ஏழ்மையில் இருந்து விடுபட ..அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட.. ஹோரைகள் கூறும் ரகசிய வழி… which horai is good to repay loan,job,education,travel…

horai timeline

ஏழ்மையில் இருந்து விடுபட ..அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட.. ஹோரைகள் கூறும் ரகசிய வழி… which horai is good to repay loan,job,education,travel…

which horai is good for job

“ஹோரை அறிந்து செயலை தொடங்குபவனை எவராலும் ஜெயிக்க முடியாது” என்பது சித்தர்களின் கூற்று. தீராத கடன் பிரச்னையும் தீர்த்து சுபிட்சம் நிறைந்த வாழ்கை வாழ நாம் அனைவரும் ஹோரை ரகசியத்தை தெரிந்து கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தை நோக்கி செல்ல கட்டாயம் அனைவரும் படிக்கச் வேண்டிய பதிவு இது. சித்தர் கூறிய கூற்று மனித வாழ்வில் எத்தகைய முக்கியதுவம் வாய்ந்தது என இந்தவார தொகுப்பில் இந்த பதிவின் மூலம் நீங்கள்  காணலாம்.

வாசகர்கள் அனைவருக்கும் கோடான கோடி வணக்கங்கள். எங்கள் வலைத்தளமான astrologyinformation7.comக்கு நீங்கள் தந்து கொண்டிருக்கும் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் கடிதங்கள், குறுஞ்செய்திகள் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்றோம். மிக்க மகிழ்ச்சி. எங்களின் ஊக்கத்திற்கு உங்கள் ஆதரவே காரணம் ஆகும். வாருங்கள் தலைப்பிற்கு செல்வோம்.

ஹோரை என்றால் என்ன? – What is horai ?

astrologyinformation7.com

ஒரு கிரஹத்திற்கும் மற்றொரு கிரஹத்திற்கும் நட்பு மற்றும் பகை என இரண்டும் உண்டு. அதன் அடிப்படையில் நாம் நம் வாழ்கையில் தொடங்கும் காரியங்களும் நல்ல பலன் தர கூடியதாக அமையும் காலமானது சுப ஹோரை என்றும், அசுப பலன் கொடுக்கும் ஹோரையானதை விஷம் என்றும் கூறுகின்றோம்.

ஹோரை நான் ஏன் பார்க்க வேண்டும்?

Horai Importance in tamil

உங்கள் எதிர்காலம் என்பது எவரும் அறியாததே. வாழ்கை என்பது ஒரு வட்டம் என கூறும் கூற்றிற்கு ஏற்ப ஒரு மனிதனின்  வாழ்வில் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரம் மாறி மாறி வரும். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் வாழ்க்கையில் நாம் அனைவரும் வெற்றி தோல்வி என இரண்டையும் சந்திக்கின்றோம்இதில் வெற்றியை மட்டும் நீங்கள் தொடர்ந்து கொண்டாட வேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் ஹோரை அறிந்து செயல்பட வேண்டும்.

horai secret
horai should know for luckiest success

   உதாரணமாக உங்கள் வாழ்வில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பல முறை தோல்வியனை கண்டு இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்யும் அதே தொழிலை அல்லது முயற்சிகளை குறிப்பிட்ட ஒரு சிலர்..முதல் முயற்சியிலேயே  வெற்றியினை கண்டு புகழின் உச்சத்தினை அடைகின்றனர்.

 இதனால் நம் மனதினில் நாம் என்ன தான் கடுமையாக உழைத்தாலும் அவரை போல் பெயரும், புகழும் அடைய முடியவில்லையே என பலரும் வருந்துகின்றோம். இங்கே தவறை மட்டுமே நாம் சரி செய்கின்றோமே தவிர எந்த ஒரு புது முயற்சிகளை தொடங்கும் முன் நேரத்தையும் அதன் ஹோரையும் கணக்கிடுவதில்லை. இதனாலேயே நம் வெற்றிக்கு அருகில் இருப்பினும் அதிர்ஷ்டம் கைகொடுக்காமல் போகின்றது.

ஹோரை பற்றிய விரிவான விளக்கம்:-

Horai time chart (Horai Detail) :-

ஹோரை என்பது நேரத்தை குறிப்பிடப்படுவது. அவை க்ரிஹ  அமைப்பை கொண்டவை ஆகும். அதாவுது ஜோதிட பஞ்சாங்க சாஸ்திரத்தில் ஒவ்வொரு ஹோரைக்கும் ஒரு மணிநேரம் கொண்டுள்ளதாக  குறிப்பிடபட்டுள்ளன. இவை ஒவ்வொரு நாள் விடியலிலும் ஹோரை மாற்றங்களுடன் நீல் வட்டப்படி அமைகின்றன. விளக்கி சொல்ல வேண்டும்  என்றால் நாட்களின் தொடக்கத்தில் ஒன்பது நவகிரஹங்களில் ராகு கேதுவை தவிர அந்த அந்த  கிழமைகள் அதன் அதிபதியுடன் தொடங்கும்.

