Panguni uthiram murugan Pooja timing and worship method
Panguni Uthram pooja time 2025
சொந்த வீடு கட்ட, சொத்து சுகம் நிலைக்க, திருமண தடை விலகி மனதிற்கு பிடித்தவாறு விரைவில் திருமணம் நடைபெற, கணவன் மனைவி c மேம்பட, பிள்ளை வரம் பெற போன்ற இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி பெற அனைத்திற்கும் முருகப் பெருமானை வழிபடுவதற்காக உகந்த நாள் பங்குனி உத்திரம் ஆகும்.

இந்த வருடம் 2025 ம் ஆண்டிற்கான பங்குனி உத்திரம் வழிபடும் நல்ல நேரம் , திதி மற்றும் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் முறைகள், திருமணம் ஆகாதவர்கள் என்ன செய்ய வேண்டும் போன்ற பல ஆன்மிக தகல்வல்களுடன் இந்த பதிவினை காண உள்ளோம். பதிவினை முழுமையாக படியுங்கள். வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைய தலைப்பு “முருக பக்தர்கள் பங்குனி உத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்.” வாருங்கள் தலைப்பிற்கு செல்வோம்.
Panguni Uthra strarting time 2025
2025ம் ஆண்டு பங்குனி உத்திர நட்சத்திரத்திற்கான -நல்ல நேரம்
உத்திரநட்சத்திரம் பிறக்கும் நாள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 02:07 P.M. மணி முதல் 11-04-2025 வெள்ளிக்கிழமை மாலை 04:11 P.M. மணி வரை இருக்கும் .
Panguni Uthram pooja time 2025
வெள்ளிக்கிழமை – 11-04-2025
வழிபாட்டிற்கான நல்ல நேரம் : 11-04-2025 அன்று காலை 9:00 A.M. மணி முதல் 10:20 A.M.மணி வரை.
மாலை 6:00 P.M. மணி முதல் இரவு 8:00 P.M.மணி வரை
பௌர்ணமி திதி ஆரமிக்கும் நாள் 12-04-2025
இங்கு பௌர்ணமி திதி ஆரமிக்கும் நாள் 12-04-2025 சனிக்கிழமை தான். எனவே பஞ்சாங்க வாக்கியப்படி திதியினை இந்த வருடம் கணக்கிட வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குனி உத்திரம் என்றால் என்ன?
What is Panguni Uthiram?
தமிழ் மாதங்களில் நாளொரு தினம் வரும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் ஒன்றானது உத்திரம் நச்சத்திரம் ஆகும் . அப்படி மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் , தமிழ்வருட இறுதியில் வரும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரமும் ,பௌர்ணமி திதியும் ஒன்றாக இணைய கூடிய நன்னாளே பங்குனி உத்திரம் என்பது ஆகும்.
பங்குனி உத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்
Panguni Uthra special features

பகவான் சபரி மலை ஐயப்பன் பிறந்த நட்சத்திரமும், மாதா மஹாலட்சுமி அவதரித்த நட்சத்திரமும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரமே ஆகும்.
அவை மட்டுமின்றி எம்பெருமான் ஈசன் பார்வதி தேவியினை மணந்ததும் ,ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி -அன்னை சீதா தேவியினை மணந்ததும் , தேவலோகத்தின் அதிபதி தேவேந்திரன் – இந்திராதேவியினை கரம் பிடித்து மணந்ததும்,எம்பெருமான் சுந்தரேஸ்வரராக – மதுரை மீனாட்சி அம்பாளை மணந்ததும், ஆண்டாள் ரங்கநாதனை மணந்ததும் இந்த பங்குனி உத்திர நட்சத்திர திருநாளே ஆகும்.
அழகென்ற சொல்லுக்கு தமிழ் மகன் முருகன் என்னும் பொருள் உண்டு. அந்த அழகன் முருகனுக்கும், இந்திரனின் மகளான தெய்வானைக்கும் இந்த பொன்னாலான பங்குனி உத்திரத்திலேயே தேவர்களால் திருமணம் நடைபெற்றது. இத்தனை தெய்வீக திருமணம் நடத்தப்பட்ட இந்த நன்னாளான பங்குனி உத்திரத்திற்கு விரத நாள் எனும் மற்றொரு விசேஷ பெயரும் உண்டு.
Panguni uthra Pooja for Early Marriage
திருமண தடை விலக பங்குனி உத்திர விரதம்

இத்தனை தெய்வீக திருமணங்கள் நடந்த நன்னாளான பங்குனி உத்திரத்தில், திருமண வயதில் உள்ளோர் முருகப்பெருமானிற்கு விரதமிருந்து வழிபட்டால் விரைவில் திருமணம் தடை நீங்கி நல்ல வரன் அவர்களுக்கு அமையும் என்பது ஐதீகம் ஆகும்.
இதற்கு பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானின் அறுபடை வீட்டிலும், உங்கள் அருகாமையில் உள்ள முருகன் கோவில் சன்னதியிலும் விஷேஷ அபிஷேகமும், ஆராதனையும் நடை பெற்று முருகனுக்கும், வள்ளி தெய்வானைக்கும் திருமண வைபவம் நடைபெறும்.

