How to construct cupboards at home according to Vastu to live without Poverty.?

சொந்த வீடு கட்டுதல் என்பது அனைவரின் கணவு ஆகும். அவ்வாறு கட்டும் வீடானது வாஸ்து முறைப்படி கட்டுவதே குடும்பத்திற்கு நன்மை பயக்கும். வாஸ்துபடி வீடு கட்டுவதன் அவசியமும் அதன் நற்பயன்கள் குறித்தும் ஏற்கனவே நாங்கள் சில பதிவுகள் கொடுத்துள்ளோம். படிக்காதவர்கள் AstrologyInformation7 என்கின்ற
https://astrologyinformation7.wordpress.com/
எங்களது வலைதளத்திற்கு சென்று படித்து தெரிந்து கொள்ளவும்.

வாஸ்து பதிவின் தொடர்ச்சியாக இன்று கப்போர்ட் என்கின்ற அலமாரிகள்., வீட்டின் எந்த திசையில் உள்ள சுவர்ளில் அமைக்க வேண்டும் மற்றும் எந்த திசையில், அமைக்க கூடாது போன்ற அனைத்து தகவல்களும் இந்த பதிவில் விவரமாகவும், முழுமையாகவும் கொடுத்துள்ளோம். பதிவினை முழுமையாக படிக்கவும்.
முதலில் அலமாரி என்றால் என்ன?

அலமாரி என்பது வீட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களை அழகாக வைத்துக்கொள்ளும் இடமாகும். அலமாரிகளை வீட்டுச்சுவர்களின் பக்கவாட்டில் கிரானைட், டைல்ஸ், மார்பல்ஸ் போன்ற கற்கள் கொண்டு அவரவர் வசதிக்கேற்ப வீட்டில் கட்டிக் கொள்வார்கள். பிறகு அலமாரிகளுக்கு கப்போர்டு போன்ற அமைப்பு கொண்டு கதவினை அமைப்பர்.

இவற்றை வாஸ்து முறைபடி செய்ய தவறுவோர் வீட்டின் சுவர்களுக்கு பாரம் ஏற்பட்டு வாஸ்து கோளாறுக்கு ஆளாகுகின்றனர். எனவே மீண்டும் சொல்கின்றோம் அலமாறி, கப்போர்டுகள் கன்டிப்பாக வாஸ்து முறைப்படி அமைப்பதே குடும்பத்திற்கு தன தான்ய நலம் சேர்க்கும்.
அலமாரிகள் எப்படி அமைக்க வேண்டும்?

பொதுவாக அலமாரிகள் படுக்கை அறையிலும், வீட்டின் ஹாலிலும் அமைப்பார்கள். அவ்வாறு அமைக்கும் போது பெரும்பாலும், தெற்கு, மேற்கு சுவர்களில் அமைக்க வேண்டும்.
இனி நான்கு திசைக்கான அலமாரி அமைக்கும் வாஸ்து முறையினை வரிசையாக பார்ப்போம்.
மேற்கு திசை:-

→ அலமாரி அமைப்பதற்கான சிறந்த திசையில் ஒன்று மேற்கு திசை ஆகும்.
→மேற்குபுறம் உள்ள சுவரில் அலமாரிகள் கட்ட நேரிட்டால் சுவர் முழுமையாக போட்டுக் கொள்ளலாம்.

→ஏதேனும் ஒருபக்கம் மட்டும் அலமாரிகள் கட்ட வேண்டும் என்றால் மேற்கு சுவரின் வாயவியத்தை விட்டுட்டு அமைக்கலாம் .
→அதேபோல் மேற்குசுவரில் ஈசானியத்தை விட்டும் அமைக்கலாம் .
கிழக்கு திசை சுவர் :-

→ அலமாரிகள் கிழக்கு சுவரில் வைக்க வேண்டும் என்றால் தெற்கில் ஆரமித்து வடக்கு சுவருக்கு முழுமையாக போட்டுக்கொள்ளலாம்.
→முழுமையாக போடவில்லை என்றால் கிழக்கு சுவரின் தெற்கிலிருந்து ஆரமித்து வடக்குபுறம் உள்ள கிழக்கு ஈசானியத்தை காலியாக விட்டு தெற்குபுறம் dஆக்கினேயத்தில் கட்டுங்கள்.
→ கிழக்கு சுவர் பொருத்தவரை தெற்குபுறம் ஆக்கினேயத்தில் மட்டும் காலியிடம் விட்டு அமைக்கலாகாது.
→ இந்த முறையே வீட்டின் ஆக்கினேயத்தில் உள்ள சமையல் அறை அலமாரிகளுக்கும் பொருத்தும்.
வடக்கு திசை சுவர் :-