astrologyinformation7.com

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஞாயிற்று கிழமைகளில் சூரிய  ஹோரை தொடங்கும், திங்கட்கிழமை சந்திர ஹோரை கொண்டும், செவ்வாய் கிழமை காலை செவ்வாய் ஹோரை கொண்டும், புதன் கிழமை அன்று புதன் ஹோரை தொடக்கத்திலும், வியாழக்கிழமை குரு ஹோரை, வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரை மற்றும் சனிக்கிழமை சனி ஹோரை கொண்டும் நாட்கள் தொடங்குகின்றன. மேலும் ராகுவிற்கு ராகு காலம் என்றும்  , கேதுவிற்கு  எமகண்டம்  என்றும்  பஞ்சாங்கத்தில் காலங்களை பிரிக்கின்றனர்.

இனி எந்தெந்த ஹோரைகளில் எத்தகைய காரியங்களை செய்யலாம் என பார்ப்போம்.

சூரிய ஓரை – soorya horai

Which horai is good for job?

சூரிய ஹோரை என்பது ராஜ ஹோரை என்று கூறுவர்.உத்தியோகத்தில் சேர, வியாபாரம் செய்ய ஒருவருடைய தயவைப் பெற, புது சாசனங்கள் எழுத ஏற்றது. அரசாங்க அலுவலகங்களில் சலுகைகள் பெற விண்ணப்பித்தால், அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்தால் வெற்றி கிடைக்கும். அல்லது அரசாங்கம் சம்மந்தப்பட்ட காரியங்களை சூரிய ஹோரையில் தொடங்குங்கள். தவிர மற்ற சுப நிகழ்ச்சிகளை சூரிய ஹோரையில் தொடங்க வேண்டாம்.

சந்திர ஓரை – chandra horai benefits

valaikaapu function horai

வியாபாரம் தொடங்க, பெண்களைப் பற்றிப் பேச, பெண்களுக்கு சீமந்தம் செய்ய, புனித தீர்த்த யாத்திரை செய்ய, குழந்தைக்கு முதல் அன்னப்ராசதம் ஊட்ட , மொட்டை போடுதல்காத்து குத்துதல், பராயாணம் செய்ய, கப்பல் கடல் யாத்திரை போக. தாய் வழியினரைக் காண உகந்த ஹோரை வளர்பிறை சந்திர ஹோரை ஆகும். ஆனால் தேய்பிறை காலத்தில் சந்திர ஓரை துன்பமே தரும். எனவே தேய்பிறை சந்திர ஹோரையினை தவிர்க்க வேண்டும்.

செவ்வாய் ஓரை –sevvai horai

which horai is good to repay loan?

which horai is best to repay loan

 தீராக்கடனையும் தீர்க்கும் செவ்வாய் ஹோரை. கடன் அடைக்க, வங்கியின் தவணை செலுத்த, கந்து வட்டி சந்தா செலுத்த, அடகு வைத்த நகையினை மீட்க போன்ற கடன் பிரச்சனை தீர சிறந்த ஹோரை செவ்வாய் ஹோரை ஆகும். மேலும் முருகப் பெருமான் வழிபாடு செய்யலாம். அதை தவிர சுப காரியங்களுக்கு செவ்வாய் ஹோரை ஆனது கொடியது,எந்த புது காரியத்திலும் இறங்கக் கூடாது. மேலும் வறுமையின்றி வாழ மாந்திக்கான பரிஹாரங்கள் https://astrologyinformation7.com/வாழ்க்கையில்-கஷ்டம்-மட்ட/

புதன் ஓரை – Budhan Horai

Which horai is good for education?

when to start education

கல்வி மற்றும் எழுத்து வேலைகளைச் துவங்க, தேர்வு எழுத, ஜாதகம் எழுத, ஜோதிட விஞ்ஞானம் ஆராய்ச்சியைத் துவங்கலாம். பயணங்கள் செய்யலாம். மேலும் அம்மா வர்க்கத்தாரோடு சொத்து அல்லது சுபகாரிய பேச்சினை உரையாட சிறந்தது. புதன் ஹோரை என்பது சுப ஹோரையே ஆகும். எனவே அணைத்து விதமான சுபகாரியங்களுக்கும் உகந்த ஹோரை புதன் ஹோரை ஆகும்.

