Is there only hardship in life? Jealousy, bad habits, stress etc.?
இந்த பதிவு உங்களுக்கானது ..அது ஜாதகத்தின் மாந்தியின் தோஷத்தால் ஏற்படும் கடும் பிரச்சனையே ஆகும்.

ஒருவரது ஜாதகத்தில் மிகமுக்கியமாக பார்க்கப்படும் மாந்தி என்பவர் யார் ?. ஜாதகத்தில் மாந்தி இருந்தால் என்ன பாதிப்பு மற்றும் நன்மைகள் ஏற்படும் ? அவருக்கான தனி சிறப்புகள் என்ன ? ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிலும் மாந்திக்கென சிறப்பான அந்தஸ்து ஜோசியர்களால் ஏன் பார்க்கப்படுகின்றது ?. அவருக்கென ஜாதகத்தில் தனியிடம் ஏன் கொடுக்க வேண்டும் ?அவரை நாம் ஏன் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவுது வணங்க வேண்டும்?
எனும் பலகேள்விகளுக்கு சரியான விடைகளை இக்கட்டூரையில் விரிவாக கொடுத்துள்ளோம்.
மேலும் மாந்திக்கான பரிஹாரம் என்ன? செல்லவேண்டிய கோவில் ஸ்தலம் என்ன ? என்பதையும் விரிவாக கொடுத்துள்ளோம்..பதிவினை முழுமையாக படிக்கவும்..
முதலில் ஜாதகத்தில் மிகமுக்கியமாக பார்க்கப்படும் மாந்தி என்பவர் யார்?

மாந்தி என்பவர் சனிபகவானின் மைந்தன் ஆவார். சூரியபகவானின் பேரன் ஆவார். நேர்மைக்கு அதிபதியான சனீஸ்வரனுக்கு இரண்டு புதல்வர்கள் உள்ளனர். அவர்கள் குளிகன் மற்றும் மாந்தி. நவகிரங்களுக்கும் மேலாக பார்க்கப்பட கூடிய கிரஹ அமைப்பை கொண்ட அந்தஸ்தை பெற்றவர் சனீஸ்வரரின் புதல்வன் மாந்தி ஆவார்.
மாந்திக்கு தீய எண்ணங்களின் அதிபதி எனும் மற்றொரு பெயரும் ஜோசியத்தில் உண்டு.

இதுவே அறிவியல் ரீதியாக பார்க்கும்பொழுது சனியின் துணைக்கோளாக மாந்தி மற்றும் குளிகன் பார்க்கப்படுகின்றன. இருப்பினும் மாந்தி மற்றும் குளிகன் நவகிரஹங்களின் நிழல் கிரகமே ஆகும்.
ஜாதகத்தில் மாந்தி தோஷ த்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஒருவர் ஜாதகத்தில் மாந்தி தோஷம் இருப்பின் அதை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. ஒருவரது ஜாதக அமைப்பில் எந்த இடத்தில் மாந்தி இருக்கின்றன என்பதை என முதலில் ஆராய வேண்டும் . ஏனெனில் மாந்தியின் பார்வை என்பது உக்கிர பார்வையாகவும் பார்க்கப்படுகின்றன.

ஒருவரது ஜாதகத்த்தில் மாந்தியின் பார்வை உக்கிரபார்வையாக அமையப்பெற்றால்.. அவர்களுக்கு படிப்பு, திருமணம், செய்யும் வேலை மற்றும் தொழில் போன்றவற்றில் தடைகள் அல்லது இடையூறு கள் அடிக்கடி ஏற்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கேரளாவில் மாந்தியின் நிலை கொண்டே ஜாதகத்தை கணிக்கின்றனர் .பல முக்கிய தகவல்களையும் மாந்தி இடம் பெற்றிருக்கும் கட்டங்களை கொண்டே ஜாதகத்தில் எழுதுகின்றனர்.

மேலும் கேரளாவில் மாந்தி என்பவர் மாந்திரீகத்தின் அதிபதி என்பர். மாந்தியினை கொண்டு மாந்த்ரீக வேலையினால் ஒருவரது வாழ்வின் முறையினையே மாற்றலாம் என்பர் . ஏனெனின் மரணத்திற்கு ஒப்பான துன்பங்களும் ,வழியினையும் தர வல்லவன் மாந்தி எனும் நம்பிக்கை அவர்களிடத்தில் பரவலாக உள்ளன.
ஆனால் நம் தமிழ்நாட்டில் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் நம்பிக்கை எல்லாம் பரவலாக இல்லை என்பது மிகவும் மகிழ்விக்க வேண்டியது ஆகும். ஏனெனில் ஆன்மிகம் என்பது ஒரு மனிதனை நல்வழி பாதையில் செலுத்தி வாழ்க்கையை நல்முறை படுத்துவதே ஆகும். அவற்றை தீய வழிக்கு செலுத்தி ஒருவரது வாழ்க்கையினை அழிப்பது என்பது கொடும் பாவம் ஆகும்.

