புதிய வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம்
On which month and Tithis the house foundation can laid?
வீடு கட்டும் பணியினில் முதல் வேலையானது வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டுவது ஆகும். அது நல்ல நேரம் மற்றும் நல்ல திதியினில் ஆரமித்தால் மட்டுமே வீடு கட்டும் வேலையினில் எந்த இடையூறும் இல்லாமல் நம்மால் சிறப்பாக கட்டி முடிக்கப்படும்.
அவ்வாறு இருக்க சிலர் வாஸ்து சாஸ்திரம் மேல் நம்பிக்கை இல்லாமல் அவசர அவசரமாக எந்த கிழமையும், திதியும், நல்ல நேரம் போன்ற எதுவுமே பார்க்காமல் புதிய வீடு கட்டும் வேலையினை ஆரமிப்பார்கள். பின்னர் வீடு கட்டி முடிப்பதற்குள் பல இடையூறுகள், உடல் நிலை கோளாறு போன்றவை குடும்ப தலைவனுக்கு ஏற்பட்டு வீணாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மண் தானே தோண்டுகின்றோம் என்ற அலட்சியபோக்கு இல்லாமல் இது வீடு கட்டும் வேலையின் முதல் படி ஆகும் என்று அனைவரும் உணர வேண்டும். ஆகவே அவற்றை கட்டாயம் நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்க வேண்டும்.
எனவே நம் முன்னோர்களின் அனுபவம் வாய்ந்த வாஸ்து முறையில் நல்ல நேரம் கொண்டு வீடு கட்டும் வேலையினை ஆரம்பித்தாள் அனைத்துமே சுபமாகவே அமையும் என்பது நிதர்சனமான உண்மை.
முதலில் எந்த மாதங்களில் வீடு கட்ட கூடாது என்பதை பார்ப்போம்
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி என்ற இந்த மாதங்களில் வீடு கட்டும் வேலை எதுவும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் வீட்டு எஜமானனாவது, எஜமானியாவது மரணமடையவோ அல்லது உடல்நிலை கோளாறு போன்றவை ஏற்பட்டு மருத்துவ செலவு செய்ய நேரிடலாம்.
மேற்கண்ட மாதங்களிலும், ஆடி மாத்திலும் வாஸ்து நிர்மாணம், கிரகப்பிரவேசம் செய்தால் புது வீட்டில் குடியேறிய பின்னர் வறுமை ஏற்பட்டு தரித்திரம் உண்டாகலாம்.
வீட்டின் அஸ்திவாரம் தோண்ட சில சிறந்த தமிழ் மாதங்கள், சிறந்த திதிகள் மற்றும் சிறந்த நல்ல நாட்கள் பஞ்சாங்க வாக்கியப்படி வாஸ்து முறைக்கு ஏற்ற படி இங்கே கொடுத்துள்ளோம்.
தெளிவாக படித்து பார்த்து அதில் எந்த மாதம் உங்களுக்கு ஏற்ற மாதமோ அதில் அஸ்திவாரம் தோண்டினால் எந்த இடையூறும் இல்லாமல் உங்களின் கனவு இல்லத்தினை நீங்கள் நினைத்தபடி கட்டி முடிக்கலாம்.
வீட்டிற்கு அடி மனை கோல அஸ்திவாரம் போட ஏற்ற சிறந்த மாதங்கள்
சித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி, தை மாதங்களில் குரு, சுக்கிரன் இருவரும் இருளில் அடையாத மாதங்கள் ஆகும். அவர்கள் பிரகாசமாக இருக்கும்பொழுது இம்மாதங்களில் மனை கோலமிடுவது சிறந்த பலன் ஆகும்.
வீட்டிற்கு அஸ்திவாரம் போட ஏற்ற சிறந்த நட்சத்திரங்கள்
மேற்கொண்ட மாதங்களில் வருகின்ற அசுவினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புணர்வசு, மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், ரேவதி என்ற நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்ந்து எடுக்கவும்.
வீட்டிற்கு அஸ்திவாரம் போட ஏற்ற சிறந்த திதிகள் மற்றும் கிழமைகள்
பௌர்ணமி, அமாவாசை, பிரதமை தவிர மற்ற திதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்து எடுத்து கொள்ளவும்.
மேற்கொண்ட தேர்ந்துஎடுக்கப்பட்ட நல்ல மாதம் , நல்ல நட்சத்திரம் நல்ல திதி வருகின்ற திங்கள், புதன், வியாழன், வெள்ளி அல்லது சனி கிழமைகளில் ஏதேனும் ஒரு நல்ல நாளில் அடிமனை கோலினால் மிகுந்த நன்மையுண்டாகும்.
இவ்வாறு மாதம், திதி, நேரம், நட்சத்திரம் ஒன்று சேர்ந்து வருகின்ற கிழமைகளில் புதன் கிழமை வந்தால் அந்நாளை அவசியம் தவற விடாதீர்கள். புதிய வீடு கட்டும் வேலையினை அந்நாளில் ஆரமித்தால் மேலும் சிறப்பாகும்.
மேலும் இது போன்ற தகவல்களுக்கு Astrologyinformation7 Subscribe செய்து கொள்ளவும்.
சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.
please follow the links to share it with your friends and family…
Read more: எந்த மாதம் திதி கிழமைகளில் வீட்டிற்கு அஸ்திவாரம் போடலாம்feedback form:-
predict your life before and succeed it by divine.
Leave a Reply