படிக்கட்டு அறைகளுக்கான வாஸ்து குறிப்புகள்-VASTU TIPS FOR STAIRCASE ROOMS

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டிற்கு வெளியே எத்திசையில் படிகள் அமைக்க வேண்டும்? வீட்டின் படிகளின் கீழே குளியல் அறை, சாமான் அறைகள் (ஸ்டார் ரூம்) போன்றவை எத்திசையில் இருக்கும் படிகளுக்கு அமைக்க வேண்டும்?. போன்ற நான்கு திசைகளுக்குமான வாஸ்து சாஸ்திர குறிப்புகளை இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

house vastu tips

வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். உங்களின் தொடர்  ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்றைய தலைப்பு வாஸ்து குறிப்பில் மிகமுக்கிய ஒன்றானது.

நான் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சொன்னது போல் வீடு என்பது ஒருவரின் கணவு மட்டும் இல்லை. அது ஒருவரது தன் வாழ்நாளில் சேர்த்து வைத்த பெரும் சேமிப்பு ஆகும்.

house construction savings

அப்படி அரும்பாடு பட்டு கட்டிய வீட்டில் செல்வ செழிப்போடும், மனநிம்மதியுடனும் வாழ கன்டிப்பாக அனைவரும் வாஸ்து பின்பற்றி கட்ட வேண்டும். வாருங்கள் தலைப்பை பார்ப்போம்.

படிகளின் அடியில் அறைகள் அவசியமா?

நம்மில் பலரும்  ஒரு காலிமனையினை வாங்க பல இலட்சங்கள் கொடுத்து வாங்குகின்றோம். இதனால் பொதுவாக வீட்டின் உரிமையாளர்கள் அந்த இடத்தை முழுமையாக பயன்படுத்தும் விதமாக வீட்டிற்கு பிளான் போட்டு கட்டுவர்.

house plan with staircase vastu

அப்படி கட்டும்போது அவர்கள் வீட்டின் சுவரில் மேல்மாடிக்கு செல்ல படியை நிறுவுவர்.  அந்த வீட்டு படிகளின் கீழே குளியலறையோ, தேவையற்ற பொருட்களை போடும் அறைகளாக  (store room) ஆக கட்ட நினைப்பர். இதனால் சில வாஸ்து தோஷம் வீட்டிற்கு உண்டாக்கலாம். இவற்றை எவ்வாறு வாஸ்துவிற்கு ஏற்ப அமைப்பது என இந்த தொகுப்பில் காணலாம். பதிவினை முழுமையாக படிக்கவும்.

கிழக்கு முக வாசல் வீட்டிற்கு படிகள் மற்றும் அறைகள் அமைக்கும் வாஸ்து முறைstair case vastu for east facing house in tamil

கிழக்கு முக வாசல் வீட்டிற்கு படிகள் தெற்கு ஆக்கிநேயத்தில் கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டும்பொழுது கிழக்கு பக்கம் பால்கனி அமையும்.

அதாவது படிகள் ஆக்கினேயத்தில் வடக்கிலிருந்து தெற்கிற்கு ஏறி லெண்டிங் செல்வீர்கள். பின் லேண்டிங்கிலிருந்து மறுபடியும் தெற்கிலிருந்து வடக்கு முகமாக மேல்மாடிக்கு பால்கனியில் அடிவைக்குமாறு அமைக்க வேண்டும்.

staircase under bathroom vastu tip

இந்த மாதிரி கிழக்கு ஆக்கிநேயத்தில் கட்டும் படிகளுக்கு அடியில் குளியல் அறையோ அல்லது பொருட்கள் போடும் அறைகளாக சிலர் மாற்றுவர். அவ்வாறு அறைகளை அமைத்தால் அவை வீட்டையொட்டிக்கொண்டு கிழக்கு ஆக்கிநேயம் வளர்ந்து வாஸ்து தோஷத்தை வீட்டிற்க்கு உண்டாக்குகின்றன.

shivanya herbal hair oil

இதற்கு தீர்வாக கிழக்கு ஈசானியத்தில் அதாவுது படிகளுக்கு  நேரெதிரே உங்கள் வீட்டின் முற்பகுதி போர்டிகோ எல்லையில் வெறும் தூணுடன் நிறுத்தாமல்  சரியாக பால்கனியைத் தொடும்படிதூணுடன் பில்லர் சுவர் வரவேண்டும்.

vastu tip staircase

இப்படி கட்டும்பொழுது வீடு செவ்வக வடிவில் முழுமை அடையும். இதனால் கிழக்கு ஆக்கினேயம் வளராமல் வாஸ்து தோஷத்தையும் தடுக்கலாம்.  எனவே இந்த முறையில் ஆக்கிநேயத்தில் படிகள் அமைத்து படிகள்கீழ் அறைகள் அமைத்து கொள்ளுங்கள்.

