கட்டாயம் படியுங்கள்.. must read..
Vastu Mistakes in Bathroom constructions..

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். எங்கள் Astrologyinformation7 வலைத்தளத்திற்கு நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவு எங்களை மகிழ்விக்கின்றது. உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் மின் அஞ்சல்கள், வாழ்த்துக்கள் அனைத்தும் கிடைக்கப் பெற்றோம். மிக்க மகிழ்ச்சி. இன்றைய தலைப்பு குளியல் அறை வாஸ்து அமைப்பு மற்றும் அதன் கோளறுகளை எவ்வாறு சரி செய்வது என பார்ப்போம்.

தனவரவை குறைக்கும் குளியல் அறை அமைப்புகள் :-
ஒரு வீடு என்று ஒன்று இருந்தால் படுக்கை அறை, சமையல் அறை கூட இல்லாமல் இருக்கும். ஆனால் குளியல் அறை இல்லாமல் கட்டாயம் இருக்காது.ஏனெனில் அது மனிதர்களுக்கு அன்றாட வாழ்வின் இயற்கை உபாதைகளை கழிக்கும் இடமாகின்றன.

சிலர் மலஜலங்களை கழிக்கும் இடம்தானே என்று அலட்சியப்போக்கினால் வாஸ்துவை பின்பற்றாமல் கட்டிவிடுகின்றனர். பின் அவதிக்கு உள்ளாகின்றனர். அதிலும் முக்கியமாக வீட்டிற்கு வெளியேமதிற்சுவருடன் (House compound wall) ஒட்டி கழிவறைகளை கட்டுகின்றனர். இதில் தான் பெரும்பாலும் தவறுகள் ஏற்படுகின்றன.
இதனால் வாஸ்து கோளாறு ஏற்பட்டு தனவரவு குறைந்து கஷ்டத்திற்குள்ளாகின்றது. இதனை எவ்வாறு சரி செய்வோம் என வீட்டின் வாசல் திசைகளுடன் பார்ப்போம்.
கிழக்கு முகவாசல் வீட்டிற்கு குளியல் அறை அமைக்கும் முறை:-

கிழக்கு முக வாசல் கொண்ட வீட்டிற்கு போர்ட்டிகோ போன்ற வீட்டின் முன்பக்க வெளியில் குளியல் அறை அமைக்க வண்டும் என்றால்..
a.)→ வீட்டிற்கு கிழக்கு பக்கம்..உங்கள் வீட்டின் சுவரை தொடாமல் ஆக்கினேயத்தில் அமைக்க வேண்டும்.
→ அவ்வாறு கட்டும்போது வீட்டிற்கும், குளியல் அறைக்கும் இடையில் இருக்கும் காலியிடத்தை விட, குளியலறைக்கும். கிழக்கு பக்கம் உள்ள மதிற்சுவருக்கும் இடையில் இருக்கம் காலி இடம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

b.) → அதேபோல், வீட்டிற்கு மேற்கில் காலியிடம் இருந்தால் அங்கு குளியல் அறை அமைக்க வேண்டும் என்றால் மேற்கு பக்கம் மதிற்சுவரை ஒட்டாமல் குறைந்தது இரண்டு அல்லது மூன்று அடி விட்டு கிழக்கு பக்கம் உங்கள் வீட்டை தொடாமல் தாழ்வாரம் இறக்கி அதில் குளியலறையை அமைத்துக் கட்டலாம்.
→ஆனால் குளியலறைக்கும், மேற்கு மதிற்சுவருக்கும் இடையில் உள்ள காலிவிடமானது வீட்டிற்கும் குளியவறைக்கும் இடையில் இருக்கும் காலியிடத்தை விட குறைவாகஇருக்க வேண்டும்.
→அதே சமயம் மேற்கு பக்கம் குளியலறைஅமைக்கும் பொழுது தாழ்வார தரைமட்டம் வீட்டுத்தரை மட்டத்தை விட சற்று உயரம் இருக்க வேண்டும்.

