திருமணத் தடை நீங்கும் சிறப்பு பெற்ற தலம் திருமருகல் இரத்தினகிரீசுவரர் திருக்கோவில்
பகுதி -3
Thirumarukal Rattinakrisuvarar Thirukovil is a special place where the ban on marriage is removed

MARRIAGE PARIHARAM TEMPLE-ஆயுள் கண்டம் நீங்க, திருமணத்தடை விலக, பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர, தீரா கடன் பிரச்சனை விலக மற்றும் குடும்ப ஒத்துமைக்கான ஸ்தலம் திருமருகல் மாணிக்கவண்ணர் இரத்தினகிரீசுவரர் திருக்கோவிலின் முழு விவரம்.
ஜாதகத்தில் ஆயுள் கண்டத்தில் இருந்தால் விஷக்கடி, விபத்து ,பேரிடரில் உயிர் இழப்பு போன்றவை ஏற்படலாம். அல்லது உடல் நலக்கோளாறாலும் பெரிதும் பாதிப்பு ஏற்படலாம். இவை அனைத்தும் பரிஹாரம் மற்றும் கோவில் வழிபாட்டின் மூலம் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
அந்த வகையில் நம் தாய் திருநாடான தமிழ்நாட்டில் ஆயுள் கண்டத்தில் இருந்து விடு பட வைக்கும் மிக சக்தி வாய்ந்த ஏழு திருக்கோவில்கள் உள்ளன . இவை பற்றி விரிவான விளக்கத்துடன் ஏற்கனவே முந்தைய பதிவில் சில கோவில்கள் கொடுத்துள்ளோம்.
அக்கோவில்கள் உங்கள் ஊரின் அருகாமையில் கூட இருக்கலாம். படிக்காதவர்கள் கீழே கொடுக்க பட்டிருக்கும் லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.
வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைய தலைப்பு
“மஹாலட்சுமி தவமிருந்த சிறப்புவாய்ந்த திருமருகல் இரத்தினகிரீசுவரர் திருக்கோவில்”

நம் தமிழ்நாட்டில் திருவாளப்புத்தூர் அருகே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது திருமருகல். இக்கோவில் விஷக்கடி போன்ற ஆயுள் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பாம்பு போன்ற விஷஜந்துகள் தீண்டாது என்பது ஐதீகம்.
மேலும் திருமணத்திற்கு வரன் தேடி திருமணம் கைகூட வில்லை என்றாலும் ஒரு முறை திருமருகல் மாணிக்கவண்ணர் திருக்கோவிலுக்கு சென்று வாருங்கள். இங்கு கோவில் மூலவராக மாணிக்கவண்ணர் (இரத்தினகிரீசுவரர்) ஆகவும்,
அம்பிகையோ வண்டுவார் குழலி (ஆமோதளநாயகி) ஆகவும் பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர். நிச்சயம் நல்ல வரனாக திருமணம் கைகூடும்.
இரத்தினகிரீசுவரர் திருக்கோவில் தல வரலாறு

இக்கோவிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். ஒரு சமயம், பக்தர்களின் முன் சிவபெருமான் தன் சுயரூபத்தில் மாணிக்கவண்ணமாக இங்கு காட்சி அளித்துள்ளதாகவும்.. இதனால், அவரை “மாணிக்கவண்ணர்” என்றும் நவ ரத்தினத்தை குறிக்கும் வகையில் “இரத்தினகிரீசுவரர்” என்றும் அழைக்கின்றனர்.
கோவிலின் சிறப்பு அம்சங்கள்
தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலத்தில் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் 143 வது தேவார ஸ்தலம் ஆகும். திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்கள் இந்த கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.
இக்கோவிலில் சுந்தரர், திருநாவுக்கரசர், மற்றும் திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ள புனிதத் தலம் ஆகும்.
மேலும் இக்கோவில் சோழ மன்னன் கோச்செங்கட் என்பவரால் கட்டப்பட்டு பின்னாளில் நாயக்க மன்னர்களால் புனரமைக்கப்ட்ட பழம்பெரும் திருத்தலம் ஆகும்.

MARRIAGE PARIHARAM TEMPLE-இதன் கட்டிட கலை ஆனது மாடக்கோவில் என்பதால் யானை ஏற முடியாத அமைப்பில் உள்ளது. வருடந்தோறும் வரும் மாசி மாதம், மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும் சிவதிருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
இக்கோவிலின் ராஜகோபுரம் சுமார் 68 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம் ஆகும். இதன் பிரதான நுழைவாயில் கிழக்கு திசை ஆகும் .
இக்கோவிலின் தீர்த்தக்குளம் மாணிக்க தீர்த்தம் என்றும் லட்சுமி தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர்.
மாண்டவரையும் உயிர்ப்பித்து எழவைக்கும் தேவார திருத்தலம்.
முன்னொருகாலத்தில், இரவும் பகலும் ஈசனையே எண்ணி வாழ்ந்து வந்த ஒரு வணிகப் பெண் தன் முறைமாப்பிளையுடன் மதுரையை நோக்கி செல்லும்பொழுது இரவுநேரம் ஆனதால் இக்கோவிலில் ஓய்வு எடுத்து உறங்கினார்கள். அன்று இரவு அப்பெண் திருமணம் செய்ய இருந்த முறை மாப்பிள்ளையினை பாம்பு தீண்டி இறந்து போனான்.
இதனால் அவள் அழுகுரல் கேட்டு அவ்வழியே வந்த சிவன் அடியார் திருஞானசம்பந்தர் அப்பெண்ணின் முறைமாப்பிள்ளைக்காக இத்தல இறைவனை வேண்டி உயிர்ப்பித்தருளினார். மேலும் அவர்கள் இருவருக்கும் இத்திருத்தலத்திலேயே திருமணமும் செய்து வைத்தார்.

