்னொரு கட்டுரையில் நாம் பார்ப்போம்.

இப்படி பல விஷயங்கள் இருக்க.. பலரும் இப்போதெல்லாம் புது வீட்டினை கட்டி முடிக்கும் முன்னரே நல்ல நாட்கள், நல்ல நேரம், நல்ல மாதம் சென்று விடும் போன்ற ஒரு சில காரணங்களுக்காக வீட்டினை முழுமையாக முடிக்காமல் கிரஹப்பிரவேசம் செய்கிறார்கள். உண்மையில் அவ்வாறு செய்யலாமா என்றால் நிச்சயம் செய்யக்கூடாது.

வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் முன்னர் கட்டாயம் இவற்றை கவனித்து முழுமையாக கட்டி முடிக்கவும்.

வீட்டின் மேற்கூரை கட்டாமலும், வீட்டின் அறைகளுக்கு கதவுகள் போடாமல் நிலை வாசலுக்கு கதவு போடாமலும் கிரஹப்பிரவேசம் செய்யக்கூடாது.

மேலும் வீட்டின் உள்புறம் முழுமையாக சுவர், தரை பூசாமலும் கிரஹப்பிரவேசம் கூடாது.

பஞ்ச மகாயக்ஞம் போன்ற ஹோம யாகங்கள் செய்யாமலும், பிராமண போஜனம் செய்விக்காமலும் புது வீட்டில் பிரவேசித்தால் துர் சக்திகள் வசிக்க நேரிடலாம். கெட்ட சொற்பனம் உண்டாகி மன நிம்மதியை இழக்க நேரிடலாம்.

 எனவே கட்டாயம் மேற்கண்டவைகளை முடித்த பிறகே கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும்.

மேலும் இது போன்ற  தகவல்களுக்கு  Astrologyinformation7.com  Subscribe செய்து கொள்ளவும்.

சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.

Read more: புது வீட்டில் இதை முடிக்காமல் கிரஹ பிரவேசம் கூடாது

Rating: 4.5 out of 5.
Read more: புது வீட்டில் இதை முடிக்காமல் கிரஹ பிரவேசம் கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

predict your life before and succeed it by divine.

Leave a Reply