மேலும் இன்னும் மாந்தியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மாந்தி என்பவர் ஜாதகத்தில் வில்லன் என குறிப்பிடுவர். ஒரு மனிதனின் நல்ல உயர்ந்த குணங்களை கூட பிறரிடம் வெளிப்படும் விதமானது கோபமுடனோ அல்லது முரட்டு தனமான சுபாவமாக நமக்கு காட்சி பிம்பம் அமையும் ஆயின் அது அவரது ஜாதகத்தின் மாந்தி பெற்றிருக்கும் இடத்தை கொண்டே அமைகின்றது. ஒருவருக்கு பிறரிடம் அவப்பெயர் எடுப்பதற்கும் இந்த மாந்தியின் காரகத்துவமே ஆகும் என்பர்.
இத்தகைய காரணங்களால் தான் மாந்தியின் நிலை அறிந்து ஒவ்வொருவரும் செயல் பட வேண்டும் என்கின்றனர். எனவே தான் ஜோதிடர்கள் ஜாதகத்தில் மாந்திக்கென ஒரு தனிக்கணக்கு வைத்துள்ளார்கள். அவை என்ன வென்று இனி பார்ப்போம்.
ஜாதகத்தில் மாந்தி அமையும் பாவமும் – பலனும்
லக்கினத்தில் :–
ஒருவருக்கு ஜாதகத்தில் மாந்தி லக்கினத்தில் இருந்தால் நீண்ட ஆயுள், சொத்து, வருமானம் நன்றாக இருக்கும். இருப்பினும் முரட்டு குணம், குறுக்கு வழியில் ஆராயும் குணம் உள்ளவராக இருப்பர். மற்றவர்களை மதிக்க மாட்டார்கள் ,முரட்டு குணத்தினால் வீண் வம்பு வழக்குகள் வரலாம்.தெய்வ சக்தியினை நிந்தனை செய்யவார்கள். மனக்கவலை சேரும், உடல் ஆரோக்யம் கெடும், குறிப்பாக தலை பகுதியில் பாதிப்பு ஏற்படலாம். தோஷ நிவர்த்தி செய்தால் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
இரண்டாமிடம் :

வார்த்தைகளால் கலகம் வரும், அளித்த வாக்கினை மீறுவர்,தோஷம் ஏற்படும், குடும்பத்தில் நிம்மதியின்மை , ஒற்றுமையின்மை, கல்வி தடை ஏற்படலாம், சேமிப்புகள், செல்வங்கள் நிலைக்காமல் போகலாம். தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்துகொள்வது குடும்பத்திற்கு சிறப்பு ஆகும்.
மூன்றாமிடம் :
சகோதர ஒற்றுமை குறைவு, நண்பர்கள் பகை ஏற்படலாம் ,பய உணர்வு ஏற்படலாம், தேவை இல்லாத சிந்தனை மேலோங்கி மன உளைச்சல் ஏற்படுத்தும்.
நான்காமிடம் :

தாய்க்கு நோய், தனக்கும் நோய். ஒரே இடத்தில் இல்லாது அடிக்கடி இடம் மாறுதல், சொந்த வீடு இருந்தாலும் சில காரணங்களால் அதில் குடி இருக்க விடாது. கட்டாயம் தோஷ நிவர்த்தி செய்வது சிறப்பு ஆகும்.
ஐந்தாமிடம் :
புத்திர தோஷம் தாமதம், பூர்வ புண்ணியம் பாதிப்பு தரும்.
ஆறாமிடம் :
நல்ல உழைப்பு, துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பர், எதிரிகள் கூட இவரை கண்டு அஞ்சுவர், வாழக்கை முன்னேற்றம் தரும், நீண்ட ஆயுள் உடையவர்கள், இருப்பினும் கடன் சுமை சில சமயம் உண்டாகலாம்.
ஏழாமிடம்:

திருமணத்தடை, கணவன் மனைவி இல்லற ஒற்றுமையின்மை , மனைவிக்கு நோய், கூட்டுத்தொழில் பாதிப்பு நேரிடும்.. மேலும் வம்பு வழக்கு வரும், அலைச்சல், தடை வரும், உடல் ஆரோக்யம் கெடலாம்.
எட்டாமிடம்:

சிலர் ஒழுங்கில்லாத வாழ்வியல் முறை ஏற்பது, எதிலும் துடுக்குத்தனம்,சண்டை, பிரச்சனை, தண்ணீர் கண்டம் தரும், தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும். 8ல் மாந்தி இருந்தால் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும்.
ஒன்பதாமிடம் :
தந்தைக்கு கெடுதல், முன்கோபம், முன் ஜென்ம விணை வரும், பூர்விக சொத்துக்கள் கைவிட்டு போகலாம். இவர்களுக்கு வசீகர முக அழகு இருக்கும்.
பத்தாமிடம்:
கஞ்சத்தனம், சிலர் கருமியாக இருப்பர், விசித்திரமான யோசனைகள் இவர்களுக்கு ஏற்படலாம். கடவுள் பிரியராகவும் இருப்பர், மனக்கவலை இன்றி சந்தோசமாகவும் வாழ்வர். உடன் இருப்போர் துரோகம் செய்யலாம் , உறவினர் விரோதம் ஏற்படும்.
பதினோறாம் இடம்:

