What are the sins caused by mistakes that should not be done inside the temple???

HOW TO PRAY IN HINDU TEMPLE – கோவில் என்பது அகில உலகத்தையும் காக்கின்ற இறைவனின் இல்லம் ஆகும். அங்கேயே அவன் நிரந்தரமாக வாசம் செய்து நமக்கெல்லாம் காட்சி தருகின்றான் அந்த பரந்தாமன்.மேலும் நமக்கெல்லாம் அருள்புரிந்து நம்மை துன்பத்தில் இருந்து காத்து நமக்கு வேண்டிய வரங்களை அளிக்கின்றான் நம் இறைவன்.
அத்தகைய தூய்மையான இடத்தில் மானுட பக்தர்கள் பலரும் கோவிலுக்குள் செல்லும்போது சில தவறினை அறியாமல் செய்கின்றனர். மேலும் நம்மில் பலருக்கு இறைவனை எவ்வாறு கும்பிட வேண்டும் என்று அறியாமல் தவறாக வணங்குகின்றோம்.
அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் சிலருக்கு கோவில் வழிபாட்டில் சந்தேகங்கள் உள்ளன. அவற்றிற்கும் தெளிவு கிடைக்கும் விதமாக விரிவாக இங்கே கொடுத்துள்ளோம். பக்தர்கள் பதிவினை முழுமையாக படிக்கவும்.
HOW TO PRAY IN HINDU TEMPLE–கோவிலுக்குள் செய்ய கூடாத தவறுகள் மற்றும் பாவங்கள்

- HOW TO PRAY IN HINDU TEMPLE-முதலில் நெற்றியில் திலகம் அணியாமல் கோவிலுக்குள் செல்ல கூடாது. திருநீறு மஞ்சள் குங்குமம் போன்றவற்றை திலகமாக அணிந்து செல்லவும்.

- கோவிலுக்குள் செல்லும் போது பூக்கள் ,தேங்காய் வாழைப்பழம் போன்ற அர்ச்சனை பொருட்களை ஏதேனும் வாங்கி செல்லவும். வெறும் கையோடு இறைவனை சந்திக்க செல்வதை தவிர்க்கவும்.
- கோவிலில் யாரிடமும் சண்டையிட கூடாது.
- கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
- நிதானமாக நடந்து மெதுவாக வலம் வர வேண்டும்.
- இறைவனான சிவன் கோவில் சுற்றியுள்ள சன்னதியில் சண்டிகேஸ்வரர் இருப்பார். சண்டிகேஸ்வரர் என்பவர் சிவன் கோவில் சொத்தின் கணக்கர் ஆவார். மேலும் அவர் தியான நிலையினில் அமர்ந்திருப்பார்.

அவரிடம் நாம் வணங்கும்பொழுது சிவனின் அருளினை தவிர வேறு எதுவும் இக்கோவிலில் இருந்து என்னுடன் நான் எடுத்து செல்ல வில்லை ஸ்வாமி என அவரிடம் நாம் நமது இரு கைகளையும் சத்தம் வராமல் காட்டினால் போதுமானது.

மாறாக கை தட்டி அவர் தியான நிலையினை பலரும் களைகின்றனர். அது பெரும் பாவம் ஆகும். அவரை செவிட்டு சாமி என்று கூறுதலும் ஆகாது.
- எவருடனும் உலகாதாய ஊர் வம்பு கதைகளை வார்த்தைகளைப் பேசக் கூடாது.

- வாயில் எதையேனும் குதப்பிக் கொண்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது.
- கோவிலுக்கு செல்லும் முன் வீட்டில் தீபம் ஏற்றிய பின் செல்லுவதே சிறப்பாகும்.

- தலைக்கு குளிக்காமல் கோவிலுக்குள் செல்லக்கூடாது.
- ஆண்கள் சட்டையணிந்து செல்வதை தவிர்க்க முடிந்தால் நல்லது. தொய்ந்து உலர்த்திய எளிமையான ஆடையை அணிந்து செல்ல வேண்டும் .

அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் ஆடை அணிந்து கோவிலுக்குள் செல்லுதலை தவிர்க்கவும். ஏனெனில் கோவிலுக்கு வரும் பிற பக்தர்களின் உள்ளத்தில் நம் உடையால் மாறுபட்ட எண்ணங்கள் எழும் என்பதாலும் எளிய உடை அவசியம்.

- அசைவம் சமைத்தாலோ, உடலுறவில் இருந்தாலோ, பெண்கள் வீட்டிற்கு மாதவிடாய் ஆகி இருந்தாலோ கட்டாயம் கோவிலுக்கு செல்ல கூடாது.
- வீட்டை சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும்.

- மூர்த்திகளைத் தொடுதலோ ,மூர்த்திகளின் திருவடி அருகில் கற்பூரம் ஏற்றுதலோ கூடாது.
- கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையைச் சுவரில் துடைக்கவோ கூடாது. அதனைத் தலையில் தடவிக் கொள்ளவும் கூடாது.

- பெண்கள் தலை விரி கோலமாய் கோவிலுக்குள் செல்ல கூடாது.
- சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
- விபூதி சந்தன அபிஷேகம் ,பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும் பொழுது பார்க்கக் கூடாது.