அங்கு சென்றும் திருமண தடை விலகுவோர் , முருகப்பெருமான் திருமண செலவிற்கு மொய் காணிக்கை வைப்பது, மஞ்சள் குங்குமம், சீர் வரிசை செய்வது போன்ற திருமண சுப காரியங்களில் ஈடுபடுவது, பொருட்களை வாங்கி கோவிலுக்கு நன்கொடை அளிப்பதும் திருமணத்திற்கும், இல்லற வாழ்க்கைக்கும் சிறந்த பலனை தரும்.

இதை தவிர பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பது,மங்கள பொருட்களான மஞ்சள் குங்குமம், தாலி சரடு, கண்ணாடி வளையல் , வஸ்துக்கள் போன்ற பொருட்கள் தானம் தருவதும் திருமண தடை போன்றவை விலகி நல்ல வரன் விரைவில் அமைந்து வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறச் செய்யும்.

திருமணம் ஆகாதவர்கள் திருமணத்திற்காக முருகப்பெருமானின் அறுபடை வீட்டிற்கு ஏதேனும் செல்ல விரும்பினால் அவரது முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சென்று வாருங்கள். அங்கு தான் முருகன் இந்திரனின் மகளான தெய்வானையை பங்குனி உத்திரத்தன்று திருமண முடித்தார். இதனை நினைவு கூறும் வகையிலே முருகரும் , தெய்வானையும் தம்பதி சமேதராக திருமண கோலத்தினில் அங்கு காட்சி தருகின்றனர்.https://astrologyinformation7.com/best-vastu-for-kitchen-construction-வாஸ்துபடி-சமையலறை-க/
பங்குனி உத்திரத்தில் வீட்டிலேயே முருகனை வழிபடுவது எப்படி?
Panguni uthiram – How to pray lord murugan at home
பங்குனி உத்திரத்தன்று வீட்டிலேயே முருகப்பெருமானை வழிபாடு செய்ய நினைப்பவர்கள் அதிகாலையிலேயே நீராடி , முருகனை நினைத்து நெற்றியில் திருநீறு பட்டை அணிந்து வீட்டின் பூஜை அறையினை சுத்தம் செய்யவும். விரதம் இருப்போர் முந்தைய நாளிலேயே வீட்டினை சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணம் கட்டவும்.

பின் நல்லநேரத்தினில் முருகப்பெருமானின் சிலை அல்லது படத்தினை சுத்தம் செய்து சந்தன காப்பு அல்லது பூ மாலை போட்டு ஸ்வாமியை அலங்கரிக்கவும். இதில் கலசம் வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளோர் அவற்றையே பின்பற்றி கொள்ளலாம்.செவ்வரளி இருந்தால் இன்னும் விசேஷம். முருகர் சிலை, வேல் வைத்துள்ளோர் திருநீர், சந்தனம், பால் , பன்னீர் போன்ற பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யவும்.

பின் வேல்மாறல் , அருணகிரி நாதர் திருப்புகழ் போன்ற முருகப்பெருமானின் பதிகம் படித்து கற்பூர தீபாராதனை காட்டவும். இறைவனுக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல்,பால்பாயாசம் , முக்கனிகள்,தேங்காய் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு போன்றவற்றை வாழை இலை கொண்டு படைத்து முருகப்பெருமானை பூஜிக்கவும். உங்கள் வேண்டுதல்களுக்கு நிச்சயம் முருகப்பெருமான் செவி சாய்ப்பார். குடும்ப ஒற்றுமை மேம்படும்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் பதிவிற்கு ரேட்டிங் தரும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். please do like our page and rating us to encourage our work.
நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம்
சந்திக்கின்றோம்.
தகவலை உடனுக்குடன் பெற astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .
Also follow us on facebook to get notification on regular life updates.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நன்றி! வணக்கம்!
…மீண்டும் சந்திபோம்…
அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.
To share with your friends please follow the links…
Predict Your Life Before And Succeed It by God Divine
Leave a Reply