→வடக்கு சுவரில் அமைக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கவனம் தேவை. வடக்கு சுவரில் பெரும்பாலும் தவிர்பது நல்லது.ஒருவேலை கட்ட நேரிட்டால் வடக்கு சவரின்
மேற்கிலிருந்து ஆரமித்து ஈசானியத்தை கன்டிப்பாக விட்டுட்டு கட்ட வேண்டும்.
→ ஆனால் வடக்கு சுவரின் மேற்கு வாயாவியத்தை விட்டு கட்டுதல் என்பது ஆகாது.
தெற்கு திசை சவர்,-

→தெற்கு புறம் உள்ள அலமாரிகள் பெரும்பாலும் படுக்கை அறைக்கு பொருந்தும்.
→ தெற்கு திசையில் உள்ள சுவரில் அலமாரிகள் வைக்க வேண்டும் என்றால் கிழக்கிலிருந்து ஆரமித்து மேற்கு சுவர் வரை போட்டுக் கொள்ளலாம்.
→ தெற்குபுறம் உள்ள சுவர்ரில் ஒருபக்கம் மட்டும் போட வேண்டும் என்றால் தெற்கு ஆக்கிநேயத்தை குறைத்து தெற்கு சுவரின் நைருதி என்கின்ற குபேர மூலையில் கட்டிக்கொள்ளலாம்.
→ அப்படி வேண்டாம் என்றால் இரண்டு முலைகளையும் விட்டுட்டு நடுபக்கச்சுவரில் கட்டி கொள்ளலாம்.
→ ஆனால் எக்காரணம் கொண்டும் தெற்கு சுவரின் ஆக்கினேய மூலையினை கட்டி மேற்குபுறம் நைருதி (குபேர)) மூலையினை காலியிடமாக விடாதீர்கள். முழுமையாக கட்டிக்கொள்ளவும்.
கப்போர்ட் அலமாறிகளுக்கான பிற குறிப்புகள்:-

→ வீட்டு அறைகளின் சுவர்களுக்கு ஒருவேளை மரப்பலகைகளினால் அலமாரிகளை அமைத்தால் அதனை கரையான் அரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

→ வீட்டின் அறையில் அனைத்து பக்கங்களிலும் கப்போர்டுகள் அவசியம் வைக்க வேண்டும் என்றால் அறையின் ஈசானிய மூலையை மட்டும் விட்டுட்டு அமைத்து கொள்ளலாம்.
→ வீட்டின் ஈசானிய மூலையில் அறை இருந்தால் கிழக்கு , வடக்கு சுவர்கள் இரண்டிலும் கண்டிப்பாக எந்த முறையிலும் கப்போர்ட் அமைக்க கூடாது.

→ அப்படியும் வைக்க வேண்டும் என்றால் சுவரின் அகலத்துக்குள்ளேயே வெளியே நீட்டாமல் அதாவது சுவரின் வரிசையிலேயே கிழக்கு, வடக்குகளில் அலமாரிகள் வைத்துக் கொள்ளலாம்.
இதுவே வீட்டின் கப்போர்ட் அமைக்கும் வாஸ்து முறையாகும். இந்த பதிவின் மூலம் நான்கு திசைகளிலும் வீட்டின் அலமாரிகள் எப்படி எங்கு அமைக்க வேண்டும் என்று விரிவாகவும்.. உங்கள் அனைவரின் சந்தேங்களுக்கும் விடைகொடுக்கும் விதமாகவும் பதிவிட்டுள்ளோம் என நம்புகின்றோம்.
மீண்டும் வேற ஒரு நல்ல தலைப்பில் அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.
நன்றி! வணக்கம்!
…மீண்டும் சந்திபோம்…
அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.
மேலும் இது போன்ற தகவல்களுக்கு Astrologyinformation7 Subscribe வலைதளத்தைசெய்து கொள்ளவும்.
சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.
To share with your friends please follow the links…

please rate us…
Predict Your Life Before And Succeed It by God Divine
Leave a Reply