வடக்கு முக வாசல் வீட்டிற்கு படிகள் மற்றும் அறைகள் அமைக்கும் வாஸ்து முறைstair case vastu for north facing house in tamil

staircase vastu

வடக்கு முகவாசல் வீட்டிற்கு வடக்கு வாயவியத்தில் படிகள் அமைக்கலாம்.

அப்படி அமைக்கும்பொழுது வடக்கு வாயவியத்தில் கிழக்கிலிருந்து மேற்கிற்குப் படி சென்று லேண்டிங் அமையும். பின் லேண்டிங்கிலிருந்து மேற்கில் தொடங்கி  மேல்மாடிக்கு கிழக்கு முகமாகச் செல்லும்படி படிகள் அமைக்க வேண்டும்.

husband and wife problems

அப்படி லேண்டிங்க் கீழே அறைகள் அமைத்தால் அந்த வீட்டிற்கு வடக்கு வாயவியம் வளர்ந்து வாஸ்து தோஷம் உண்டாக்குகின்றன. இதனால் வழக்கு வம்புகள் ஏற்படும். கணவர் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படும்.

இதற்கு தீர்வாக மேலே கிழக்கு முகவாசல் வீட்டிற்கு கூறியது படியே படிகளுக்கு நேர் எதிரே அதாவுது  வீட்டின் போட்ரிகோ முன்பகுதி வடக்கு ஈசானியத்தில் அவ்வீட்டையொட்டி  வீட்டு எல்லைக்குச் சரியாக தூணுடன் சுவர்கள் கட்ட வேண்டும்.

bathroom construction vastu tips

இதனால் வடக்கு வாயவியம் வளராமல் உங்கள் வீடானது செவ்வகம் அல்லது சதுர வடிவில் முழுமையாக இருக்கும் . இதனால் வாஸ்து தோஷம் நீங்க பெரும்.  இந்தமுறையில் கட்டுவோர் மட்டும் படிகளின் பால்கனி கீழே குளியல் அல்லது ஸ்டோர் ரூம் போன்ற அறைகளை அமைத்து கொண்டு அதனை உபயோகிக்கலாம்.

மேற்கு முக வாசல் வீட்டிற்கு படிகள் மற்றும் அறைகள் அமைக்கும் வாஸ்து முறைstair case vastu for West facing house in tamil

vastu tips

மேற்கு திசையில் வாசல் கொண்ட வீட்டிற்கு படிகள் கண்டிப்பாக வீட்டின் முன்பக்கம் அமைப்பதில் வாஸ்து முறைப்படி சிக்கல் உள்ளது.

அதாவுது மேற்குத்திசை வாயிலுள்ள வீட்டிற்கு மேற்கு நைருதி என்கின்ற குபேர மூலையில் படிகளை சிலர் அமைத்து, அதன் லேண்டிங் கீழ் அறைகள் அமைத்துக் கொள்கின்றனர்.

இதனால் அந்த அறைகள் ஆனது அவை வீட்டை விடத் தாழ்ந்து அமைவதால் வாஸ்து தோஷம்  உண்டாகிறது.

எனவே மேற்கு திசை பார்த்து வீடு கட்டுவோர் கண்டிப்பாக அறைகள் கொண்டு படிகளை மேற்கு நைருதி திசையில் அமைக்காதிர்கள்.