- மலஜலங்களை அடக்கி கொண்டு வழிபாடு செய்தலும் கூடாது.
- ஆலயத்துக்குள் யாரை சந்தித்துக் கொண்டாலும் ஒருவரை ஒருவர் வணங்குதல் கூடாது.
- ஆலயத்தில் விபூதி குங்குமம் ஒருவருக்கு ஒருவர் இடுதல் கூடாது.

- சுவாமிக்கு பலி பீடத்துக்கும் குறுக்கே போதல் கூடாது. சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல் சிவநிர்மால்யங்களை தாண்டுதல், மிதித்தல், த்வஜஸ்தம்பம் பலபீடம்,விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் ஆகியவை சிவபாதகம் ஆகும்.
இறைவனை கீழே விழுந்து வணங்கி கும்பிடும் சரியான முறை…

- கோவில் கருவறை மற்றும் கொடி கம்பம் நடுவினில் இறைவனை விழுந்து கும்பிட கூடாது. கொடிக்கம்பம் தாண்டி அதன் அருகிலே கீழே விழுந்து கும்பிட வேண்டும்.
- கோவில் கருவறைக்கு எதிரே நின்று கடவுளை நேருக்கு நேர் நின்றும், படுத்தும் கும்பிடுதல் கூடாது.
- இறைவனை வணங்கும் பொழுது ஸ்வாமியின் வலது கை பக்கம் நின்று கும்பிடுவது சிறப்பு ஆகும் .
- இறைவனை கீழே விழுந்து வணங்கும் பொழுதும், ஸ்வாமியின் வலது பக்கம் நின்றே விழுந்து கும்பிட வேண்டும்.
அவ்வாறு கும்பிடும் பொழுது கிழக்கு வாசல் கோவில் ஆயின் நமது தலை வடக்கு பக்கமும், வடக்கு பக்கம் வாசல் ஆயின் நம் தலை கிழக்கு பக்கம் இருக்கும்.
இந்து மத சாஸ்திரப்படி ஆண்கள் பெண்கள் இறைவனை கீழே விழுந்து வணங்கும் தெய்வீக முறை

- ஆண்கள் அஷ்ட அங்க (எட்டு உடல் உறுப்புக்களும் தரையை தொடும் படி வணங்க வேண்டும் )
- பெண்கள் பஞ்ச அங்க (ஐந்து உடல் உறுப்புக்கள்தான் தரையை தொடும் படி வணங்க வேண்டும் ) மூன்று உறுப்புக்கள் தரையை தொடக்க கூடாது.
- பெண்கள் கடவுளை அஷ்ட அங்க வழிபாடு செய்தால் சூர்பநகையால் ராவணனின் குலம் நாசம் ஆனது போல் குடும்பத்தில் குல நாசம் ஏற்படும். எனவே பெண்கள் எப்பொழுதும் பஞ்ச அங்க வழிபாடு செய்தல் வேண்டும்.
- சந்நிதிகளில் தரப்படும் விபூதி, குங்குமம் பிரஸாதங்களை பயபக்தியுடன் வாங்கி தாளில் மடித்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றை கண்ட இடங்களில் வீசக் கூடாது.

- கோவிலுக்குள்ளே, கோவில் மதிற்புறங்களிலேயே எச்சில் துப்புதல், மல ஜலங்கழித்தல் முதலியன அவசியம் செய்யக் கூடாது. இவ்வகையான அசுத்தம் செய்தல் பெரும் பாவம் ஆகும்.
- கோவிலின் புண்ணிய நதிகளில் நீராடிவிட்டு நம் ஆடைகளை நதிகளிலே விட்டு வருவதும் பெரும் பாவம் ஆகும். அவற்றை கோவில் நிர்வாகம் அறிவுரைப்படி உரிய இடத்தில் போட வேண்டும்.

- கோவிலுக்கு சென்று விட்டு வரும்பொழுது எப்பொழுதுமே அசுத்தம் செய்யாமல் வருவதே ஆகச்சிறந்த செயல் ஆகும்.

- யாசகர்களுக்கு கோவிலுக்குள் போகும் முன்னரே தருமம் செய்ய வேண்டும். சாமி கும்பிட்ட பிறகு காசினை யாசகர்களுக்கு தருமம் செய்வதை தவிர்க்கவும். மாறாக உணவு போன்றவற்றை தானம் செய்யலாம்.
இது போன்ற நிறைய தவறுகளை பக்தர்கள் இறைவனின் இல்லமான கோவிலுக்கு செல்லும்பொழுது அறியாமல் செய்கின்றனர். சிலர் அறிந்தும் அலட்சிய போக்கினால் கோவிலின் அசுத்தம் செய்து பெரும் பாவம் சேர்க்கின்றனர்.
இனி வரும் காலங்களில் இது போன்ற தவறினை திருத்தி இறைவனின் அருளை பரிபூர்ணமாக கிடைக்க பெறுவோம்.மேலும் பக்தர்கள் பலருக்கும் இருக்கும் கோவில் வழிபாட்டின் சந்தேகங்களை தெளிவு படுத்தும் விதமாக பதில் அளித்துள்ளோம் என நம்புகின்றோம்.
…சுபம்…
மேலும் இது போன்ற தகவல்களுக்கு Astrologyinformation7.com Subscribe செய்து கொள்ளவும்.
சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.
please follow the link to share with your friends…
please rate us…
predict your life before and succeed it by divine.
Leave a Reply