ஈசான்ய மூலையில் சமையல் அறை அமைக்கலாமா?Kitchen Vastu for NorthEast Direction – வடகிழக்கு சமையலறை வாஸ்து

kitchen vastu

ஈசான்ய மூலையில் சமையல் அறை அமைக்கலாமா?Kitchen Vastu for NorthEast Direction – வடகிழக்கு சமையலறை வாஸ்து

ஈசான்ய மூலையில் சமையல் அறை அமைக்கலாமா?

சமையல் அறைகளை கட்டுவதற்கான  வாஸ்து குறிப்பினை  நான்கு திசைகளில் எங்கு அமைக்க வேண்டும், எங்கு அமைக்க கூடாது ?. குறிப்பாக வடகிழக்கு திசை சமையலறை வாஸ்து மற்றும் அதன் முழு விளக்கம் கொண்ட பதிவு ஆகும்

kitchen vastu

வடகிழக்கு சமையலறை வாஸ்து-ஒரு வீடு என்று இருந்தால் படுக்கை அறை , ஓய்வு அறை , போர்டிகோ போன்ற அறைகள் கூட இல்லாமல் இருக்கும். ஆனால் நிச்சயம் சமையல் அறை இல்லாமல் வீடு என்று ஒன்று இருக்காது. ஒரு வேளை வீட்டில் சமையலுக்கு என்று தனி அறை ஒதுக்க இடம் இல்லாவிட்டாலும்; நிச்சயம் சமையல் மேடை போன்று ஒரு திட்டினை அமைத்து சமையல் செய்வார்கள். ஏனெனில் “உணவே மருந்து” என்று தொன்று தொட்டு தமிழர்களின் மரபாக இருப்பது சமையல் கருவூலம் ஆகும்.

அப்படி முக்கியத்துவம் வாய்ந்த சமையல் அறையினை பலரும் வசதி மற்றும் அழகுக்காக வாஸ்து முறை படி கட்ட தவறி விடுகின்றனர். இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர்.

எனவே சமையல் அறைகளை கட்டுவதற்கான  வாஸ்து குறிப்பினை  நான்கு திசைகளில் எங்கு அமைக்க வேண்டும், எங்கு அமைக்க கூடாது . மற்றும் அதன் பலன்களை தனி தனி பதிவாக வாசகர்களுக்காக கொடுக்க உள்ளோம்.

kitchen vastu

Kitchen Vastu for NorthEast Direction – வடகிழக்கு சமையலறை வாஸ்துநீண்ட நாட்களாக தொடர்ந்து இந்த சமையல் அறையின் வாஸ்து சந்தேகத்தினை பற்றிய  பதிவினை கேட்கும் அன்பு வாசகர்களுக்காக விரிவான 4 பதிவாக கொடுக்க உள்ளோம். உங்களுக்கான பதிவினை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான லிங்க் தொடரவும்.

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்றைய தலைப்பு ஈசானிய மூலையில் சமையல் அறை அமைக்கலாமா?  அமைக்க கூடாதா ?. வாருங்கள் பதிவிற்கு செல்வோம்.

ஈசானிய மூலை என்றால் என்ன?

முதலில் ஈசானியம் என்றால் என்ன என நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஈசானியம் என்பது வடகிழக்கு மூலை ஆகும். இந்த திசையில் தான் எம்பெருமான் ஈசன் தியான கோலத்தில் அமர்ந்து தவம் புரியும் இடம் ஆகும்.

lord shiva images

ஈசானிய மூலையில் சமையல் அறை கட்டலாமா ? வடகிழக்கு சமையலறை வாஸ்து

ஈசானிய மூலையில் சமையல் அறையினை அமைக்கலாமா என கேட்டால் வாஸ்து சாஸ்திரப்படி எந்த நிலையிலும் வீட்டின் வடகிழக்கான ஈசானியத்தில் சமையல் கூடாரங்களை அமைக்க கூடாது என்பதே நிதர்சனம் வாய்ந்த உண்மை ஆகும்.

north east kitchen vastu

ஏனெனில் சமையல் அறை என்பது அடுப்பங்கரை ஆகும். அடுப்பு என்பது நெருப்பினை குறிக்கும். இதனால் சமையல் அறை என்பது செவ்வாய்க்கு உரிய இடம் ஆகும். மேலும் அக்னிகாரகன் குடி இருக்கும் இடம் ஆகும்.

நான் ஏற்கனவே கூறியது போல ஈசானியம் ஜலத்திற்கு உரிய இடம் ஆகும். ஆகையால் நீரும் நெருப்பும் இணைவது வீட்டில் மிக பெரிய பாதிப்பு உண்டாகும். எனவே கண்டிப்பாக வடகிழக்கு ஈசானிய மூலையில் சமையல் அறையினை கட்டக்கூடாது என்பதை நினைவில் வைக்கவும். ஒருவேளை சமையல் அறைக்கு பதில் சமையல் திட்டு அல்லது மேடை போன்று அமைத்து சமைக்கலாம் என்று கேட்டால் அதுவும் நிச்சயம் கூடாது.