குரு ஓரை – Guru Horai

Which is good for buying gold

which horai is good to buy gold
which horai isgood to buy gold jewel

குரு பார்க்க கோடி நன்மை என்பர். சுபிட்சம் நிறைந்த ஹோரை என்றால் அது குரு ஹோரை ஆகும். அனைத்து சுப காரியங்களுக்கும் ஏற்றது. நகை வியாபாரம் செய்ய, விவசாய லாபம் அடைய, உத்தியோகம் பணம் சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்தும் செய்ய ஏற்றது. பதவிஏற்க, யாத்திரை செய்யவும் உகந்த ஹோரை குரு ஹோரை ஆகும்.

சுக்கிர ஓரைsukra horai

Which horai is good for wealthy life

when to repay loan sukra horai

விளக்கு ஏற்ற,பெண் பார்க்க, இறை வழிபாடு செய்ய , விருந்துண்ண, வாகனம் வாங்க, திருமணம் ,நிச்சியதார்தம் , சுப நிகழ்வு பேச, சுப நிகழ்ச்சிகள் நடத்த,புது ஆபரணம் வாங்க,விவசாயம் செய்ய,தொழில் வர்த்தகம் தொடங்க போன்ற எல்லா சுபகாரியங்களையும் இவ்வோரையில் துணிந்து செய்யலாம். தீராத கடன் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் சுக்ர ஹோரையில் மஹாலட்சுமி க்கு விளக்கேற்றி மனம் உருகி வேண்டினாள் நிச்சயம் கடன் பிரச்சனை தீர்ந்து செல்வந்தராக வாழ்வர். வாழ்க்கை சுபிட்சம் அடையும். 

சனி ஓரை– sani horai

sani horai

சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. பழைய பொருட்கள் வாங்கக்கூடாது. சனி ஹோரையில் யாசகம் கேட்பவரிடம் இல்லை என சொல்லாமல் உங்களால் முடிந்ததை தர்மம் செய்யுங்கள். சனி ஹோரையில் தானம் தர்மம் செய்யலாம். ஊனமுற்றோருக்கு உதவுங்கள். பழைய கணக்குகளை முடிக்கலாம், பழைய பாக்கி வசூல் செய்தல் , பூர்வ ஜென்மம் பாவம் போக்க பரிஹாரம் செய்ய சனி ஹோரை உகந்தது ஆகும். மரம் கன்று , செடி நடவு செய்தல் போன்ற பொது சேவை செய்ய சிறந்த ஹோரை சனி ஹோரை ஆகும்.

ஹோரையை எப்படி அறிவது ?

how to know horai timings ?

ஹோரை அறிவது என்பது ரகசியம் அல்ல. மிகவும் எளிமையாக நமது வீடு நாள்காட்டியின் பின்புறம் பார்த்தாலே அதன் கால அட்டவணை நேரம் மற்றும் ஹோரை நடப்பு தெளிவாக கொடுத்திருப்பார்கள். இவற்றை அறியாமல் வெறும் நல்ல நேரத்தை மட்டும் நாம் பார்த்து செயலை தொடங்குவதினால் தான் நமது செயலுக்கான அதிர்ஷ்டம் நமக்கு கிட்டாமல் போகின்றன.

முன்னரே கூறியது போல கிரஹ ஹோரை என்பது நீல் வட்டம்போல் தொடர்ச்சிகொண்டு கால அட்டவணையில் அமைகின்றன. இவற்றை நீங்கள் உங்கள் வீட்டு நாள்காட்டியின் பின்புறம் அட்டையில் தெளிவாக பார்க்கலாம். இதில் சுப ஹோரையான சுக்கிர ஹோரை, புதன் ஹோரை,குரு ஹோரை இந்த மூன்றும் அதிஉத்தமம் வாய்ந்த நல்ல ஹோரைகள் ஆகும்.

இவற்றை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால்  6-1-8-3 என்ற என் வரிசையை தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரை ஆரமித்தால் மீண்டும் அந்த ஹோரை மதியம் 1 மணி இரவு 8 மணி மற்றும் அதிகாலை 3 மணிக்கு வரும். இந்த ஹோரை சுற்று ஒவ்வொரு நாள் விடியலிழும் ஹோரைகள் வேறுபட்டாலும் நேரங்கள் வேறுபடாது. இவற்றை உங்கள் நாள்காட்டியை நீங்களே கவனித்து உறுதி செய்து கொள்ளலாம்.

இதுவே ஹோரை அறிந்து செயல்படுபவனை எவராலும் வெல்ல முடியாது என்ற சித்தர் கூற்றின் அர்த்தம் ஆகும். ஆகையால் இந்த தொகுப்பின் மூலம் தெளிவாக ஹோரை நேரம் மற்றும் பலன்கள் அனைத்தும் விளக்கி உள்ளோம் என நம்புகின்றோம்.

நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம் சந்திக்கின்றோம். தகவலை உடனுக்குடன் பெற  astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp குழுவில் சேரவும்.

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

To share with your friends please follow the links…

Rating: 5 out of 5.

read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

Leave a Reply