மாந்திக்கு 11ம் இடம் நல்லது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது . எதிலும் சாமர்த்தியம், நல்ல வாழ்வு, வருமானம், பூமியின் சிறந்த மனிதனாகவும், சிறந்த தனலாபம் கொண்டவராக இருப்பர் .
மாந்திக்கு 11ம் இடத்தில் பிறந்தவர்கள் அரசனை போல் செல்வ செழிப்பாக வாழ்வர். முயற்சி செய்தால் அரசாங்க தலைமையே கிடைக்கும் . செய்யும் தொழிலில் அதிக லாபம் ஈட்டுவர் . பல திறமை, சொத்து சேரும், மகிழ்ச்சி சுகம் நிறைந்த வாழ்க்கை அமையப்பெறும்.
பனிரெண்டாம் இடம்:

மாந்திக்கு 12ம் இடம் கெடுதல் செய்யும் இடமாக அமைகின்றது. சொத்து விறையம், பொன் விறையம், வீண் விரயம், குடும்ப நாசம் ஏற்படலாம். துர்சொற்பனம், செய்வினை அச்சம் ஏற்படலாம். பல்வேறு தொழில் செய்து வாழ்வு அமையும். பரிகாரம் செய்து கொள்வது மிகவும் உகந்த செயல் ஆகும். வாழ்வு வளம் பெரும்.

இத்தகைய பல முக்கிய காரகத்துவம் கொண்ட மாந்தியினை ஜாதகத்தில் அலட்சிய படுத்துவது ஒருவரது வாழ்விற்கு நல்லது அல்ல. ஜாதக அமைப்பின் படி மாந்தி நிலையினை அறிந்து பரிஹாரம் கட்டாயம் செய்ய வேண்டும். ஜோதிடர்கள் இதையும் ஜாதகத்தில் பார்த்து பலன் சொல்லி பரிஹாரம் முறையினையும் சொல்வது நலம் சேர்க்கும். கேரளாவில் மாந்தியை கணக்கெடுப்பர். தமிழ்நாட்டில் வழக்கத்தில் இல்லை என்று தட்டி கழிப்பது தவறு. காரணம், சிலருக்கு அகால மரணம், தொழில்இன்மை, குடும்ப பிரச்சனை ஏற்பட மாந்தி எனும் குறிகள் காரணம் ஆகும். எனவே ஆராய்ந்து கணக்கெடுக்கவும்.
மாந்தி வழிபாடு மற்றும் மிக எளிய தோஷ நிவர்த்தி முறை:-

- மாந்தியினால் ஏற்படும் மணதோஷம் ,புத்திர தோஷம் பித்ரு தோஷம் லக்கினத்தில் ஏற்படும் பிற பல இன்னல்கள் விலக சனிக்கிழமை தோறும் மற்றும் மாதம் தோறும் வரும் உங்கள் நட்சத்திர நாட்களில் திருவிளாங்காடு , திருநீறையூர் உள்ள சனிபகவான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும்.
- இல்லையேல் குடும்பத்தோடு திருவிளாங்காடு மாந்திஸ்வரர் கோவிலுக்கு வாழ்வில் ஒரு முறையாவது சென்று அவரை தரிசித்து பரிகார பூஜை செய்து வருவது வாழ்வில் உத்தம நலம் சேர்க்கும்.
- இன்னும் எளிமையான பரிஹாரம் செய்ய வேண்டும் என்றால் மாந்தியின் தந்தையான சனிபகவான் வழிபாடு சனிக்கிழமை தோறும் செய்ய வேண்டும்.
- நீல நிறம் கொண்ட சங்கு பூக்கள் கொண்டு சனீஸ்வரர்க்கு அர்ச்சனை செய்தல் குடும்பத்திற்கும் சிறந்த பலன் தரும்.

- ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்தல் சனிபகவானின் உக்கிர பார்வை பெருமளவில் குறையும். இதனால் மாந்தியிடம் ஸ்நேஹம் உண்டாகும்.
திருவிளாங்காடு மாந்திஸ்வரர் கோவிலுக்கு சென்று பரிகார பூஜை ஏன் செய்ய வேண்டும்?.. எப்படி செய்ய வேண்டும்?… கோவிலின் சிறப்பு என்ன?…என தெரிந்து கொள்ள கட்டாயம் படிக்கவும்… பகுதி 2 (Part2)……
மேலும் இது போன்ற தகவல்களுக்கு Astrologyinformation7 .com என்ற எங்கள் வலைத்தளத்தை Subscribe செய்து கொள்ளவும்.
சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்…
மேலும் இப்பதிவினை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர…
To share with your friends please follow the links…

please rate us…
Read more: வாழ்க்கையில் கஷ்டம் மட்டுமே உள்ளதா? பொறாமை குணம், கெட்ட பழக்கங்கள், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றனவா ?predict your life before and succeed it by divine.
Leave a Reply