→இந்த முறையானது தாழ்வார மேற் கூரையை சிமெண்ட் ஓடுகள் அல்லது தகர ஷீட்கள் போடுபவர்களுக்கு பொருந்தாது.
→ஒரு வேளை ஆர்.சி.சி. போன்ற கான்கிரிட் ஸ்லாப் போட்டால் வீட்டு மேற்கூரையுடன் சமமாக போட வேண்டும் அல்லது உயர்த்த வேண்டும். ஆனால் குறைக்கக் கூடாது.
வடக்கு முக வாசல் வீட்டிற்கு குளியல் அறை அமைக்கும் முறை:-

→வடக்குமுக வாசல் வீட்டிற்கு கிழக்கு வெளிநடையில் குளியல் அறையை அமைக்க வேண்டும் என்றால் கிழக்கு ஆக்கிநேயத்தில் அமைத்துக் கொள்ளலாம்.
→அவ்வாரு அமைக்கும்போது, கிழக்குமுக வாசல் வீட்டிற்கு சொன்னபடியே செய்யவேண்டும்.
→அப்படி இல்லையென்றால் வீட்டு முன்புறம் வெளிநடையில் குளியல் அறையை கட்ட நினைப்பவர்கள் வடக்கு வாயவியத்தில் உங்கள் வீட்டைத் தொடாமல் குளியல் அறையை அமைக்கலாம்.

→உங்கள் பிரதான வீட்டிற்கும், குளியலறைக்கும் இடையிலுள்ள வெற்றிடத்தை விட, குளியலறைக்கும் மதிற்சுவருக்கும் இடையிலுள்ள இடம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
→தெற்கில் இடமிருந்து அங்கு குளியல் அறை அமைக்க வேண்டும் என்றால் தெற்கு மதிற்சுவர்மீதிருந்து வடக்கிற்கு உங்கள் வீட்டைத் தொடாமல் தாழ்வாரம் இறக்கி அதில் குளியல் அறையை அமைக்க வேண்டும்.
தெற்கு முக வாசல் வீட்டிற்கு குளியல் அறை அமைக்கும் முறை:-

→தெற்குமுக வீட்டிற்கு முன்புறம் கிழக்கு ஆக்கிநேயத்தில் கட்டிக் கொள்ளலாம்.
→அதே போல் தெற்குமுக வீட்டிற்கு பின்புறம் வீட்டு வெளிநடையில் அல்லது காலியிடத்தில் கட்ட நினைப்பவர்கள் வடக்கு வாயவியத்தில் உங்கள் வீட்டைத் தொடாமல் குளியல் அறையை அமைக்கலாம்.
→ அதற்கு மேலே குறிப்புட்டுள்ள வடக்குமுக வாசல் வீட்டிற்குக் கூறிய முறையைப் பின்பற்ற வேண்டும்.

→அதாவது உங்கள் பிரதான வீட்டிற்கும், குளியலறைக்கும் இடையிலுள்ள வெற்றிடத்தை விட, குளியலறைக்கும் மதிற்சுவருக்கும் இடையிலுள்ள இடம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
→இதே போன்று கிழக்கு ஆக்கிநேயத்திலும் மேலே கூறிய கிழக்கு வாசல் குறிப்பினை பின்பற்றி கட்டிக் கொள்ளுங்கள்.
மேற்கு முகவாசல் வீட்டிற்கு குளியல் அறைஅமைக்கும் முறை:-

மேற்குமுக வாசல் வீட்டிற்கு பின்புறம் வீட்டு வெளியிடையில் குளியலறையை அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கிழக்கு ஆக்கிநேயத்தில் கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டுபவர்கள்.,
→கிழக்குமுக வாசல் வீட்டிற்கு குறிப்பிட்ட முறையையே பின்பற்றி கட்ட வேண்டும்.

