குடும்பம் முன்னேற பெண்கள் கவனிக்க வேண்டிய வாழ்வின் முக்கிய குறிப்புகள்2152|1

குடும்பம் முன்னேற பெண்கள் கவனிக்க வேண்டிய வாழ்வின் முக்கிய குறிப்புகள்2152|1

Important points of life that women should observe for the progress of the family

பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் ஆணி வேர் ஆவாள். ஒரு வீட்டின் பெண் குழந்தை என்பது நம் குலதெய்வத்திர்க்கு ஒப்பாகும். பெண் குழந்தை வளர்ந்து பூப்படைந்து.. திருமண வயதின் போது பெற்றோர்கள் அவர்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து அழகு பார்ப்பார்கள்.

அவ்வாறு குழந்தைகள் வளரும்பொழுது சில நல்ல குணங்களையும் அவர்களுக்கு சொல்லித்தந்து வளர்ப்பது பெற்றோர்களின் கடமை ஆகும்.

அது ஆண் குழந்தை, பெண் குழந்தை இருவருக்கும் பொருந்தும். சிறு குழந்தைகளில் இருந்தே நாம் அவர்களுக்கு நமது முன்னோர்களின் வழக்கங்களை  சொல்லி தருவதினால் அவர்கள் வளரும் போதே பொறுப்புடன் வளருவார்கள்.

ஏனெனில் சிலர் இப்போதெல்லாம் நாகரிகம் என்ற பெயரில் நமது இந்து மத அர்த்தமுள்ள வாழ்க்கையினையும், அது நமக்கு சொல்லி தரும் நம்பிக்கையும் உதாசினம் செய்கின்றனர்.

நாம் என்னதான் படித்தாலும், உயர் பதவியில் வேலைக்கு சென்றாலும், பெண்களுக்கென இருக்கும் சில அன்றாட கடமைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். மேலும் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நமது படிப்பு, தொழில் போன்ற அணைத்து உழைப்புமே நமது குடும்பம் நல்லா இருக்க வேண்டும்.நமது பிள்ளைகள் வசதியுடன் வாழ வேண்டும் என்பதற்க்காக தான்.

சில சமயம் என்ன தான் ஓடி ஓடி உழைத்தாலும் நமது குடும்பம் முன்னேறாமல் வறுமை நிலையிலேயே இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் வாழ்க்கையின் விரக்தியே நமக்கு தேடி தரும். மனக்கவலைகள் உண்டாகும். இதெற்க்கெல்லாம் காரணம் அந்த வீட்டில் அஷ்ட லட்சுமி வாசம் இல்லாமல் இருப்பது தான்.

இருவேளையும் விளக்கேற்றி தீபம் வைத்து இறைவனை கும்பிட்டாலும் வாழ்க்கையில் அன்றாடம் செய்ய வேண்டிய சில முக்கிய குறிப்பினை பெண்கள் கவனிக்காமல் மறந்து விடுகின்றனர்.

அவற்றை கவனித்து பெண்கள் வாழ்ந்தால்  அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு குடும்பம் மேலோங்கும். வறுமை விலகி அவர்களின் வாழ்க்கையில் சுபிக்ஷம் உண்டாகும்.

அவற்றில் மிக முக்கியமாக பெண்கள் கவனித்து கடைபிடிக்க வேண்டியவை சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்..

