ஒரே நட்சத்திரக்காரர்ககள் திருமணம் செய்யலாமா?

ஒரே நட்சத்திரக்காரர்ககள் திருமணம் செய்யலாமா?

Can same stars get married?

SAME STAR MARRIAGE DETAILS

ஒரே நட்சத்திரக்காரர்ககள் திருமணம் செய்யலாமா?

நம்மில் பல பேர் திருமண வயதில் உள்ளவராகவோ அல்லது நமது குழந்தைகளுக்கு வரன் பார்த்து கொண்டிருக்கும் பெற்றோராகவோ இருப்போம். இது அவர்களுக்கான தேடல் ஆகும்.

வரன் அமைப்பதில் முக்கிய பங்காக ஜாதகம் பொருத்தம் பார்ப்பது உண்டு. அதிலும் முதலில் பார்க்கப்படுவது ஜென்ம நட்சத்திர பொருத்தம் ஆகும்.

நட்சத்திரம் என்பது ஒருவர் பிறந்த நேரம் மற்றும் நாட்கள் மூலம் சொல்லப்படுகிறது . திருமணத்தின் போது  மணமகன் , மணமகள் இருவருக்கும் அவர்களின் பிறந்த ஜென்மநட்சத்திரத்திற்கு ஏற்ப சில நட்சத்திரங்கள் ஜோசியர்கள் மூலம் குறித்து தரப்படும். அதற்கேற்ப பெற்றவர்களும் வரங்களை தேர்ந்து எடுப்பார்கள்.

சில சமயங்களில் ஒரே நட்சத்திரப்பொருத்தம் கொண்ட ஜாதகம் வரும். அதாவுது மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் ஒரே ஜென்ம நட்சத்திரம் இருக்கும். ஒரே நட்சத்திரம் இருப்பின் பெரும்பாலும் வேண்டாம் என கூறி வேறு ஜாதகம் பார்க்கலாம் என பெரியோர்கள் கூறுவார்கள்.

ஆண்,பெண் இருவரும் ஒரே நட்சத்திரம் என்பதற்காக பொதுவான ஒரு கருத்தை கூறி திருமணத்தை வேண்டாம் என சொல்லுவது முற்றிலும் தவறு. உண்மையில் அது எல்லா ஜாதகர்களுக்கும் கிடையாது.அது சிலரின் ஜாதகத்திற்கு மட்டுமே ஒரே நட்சத்திரம் திருமண வாழ்க்கை பொருந்தாது. உங்கள் ஜாதகத்திற்கு வரன் தேடும் பொழுது உங்களுக்கு பொருத்தம் வந்தால் நிச்சயம் அந்த வரனை அமைத்து கொள்ளுங்கள். எந்த தவறும் இல்லை. இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரம் திருமணம் செய்யலாம் மற்றும் செய்ய கூடாது என கீழே விரிவாக கொடுத்துள்ளோம். பதிவினை படியுங்கள்..

கணவன் மனைவி ஒரே நட்சத்திர ஒற்றுமை

same star marriage relationship

மிகவும் உத்தமமான பொருத்தம் கொண்ட ஒரே நட்சத்திரங்கள்

ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி ரேவதி இவை நட்சத்திரமானால் மிகவும் உத்தமம்.

சுமாரான பொருத்தம் கொண்ட ஒரே நட்சத்திரங்கள்

அசுவினி, கார்த்திகை மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்தரம், சித்திரை, அனுஷம் பூராடம் இவை ஒரே நட்சத்திரமானால் மத்திமம் திருமணம் செய்யலாம்.

கூடவே கூடாது கட்டாயம் திருமணம் செய்யக்கூடாத ஒரே நட்சத்திரங்கள்

பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி இவை ஒரே நட்சத்திரமாக இருந்தால் கண்டிப்பாக திருமணம் செய்யக் கூடாது.

இருவருக்கும் ஒரே நட்சத்திரம் செய்யக் கூடியதாக இருந்தாலும்.. பெண்ணின் நட்சத்திரத்தின் பாதம் ஆணின் நட்சத்திர பாதத்தைவிட அடுத்த பாதமாக இருப்பது சிறப்பு.

எனவே உங்கள் நட்சத்திரத்திற்கேற்ப வரும் ஜாதகம் கொண்டு அவற்றை அறவே தவிர்க்காமல் நல்ல ஜோசியரை அணுகவும்.

ஒரே நட்சத்திரம் என்ற ஒரே காரணத்துக்காக முற்றிலும் தவிர்க்காமல் உங்களுக்கு உண்மையிலேயே பொருத்தம் இல்லையா என மேற்கூறியவாறு நட்சத்திரங்கள் கொண்டு ஆராயவும் . எனவே பொதுவான கருத்தை வைத்து ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யக்கூடாது என்பது முற்றிலும் தவறான கருத்து ஆகும். ஒரே நட்சத்திரக்கார்கள் திருமணம் செய்ய கூடாது என்பது ஒரு சில நட்சத்திரத்துக்கு மட்டுமே பொருந்தும் என இந்த பதிவின் மூலம் வாசகர்கள் அனைவருக்கும் தெளிவாக புரிந்திருக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

நன்றி!! மீண்டும் வேற ஒரு நல்ல தலைப்புடன் அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

மேலும் இது போல தகவலுக்கு Astrologyinformation7.com  என்ற எங்கள் வலைத்தளத்தை Subscribe செய்து கொள்ளவும்.

 

Rating: 4.5 out of 5.
Read more: ஒரே நட்சத்திரக்காரர்ககள் திருமணம் செய்யலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

predict your life before and succeed it by divine.

This Post Has One Comment

Leave a Reply