→இதுவே வீட்டிற்கு வடக்கு பக்கம் குளியல் அறைகளை கட்ட நினைத்தால் வடக்கு வாயவியத்தில் கட்டிக்கொள்ளுங்கள்.
→அதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வடக்கு முக வாசல் முறையினை பின்பற்றி கட்டி கொள்ளுங்கள்.
படுக்கை அறையையொட்டி குளியல் அறையின் குறிப்புகள்
(அட்டாச்ட் பாத்ரூம் குறிப்புகள்)
→வீடு கட்டுபவர்கள் சிலர் குளியல் அறையை வீட்டிலேயே அமைத்துக் கொள்வார்கள். அவ்வாறு கட்டுபவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு அறைகளில் குளியல் அறையினை அமைக்க வேண்டும்.

→அதாவது தெற்கு மேற்கு படுக்கை அறைக்கு அட்டாச்ட் பாத்ரூம் என்பது படுக்கை அறைக்குக் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ அமைக்க வேண்டும்.
→ அதற்கு அடுத்தபடியாக வடக்கு மேற்கு கொண்ட வாயவிய படுக்கை அறைக்கு அட்டாச்ட் பாத்ரூம் தெற்கில் உண்டாக்க வேண்டும்.
→அதுவே தெற்கு கிழக்கு என்ற ஆக்கினேய படுக்கை அறைக்கு மேற்கில் உண்டாக்க வேண்டும்.

இதுவே குளியல் அறை அமைக்கும் வாஸ்து பலன் ஆகும். இவற்றை எல்லாம் மூடநம்பிக்கை என்ற பெயரில் தவறான முறையில் பலரும் குளியல் அறை-கழிவறைகளை கட்டி பெரும் தவறினை இழைக்கின்றனர். இதனால் தன வரவு குன்றி கடன் வாங்கும் நிலைக்கு அந்த வீட்டின் தலைவர்க்கு கஷ்டத்திற்கு ஆளாகுகின்றனர்.
எனவே இது போன்ற தவறெல்லாம் செய்யாமல் எப்படி வாஸ்து முறையுடன் கட்ட வேண்டும் என நம் முன்னோர்கள் கூறிய சாஸ்திரங்களை பின்பற்றுங்கள்.

இந்த பதிவின் மூலம் வெளிநடை பாத்ரூம் மற்றும் அட்டாச்ட் பாத்ரூம் இரண்டிற்கும் வாஸ்து முறைப்படி கட்டுவதன் அவசியம் மற்றும் வீட்டின் திசைக்கேற்ப எப்படி கட்டவேண்டும் என்று மிகவும் எளிமையாக புரியும்படி உங்கள் அனைவருக்கும் கொடுத்துள்ளோம் என நம்புகின்றோம்.
எனவே குளியல் மற்றும் கழிவறைகளை வாஸ்து சாஸ்திரம் பின்பற்றி கட்டுங்கள். தவறாக கட்டி இருந்தால் அதனை சரி செய்து கொள்ளுங்கள். அனைவரும் இறைவனின் அருள் பெற்று நலமோடும் வளமோடும் வாழுங்கள்.
நன்றி!! மீண்டும் வேற ஒரு நல்ல தலைப்புடன் அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.
மேலும் இது போன்ற தகவல்களுக்கு Astrologyinformation7 என்ற எங்கள் வலைத்தளத்தை மின்னஞ்சல் (email) மூலம் subscribe செய்து கொள்ளுங்கள்.
Also follow us on facebook to get notification on regular life updates.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நன்றி! வணக்கம்!
…மீண்டும் சந்திபோம்…
அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.
மேலும் இது போன்ற தகவல்களுக்கு Astrologyinformation7 Subscribe வலைதளத்தைசெய்து கொள்ளவும்.
சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.
To share with your friends please follow the links…

Predict Your Life Before And Succeed It by God Divine
Leave a Reply