  • பெண்கள், கணவன் தூங்கிய பின்பும், தூங்கிய  கணவன் விழிப்பதற்கு முன்பும் எழ வேண்டும்.
  • சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, முற்றத்தில் பெருக்கி சாணம் அல்லது மஞ்சள் நீர் தெளித்து  கோலமிட வேண்டும்.
  • இரண்டு வெளி வாசல் இருப்பின் இரண்டு வாசலிலும் கோலம் போட வேண்டும்.
  •  கோலமிடுவதற்கு மஞ்சள் கலந்த அரிசி மாவு, பச்சிலைப் பொடி, குங்குமம் கலந்த அரசி இவற்றால் கோலமிட வேண்டும்.
  • சுப காரியங்களுக்கு இரண்டு கோடுகள் போட்டு கோலம் போட வேண்டும்.
  • அசுப காரியங்களுக்கு ஒரு கோடு  போட்டு கோலம் போட வேண்டும்.
  • வீட்டில் துவைத்த துணிகளை அழகாக அறையில்  அடுக்கி வைக்கவும்.அழுக்கு துணிகளை அதற்கான இடத்தில் வைக்கவும்.
  • தீய சொற்கள், கெட்ட வார்த்தை, சாபமிடும் சொற்களை முற்றிலும் தவிர்க்கவும்.
  • வீட்டில் சுத்தமாக இல்லை, காலி ஆகிவிட்டது, தீர்ந்து விட்டது என சொற்களை பயன்படுத்தாமல்.. இன்றைக்கு அல்லது நாளைக்குள்ள வாங்கனும்  அல்லது இந்த பொருள் தேவை போன்ற நேர்மறை சொற்களை பயன்படுத்தவும்.
  • சுத்தமில்லாத இடத்தில மகா லட்சுமி வாசம் செய்ய மாட்டாள்..மாறாக மூதேவி தங்கிவிடுவாள். எனவே வீட்டை எப்போதும் சுத்தமாக வையுங்கள்.
  • வீட்டில் புலம்பி கொண்டே இருப்பதும், தலை விரி கோலமாக திரிவதும் குடும்ப வருமானத்திற்கு தரித்தனத்திற்கு வழி வகுக்கும்.
  • குளித்த பின் அழுக்கு துணிகள் அணிவதும் ஆகாது.
  • கதவுக்கு மேல் துணி காயவைப்பதும் துணிகள் தொங்க விடுவதும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆகாது.
  • வீட்டிற்குள் கொடி கட்டி துணி காயவைப்பதினால் கூட்டு குடும்பம் பிரியும், சகோதரர்கள் பிரிவார்கள்.
  • சாப்பிடுமிடத்தை, பூஜையறை, சமையலறை, நாள்தோறும் கழுவுதல் வேண்டும்.
  • அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை, மாதப்பிறப்பு, வெள்ளிக் கிழமை, பிறவிசேஷ தினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்.
  • மண்பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது. குளித்த பின்பு தான் குடிநீர் எடுக்க வேண்டும்.
  • படுக்கை அறையின் போர்வையினை சுத்தமாகவும், தூங்கி எழுந்த பின் நன்றாக மடித்து வைக்க வேண்டும்.
  • காலணிகளை வீட்டு வாசலுக்கு நேராக விடாமல்  அதற்கான இடத்தில் நன்றாக விட வேண்டும்.
  • தண்ணீர்க் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வேண்டும். தோளிலும், தலையிலும் சுமக்கக் கூடாது.
  • பூஜை அறையின் பூக்களை நாள்தோறும் மாற்ற வேண்டும்.
  • பெண்கள் வளையல் போடாமல் உணவு பரிமாற கூடாது.
  • சுமங்கலி பெண்கள் காலில் மெட்டி போடாமல் நடக்க கூடாது.
  • ஒரு மெட்டி அணிவதே சிறப்பு ஆகும். இரண்டு மூன்று மெட்டி அணிந்தால்  மன்னவனின் உடல் நிலைக்கு கேடு ஆகும்.

மேலே கூறப்பட்டுள்ள முக்கியமான விஷயங்களை பெண்கள் வாழ்வில் கடைப்பிடித்தார்கள் ஆயின் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். குடும்பத்தின்  துன்பம் மற்றும் வறுமை விலக காரணிகளாக அமையும். குறிப்பாக இவை அனைத்தும் பெண்களுக்கு மட்டும் கிடையாது.

சில குறிப்புக்கள் ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொருந்தும். எனவே அவர்களும் பெண்களுக்கு உதவியாக பங்கு கொள்ள வேண்டும்.

உதாரணமாக வீட்டை சுத்தம் செய்தல் கெட்ட பேச்சுகள் பேசுதலை தவிர்த்தல், வீட்டு வேலைகளை பகிர்தல்   போன்றவை ஆகும். எந்த வேலைகளும் பெண்களுக்கு ஆண்களுக்கு என தனியானவை இல்லை.. ஆண்களும் உதவி செய்யுங்கள்.

எனவே ஒற்றுமையுடன் செய்து நம் பிள்ளைகளான வருங்கால சந்ததிகளுக்கும் இது போன்ற இந்து மத சாஸ்திரங்களான பல நல்ல விஷயங்களை எடுத்துரையுங்கள். வறுமையும் மனக்கவலையும் போக்கி மஹாலஷ்மியின் அருளுடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்.நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்

மேலும் இது போன்ற  தகவல்களுக்கு  Astrologyinformation7 .com Subscribe செய்து கொள்ளவும்.

சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.

please rate us…

Rating: 4.5 out of 5.
Read more: குடும்பம் முன்னேற பெண்கள் கவனிக்க வேண்டிய வாழ்வின் முக்கிய குறிப்புகள்2152|1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feedback Form

Please rate our website

predict your life before and succeed it by divine.

Leave a Reply