வாழ்க்கையின் மீளாதுயரத்தில் இருந்து விடுபட மாந்தியை எப்படி வணங்க வேண்டும்???பகுதி-2

money earning secret

வாழ்க்கையின் மீளாதுயரத்தில் இருந்து விடுபட மாந்தியை எப்படி வணங்க வேண்டும்???பகுதி-2

how to worship manti to get rid of the dullness of life ???

stress removal pariharam

வாழ்க்கையில் கஷ்டம் மட்டுமே உள்ளதா? பொறாமை குணம், கெட்ட பழக்கங்கள், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றனவா?  இந்த பதிவு உங்களுக்கானது ..அது ஜாதகத்தில் மாந்தியினால்   ஏற்படும் கடும் பிரச்சனையே ஆகும் . 

பகுதி 2 (Part2)……

maandhi

மாந்தி என்றால் யார் ?..அவரை ஜாதகத்தில் கட்டாயம் கணக்கிடுவதன் அவசியம் என்ன?.. அவரை அலட்சியப்படுத்தினால் வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும் இன்னல்கள் என்ன ?.. ஒருவரது ஜாதகத்தில் மாந்தி அமையப்பெற்றிருக்கும் கட்டங்கள் வைத்து அவருக்கு உண்டாகப்போகும் பாவப்புண்ணிய பலன்கள் என்ன? ..என்பன போன்ற மாந்தியினை பற்றி முழு தகவலும் முந்தைய பதிவில் மிக தெளிவாக கொடுத்துள்ளோம் ..படிக்காதவர்கள் முதலில் அந்த பதிவினை படித்து விட்டு அவருக்கான பரிகார முறையினை இங்கே படிக்கவும்.. அதற்கான இணைப்பு

https://astrologyinformation7.com/வாழ்க்கையில்-கஷ்டம்-மட்ட/

சிலருக்கு ஜாதகத்தின் மீதோ, பரிஹாரம் மீதோ முழு நம்பிக்கை இருக்காது. இவை எல்லாம் மூட நம்பிக்கை,கற்பனை , கட்டுரை கதை என்பர். அதுபோன்ற வாசகர்களுக்கு முதலில் ஜாதகம் என்றால் என்ன என அறிய வேண்டும் .

ஜாதகம் என்றால் என்ன?

navagraham kattam

 ஜாதகம் என்பது குழந்தை பிறந்த நேரத்தை வைத்து 11 கட்டமாக பிரித்து.. பிறந்த நேரம் கொண்டு 9 நவகிரஹத்தினை அமைப்பர். பிறந்த ராசி, நட்சத்திரம், லக்கினாதிபதி போன்ற அனைத்து தகவல்களும் நாம் பூமியில் பிறக்கும் நேரம் கொண்டே நம் எதிர்கால கணக்குகளும் கணக்கிடப்படுகின்றன.

இவ்வாறு கணக்கிடப்படுவதினால் குழந்தையின் பிறப்பு ரகசியம், குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும், ஆயுள் பலம், சந்திர பலம், புத்தி கூர்மை, செல்வ வளம், திருமண பொருத்தம்,குழந்தை பாக்கியம் போன்ற அனைத்தும் எப்படி இருக்கும் என நாம் முன்கூட்டியே அறிவதே ஜாதக அமைப்பு ஆகும்.

shivanya herbal hair oil and powder
Shivanya Herbal Hair Oil

இந்த பலன்கள் அனைத்தும் நம் முன்ஜென்ம பாவ புண்ணிய கர்மாவை பொருத்து அமையும். ஜாதகத்தை மூடநம்பிக்கை என இந்த கால இளைஞர்கள் தட்டி கழிப்பது மிகவும் தவறு ஆகும்.

இதை பற்றிய முழு விவரமும் நாம் இன்னொரு கட்டுரையில் விரிவாக பார்போம்.

நமது  மானுட  வாழ்க்கை என்பது  இன்ப  துன்பங்கள்  ஒரு  சேர  கலந்த  கலவையே  ஆகும் . நமக்கு  இன்பமான  நேரம்  அமையும்  போது கடவுளை  நினைக்க  மறக்கின்றோம் . அதே  நமக்கு  துன்பம்  வரும்  வேளையில்  மட்டும்  இறைவனை  நினைக்கின்றோம் .  மேலும் துன்பத்திர்கான தீர்வினை தேடி ஜாதகத்தை  பார்க்க  ஜோசியரிடம்  செல்கின்றோம்.

bad habits

பெரும்பாலானோர் வாழ்க்கையில் கஷ்டம் , பொறாமை குணம், கெட்ட பழக்கங்கள், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

இதற்கு என்ன தான் தீர்வு என்றால் நம் ஜாதகத்திலே அதை முன்கூட்டியே அறிந்து நமக்கு வர இருக்கும் இன்னல்களின் தாக்கத்தை குறைக்கவோ அல்லது அறவே தவிர்க்கவோ முடியும் .