ஏன் ஈசானிய மூலையில் சமையல் அறை அமைக்க கூடாது?

north east kitchen

–> நான் முன்னரே கூறியது போலவே நீரும் நெருப்பும் சேராது. 

–>மேலும் ஈசானியத்தில் திறந்த வெளியாக நடை அல்லது வாசல்கள் போன்ற வெட்ட வெளிச்சமாக காலி இடமாகவே இருக்க வேண்டும். அங்கு அறைகள் அமைத்து பாரத்தினை சுமத்துதல் என்பது பெரும் கடன் தொல்லைகளுக்கு குடும்ப தலைவர் ஆளாவார். 

kitchen vastu
northeast kitchen vastu

–>இதை அறியாமல் ஈசானியத்தில் சமையல் அறையினை அமைத்தால் அங்கு அசைவம் சமைக்க நேரிடலாம். சமையல் கழிவுகள், சாப்பிடும் கழிவுகள், குப்பை கழிவுகள் வைப்பது,சமையல் பாத்திரங்கள், எச்சில் தட்டுகள் போன்றவற்றை சிங்க் தொட்டி என்ற பாத்திரம் கழுவும் இடத்தினில் வைப்போம்.

sink vastu

–>இதனால் அசுத்தம் அவ்வப்பொழுது ஏற்படும். ஆன்மிகம் குடியிருக்கும் மூலையில் சமையல் அறையினை அமைத்தால் எப்பொழுதும் சுத்தமாக வைத்தல் என்பது நிச்சயம் ஆகாது. இதன் காரணமாகவும் வாஸ்து சாஸ்திரத்தில் ஈசானியத்தில் சமையல் அறையினை கட்டுதல் என்பது அறவே கூடாது என்பது விதி ஆகும்.

ஈசானிய மூலையில் சமையல் அறை இருந்தால் என்ன விளைவுகள் உண்டாகும் ?

நன்றாக கவனியுங்கள். உங்கள் வீட்டிலோ அல்லது உங்களின் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் வீட்டிலோ ஈசானியாதில் சமையலறை இருந்தால் அந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என ஆகும். அந்த வீட்டில் கட்டாயம் கீழே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் இருக்கும்.

money earning secret

முதலில் வருமானம் பாதிப்பு உண்டாகும். வருமானம் இருந்தாலும் சேமிப்பு என்பது அறவே இருக்காது. மாறாக கடன் சுமைக்கு குடும்பம் ஆளாகும். மேலும் ஈசானிய அடுப்பங்கரை உள்ள வீட்டில் ஆண்கள் குடும்பத்திற்கு உபயோகமற்றவர்களாக இருப்பர்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து வார்த்தை போர் முற்றும். பிள்ளைகளும் பெற்றவர்களின் பேச்சிற்கு மதிப்பளிக்காமல் கூடா சேர்க்கை சேர்ந்து தவறான வழியில் செல்வர். சில இடத்தில் ஆண் சந்ததி கூட இல்லாமல் போகலாம்.

bad habits

 கடைசியில் பொன்னும், பொருளும் விற்கும் நிலைமைக்கு உள்ளாகி வறுமையில் வாடுவார்கள். எனவே தயவு செய்து யாரும் வீட்டின் எந்த திசையிலும்  ஈசானியத்தில் மட்டும்  சமையலறையை அமைக்காதீர்கள். அது குடும்பத்திற்கு சர்வ   நாசத்திற்கு தாமே பாதை அமைத்துக் கொள்வதாகும்.

ஏனெனில் ஈசானியம் என்பது நீர் ஆகும். அது நெருப்பிற்கு சிறிதேனும் பயன்படாது. வாழ்க்கைக்கும் அப்படியே. ஒரு வேளை நீங்கள் குடி இருக்கும் வீட்டில் ஈசானியத்தில் சமையல் அறை இருந்தால் அதை சரி செய்து கொள்ளுங்கள். வாடகை வீட்டில் உள்ளோர் வீட்டினை மாற்றி  கொள்ளுங்கள். கட்டாயம் வாஸ்துவை பின்பற்றுங்கள். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நம்புங்கள் . தர்ம சத்தியம்.

நன்றி!! மீண்டும் வேற ஒரு நல்ல தலைப்புடன் அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.

மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் கிடைக்க பெற Astrology Information7 Tamil என்ற Whatsapp channel மூலம் பின்தொடரவும் அல்லது Astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை மின்னஞ்சல் (email) மூலம் subscribe செய்து கொள்ளுங்கள்.

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

மேலும் இது போன்ற  தகவல்களுக்கு  Astrologyinformation7.com வலைதளத்தை Subscribe

செய்து கொள்ளவும்.

சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.

To share with your friends please follow the links

3 responses to “ஈசான்ய மூலையில் சமையல் அறை அமைக்கலாமா?Kitchen Vastu for NorthEast Direction – வடகிழக்கு சமையலறை வாஸ்து”

  1. […] ஈசான்ய மூலையில் சமையல் அறை அமைக்கலாமா?Kitchen Vastu for NorthEast Direction – வடகிழக்கு சமையலறை வாஸ்து https://astrologyinformation7.com/ஈசான்ய-மூலையில்-சமையல்-அ… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

This Post Has 3 Comments

Leave a Reply