இக்கோவிலில் பெரும் சிறப்பாக இங்கு நடக்கும் திருமணத்திற்கு சாட்சியாக எம்பெருமான் ஈசனே வன்னிமரமாகவும் , கிணறாகவும், தல விருட்சமாக வாழை மரம் போன்ற மருகமரமாகவும் காட்சி அளிக்கின்றார்.
இந்த கோயிலில் விரதம் இருந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணத் தடை நீங்கும் பரிகாரத் தலம் என்பதால், பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். இது தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகவும், பஞ்ச அரண்ய தலங்களில் ஒன்றாகவும் சிறப்பை பெற்றுள்ளது.
திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமைய :-
திருமணத்திற்கான பரிகாரம்:
MARRIAGE PARIHARAM TEMPLE-இக்கோவிலில் திருமணத் தடை நீங்க ,அம்மனை வழிபட்டு மணமாலை சூட்டி, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு 1008 காயத்ரி சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்யப்படுகின்றது. பின் வாழைப்பழம் நிவேதனம் செய்து விரதம் இருந்தாலும், திருமணத் தடை நீங்கும்.

மேலும், இக்கோவிலில் சதயத்திருமன் பதிகம் படித்தாலோ ,பாடினாலோ ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட திருமணத்தடையாக இருந்தாலும் அவை விலகி நல்ல வரன் உடனே அமையும்.
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர ,கடன் சுமை குறைய மகாலட்சுமி தேவி பரிகாரம்
MARRIAGE PARIHARAM TEMPLE-ஒருமுறை வைகுண்டத்திற்கு திருமாலை தரிசிக்க ப்ருஹு மாமுனிவர் வந்திருந்தார். அவர் வருவதை உணராமல் திருமால் வரவேற்பிற்கு பதில் உறங்கி கொண்டிருந்ததை பார்த்து கோபம் கொண்ட ப்ருஹு முனிவர்; திருமாலை எழுப்புவதற்காக தன் கடும் சினத்தால் , திருமகள் மஹாலட்சுமி குடிகொண்டிருக்கும் திருமாலின் இதயத்தில் எட்டி உதைத்தார்.

இதற்கு கோவம் கொண்ட மஹாலட்சுமி திருமாலிடம் சண்டையிட்டு அவரை விட்டு பிரிந்து வைகுண்டத்திலிருந்து பூலோகம் நோக்கி வந்து அடைந்தார் . இதனால் மகாலட்சுமி மகாவிஷ்ணுவின் கோபத்தால் சாபம் பெற்றார்.
பிரிந்த தன் கணவர் திருமாலை மீண்டும் அவரே வந்து தன்னை அழைத்து செல்லவர வேண்டும் என இத்திருத்தலத்தில் வந்தடைந்தாள் மஹாலட்சுமி. காவிரி தென்கரை ஓரம் சிறு குலத்தினை வெட்டி இத்தல மாணிக்க வன்னரான இரத்தினகிரீஸ்வரரை வேண்டி வரலட்சுமி விரதம் இருந்து சாபவிமோசனம் பெற்று மீண்டும் திருமாலை அடைந்தார் திருமகள் மஹாலட்சுமி.

எனவே , திருமருகல் கோயிலில் உள்ள மாணிக்க தீர்த்தத்தில் நீராடி, வரலட்சுமி விரதம் இருந்து, சிவபெருமானை வழிபட்டால் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும், பிரிந்த கணவர் , மனைவி மீண்டும் ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை மேம்படும் என்பது புராண ஐதீகம் ஆகும்.
வரலட்சுமி விரதம் சிறப்பின் காரணமாகவே, இக்கோவிலில் முக்கிய திருவிழாவாக வருடந்தோறும் வரும் ஆடி மாதத்தில் திருமணத் தடை நீங்க சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் தீர மற்றும் தொழில் முன்னேற்றம் அடைய
தீராத கடன் பிரச்சனையில் உள்ளவர்கள் இங்குள்ள மாணிக்க தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானுக்கு விளக்கேற்றியும் அபிஷேகமும் செய்தால் கடன் பிரச்சனை தீரும். குடும்ப அமைதி மற்றும் மகாலட்சுமி அருள் பெற மகாலட்சுமி வழிபாட்டுடன் நவகிரக தோஷ பரிகாரமும் இங்கு செய்யலாம்.

இத்தனை சிறப்பு வாய்ந்த திருமருகல் மாணிக்கவண்ணர் திருக்கோவில் பக்தர்களுக்க்கான பூலோக புண்ணிய ஸ்தலம் என்பது முன்னோர்களின் கூற்றாகும்.
எனவே இங்கு வந்து இறைவனை வேண்டுபவர்களுக்கு ஆயுள் பலம்,சந்திர பலம்,மாங்கல்ய பலம் என அனைத்து சகல சம்பத்துகளும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அனைவரும் கட்டாயம் வாழ்வில் ஒருமுறையாவுது தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலம் இதுவாகும் .
நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம்
சந்திக்கின்றோம். தகவலை உடனுக்குடன் பெற astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .
Also follow us on facebook to get notification on regular life updates.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நன்றி! வணக்கம்!
…மீண்டும் சந்திபோம்…
அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.
To share with your friends please follow the links…
Predict Your Life Before And Succeed It by God Divine
Leave a Reply