 இறைவனிடத்தில் உண்மையான பக்தி கொண்டு சில பரிஹாரம் மூலம் நமக்கு  நடக்க இருக்கும்  கெட்ட நிகழ்வுகளின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை கண்டிப்பாக தவிர்க்க முடியும். பரிஹாரம் செய்வோர் முழு நம்பிக்கையுடனும்,  முழு மனதோடும் செய்தால் மட்டுமே இறைவனின் அனுக்ரஹம் முழுமையாக அவர்களுக்கு கிடைக்கும்.

maandhi

பெரும்பாலான பிரச்சனைகளுக்கு, தீய பழக்கங்களுக்கு காரணம் ஜாதகத்தில் மாந்தி அமையப்பெற்றிருக்கும் நிலையே ஆகும். இதை பற்றி முழுவிவரமும் முந்தைய தொகுப்பில் கொடுத்துள்ளோம். அதை முழுமையாக படித்த பின்னர் இக்கட்டுரையை படித்தால் தான் இப்பரிஹாரம் ஏன் செய்ய வேண்டும், அதன் தாத்பரியம் மற்றும் முக்கியத்துவம் என்ன என உங்களுக்கு எளிதாக புரியும்.

மீண்டும் உங்களுக்காக இங்கே முந்தைய  பதிவின்  இணைப்பை  கொடுத்துள்ளோம். படித்தபின்னர்  பரிஹாரம்  படியுங்கள்.  நன்கு விளக்கமாக புரியும்.

மாந்திக்கான பரிஹாரம் மற்றும் செல்ல வேண்டிய ஸ்தலங்கள்

மாந்திக்கான பரிஹாரம் என்றாலே முதலில் செல்ல வேண்டிய இடம் திருவாலங்காடு மாந்திஸ்வரர் கோவிலே ஆகும் .

திருவாலங்காடு மாந்தீஸ்வரர் கோவில் பரிகார பூஜை என்றால் என்ன ?..எப்படி செய்வது??

maandhi kovil

சனிபகவான் மகனான  மாந்திஸ்வரர்…  இறைவனான சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து தனது தோஷத்தில் இருந்து விடுபட்ட ஸ்தலமே மாந்தீஸ்வரர் கோவில் ஆகும். இதுவே அக்கோவிலின் ஐதீகம் ஆகும். எனவே இக்கோவிலில் உள்ள மாந்தீஸ்வரர்க்கு பரிகார பூஜை செய்தால் அனைத்து வகையான சனிதோஷங்களில் இருந்தும்,மாந்தி பாதிப்பினால் ஏற்படும் தோஷங்களில் இருந்தும் விடுபட்டு வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம்.

மாந்தீஸ்வரர் ஏன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார்??..

palli vilum saasthiram

 முன்னொரு காலத்தில் சனிபகவானின் மகனான மாந்தியின் மீது பல்லி விழுந்தது. பல்லி விழும் சாஸ்திரப்படி மாந்திக்கு தீங்கு விளையும் பலனை பெற்றார். இத்தீங்கின் விளைவிலிருந்து விடுபட சனிபகவான் தனது மகனான மாந்தியினை சிவபெருமானை நோக்கி தவம் புரியும்படி கேட்டுக்கொண்டார். தனது தந்தையின் கூற்றிற்கேற்ப மாந்தியும் திருவாலங்காடு சென்று  சிவபெருமானை நோக்கி ஒருமண்டலம் அதாவது  48நாட்கள் தவம் புரிந்து ஈசனின் அருள் பெற்றார். சிவபெருமானின் உள்ளம் மகிழ்வித்ததால் மாந்திக்கு ஏற்பட இருந்த பெரும் தோஷத்தில் இருந்து அவரை காப்பாற்றினார்.

கோவிலின் சிறப்புகள் :-

இக்கோவிலில் மாந்தியினால் சிவலிங்கம் உருவாக்கப்பட்டு இங்கே வழிபாடு செய்வதினால் இக்கோவில் மூலவர் மாந்தீஸ்வரர் எனும் பெயர்பெற்று அழைக்கப்படுகிறார்.

pariharam

ஆகையால் பக்தர்கள் இக்கோவிலில் மாந்தீஸ்வரர் போல் பரிகார பூஜை செய்து இறைவனை வழிபட்டால் அனைத்து மாந்தி தோஷமும் விலகி வாழ்வில் சுபிட்சம் கிட்டும். மேலும் இக்கோவிலில் வந்து வழிபட்டால்  சனிபகவானின் பார்வை குறைந்து  ஏழரை சனி, அஷ்டம சனி,ஜென்ம சனி போன்ற துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.

இதை தவிர வேறு சில கோவிலும் மாந்திஸ்வரர்க்கு உள்ளது. அவைகளில் சிலவற்றை கீழே படிக்கவும்

  • வெள்ளகோவிலில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் மாத்தபுரம் எனும் ஊரில் சுமார் 1200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாந்திஸ்வரர் கோவில் உள்ளது. திருவாலங்காடு செல்ல இயலாதவர்கள் இங்கே சென்றும் வழிபடலாம் .
  • கோவில் நகரமான கும்பகோணம் திருநிறையூர் ராமநாதர் திருக்கோவிலில் சனிபகவான் தனது இரு மனைவியான மந்தாதேவி ,தேஷ்ட்டாதேவி மற்றும் புதல்வன் மாந்தி,குளிகனுடன் குடும்பசமேதராக காட்சி அளிக்கின்றார்.

 இக்கோவில் சோழப்பெருமன்னர்களால் கட்டப்பட்டவை ஆகும் . இக்கோவிலில் எம்பெருமான் ஈசனிற்கு நேர் எதிராக குடும்ப சமேதராக காட்சி அளிப்பதினால் நம் வாழ்வில் ஏற்படும் அனைத்தும துன்பங்களும் விலக நமக்கு அருள் புரிகின்றார்.

வெளியூர் செல்ல இயலாதவர்களுக்கான மாந்தி வழிபாடு மற்றும் மிக எளிய தோஷ நிவர்த்தி முறை:-

  • மாந்தியினால் ஏற்படும் மணதோஷம் ,புத்திர தோஷம், பித்ரு தோஷம், லக்கினத்தில் ஏற்படும் பிற பல இன்னல்கள் விலக சனிக்கிழமை தோறும் மற்றும் மாதம் தோறும் வரும் உங்கள் நட்சத்திர நாட்களில் திருவாலங்காடு, திருநீறையூர் உள்ள சனிபகவான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும்.
maandhi temple
  • இல்லையேல் குடும்பத்தோடு திருவாலங்காடு மாந்திஸ்வரர் கோவிலுக்கு வாழ்வில் ஒரு முறையாவது சென்று அவரை தரிசித்து பரிகார பூஜை செய்து வருவது வாழ்வில் உத்தம நலம் சேர்க்கும்.
  • இன்னும் எளிமையான பரிஹாரம் செய்ய வேண்டும் என்றால் மாந்தியின் தந்தையான சனிபகவான் வழிபாடு சனிக்கிழமை தோறும் செய்ய வேண்டும்.
sani bhagavan flower
  •  நீல நிறம் கொண்ட சங்கு பூக்கள் கொண்டு சனீஸ்வரர்க்கு அர்ச்சனை செய்தல் குடும்பத்திற்கும் சிறந்த பலன் தரும்.
  •  ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்தல் சனிபகவானின் உக்கிர பார்வை பெருமளவில் குறையும். இதனால் மாந்தியிடம் ஸ்நேஹம் உண்டாகும்.

மாந்திக்கான பரிஹார பூஜை செய்து உங்கள் வாழ்வில் ஏற்பட இருக்கும் அனைத்து துன்பங்களில் இருந்தும் உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள்.

மேலும் உங்கள் பிள்ளைகள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகமல் இருக்கவும் இந்த பரிகார பூஜை செய்யுங்கள். குடும்பம் ஒற்றுமை உண்டாகும்.மாந்தி மற்றும் சனிபகவானின் அருளை பெற்று வாழ்வில் மனநிம்மதியுடன் நிறைவான வாழ்க்கையினை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

J நன்றி Jl

 …மீண்டும் சந்திப்போம்…

மேலும் இது போன்ற  தகவல்களுக்கு  Astrologyinformation7  Subscribe செய்து கொள்ளவும்.

சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.

shivanya herbal hair oil

please rate us…

Rating: 4.5 out of 5.
Read more: வாழ்க்கையின் மீளாதுயரத்தில் இருந்து விடுபட மாந்தியை எப்படி வணங்க வேண்டும்???பகுதி-2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

predict your life before and succeed it by divine.

Leave a Reply