தெற்கு முக வாசல் வீட்டிற்கு படிகள் மற்றும் அறைகள் அமைக்கும் வாஸ்து முறைstair case vastu for South facing house in tamil

தெற்கு பக்கம் நிலம் வாங்கியவர்கள் தெற்கு திசை கொண்டு வீடுகளை அமைக்கலாம். ஆனால் படிகளை வீட்டின் அழகுக்காக தெற்கு நைருதி என்கின்ற குபேர மூலையில் அமைத்துக்கொள்வார்கள். அப்படி அமைப்பை கொண்டப் படிகளின் கீழ் எத்தகைய கட்டிடங்களும் , அறைகளும் கட்டக் கூடாது.

ஏனெனில் மேற்கு திசை வாசல் வீட்டிற்கு கூறியது போலவே தெற்கு நைருதியில் இருக்கும் படிகளின் கீழ் அறைகள் ஆனது அவை வீட்டை விடத் தாழ்ந்து அமைவதால் வாஸ்து தோஷம்  உண்டாகிறது.

ஆகையால் அத்தகைய அறைகளை அமைக்கக் கூடாது என்பதே வாஸ்துவின் விதி ஆகும்..

வீட்டின் மேல்தளத்தில் பால்கனி வழியாக மாடிக்கு செல்லும் படிகளின் கீழ் அறைகள் அமைக்கலாமா?vastu for balcony staircase room

balcony vastu tip

ஒருவேளை நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளை கொண்ட  வீட்டினை கட்டும் நபராக இருந்தால் இது உங்களுக்கான வாஸ்து குறிப்பு. ஏனெனில் சிலர் மேல்தளத்தில் பால்கனி அமைத்து அதன் வழியாக மாடிக்குச் செல்ல படிகளை நிறுவுவர்.

அப்படி மாடிக்குச் செல்ல நாம் அமைக்கும் படிகள் வீட்டிற்கு வெளியில்  வீட்டின் மேலே கிழக்கில் பால்கனியின் வழியாகச் செல்லும்படி அமைத்துக் கொள்ளலாம். இதனால்  கிழக்குப் பக்கம் பால்கனி வந்து படிகள் வளைந்து திரும்பும் போது வீட்டிற்கு இடம் குறைந்திருந்தாலும் படியின் லேண்டிங்தெற்கு ஆக்கிநேயம் வளரும். இதனால் வாஸ்து குறைவு இல்லை. நீங்கள் அமைக்கலாம் தவறில்லை.

அதேபோன்று தெற்குப் புறம் படிகள் வந்து மேல்தளத்தின் பால்கனிக்குள் செல்லும் போது வீட்டிற்கு இடம் குறைந்திருந்தாலும் நீங்கள் கட்டும்  படிகளின் லேண்டிங்கிற்கு வைத்து பார்த்தால் வாஸ்து படி வீட்டின் தெற்கு நைருதி வளரும். இதுவும் சரியே. அமைத்துக்கொள்ளுங்கள்.

அதேபோன்று வடக்குப்புறம் படிகளின் மூலம் மேல்தளத்தின் பால்கனிக்கு  செல்லும் போது படியின்  லேண்டிங் மேற்கு வாயவியம் வளரும். ஒன்றும் தவறில்லை. அமைத்துக்கொள்ளுங்கள்.

balcony construction vastu

அதேபோன்று வடக்குப்புறம் மாடிக்கு பால்கனியில் மீது செல்லும் போதும் படிகள்  லேண்டிங்கிற்கு  மேற்கு வாயவியம் வளரும். இதுவும் சரியே . கட்டிக்கொள்ளுங்கள் தவறில்லை.

ஆனால் இப்படி வளர்ந்த லேண்டிங்கின் கீழ் எத்திசையிலும் குளியலறை, சாமான் அறை, மின்சார மீட்டர் அறை போன்றவை அமைக்கலாகாது.

படிகளுக்கான பிற முக்கிய வாஸ்து குறிப்புகள்vastu for staircase rooms

bathroom vasal ucha neecham

படிகளுக்கு லேண்டிங்கின் கீழே அமையும் அறைகளுக்கு வாயில் உச்ச நீச்சம் பார்க்க தேவை இல்லை. உச்சத்தில் எத்திசையிலிருந்தாலும் தவறில்லை.

அதே போன்று படிகளை கட்டும் போது லாப நஷ்டம் கணக்கு பார்த்து கட்ட வேண்டும். அதாவுது படிகளின் முதல் படி லாபம் , அதற்கு அடுத்த படி நஷ்டம் என கணக்கிட்டு மேல்தளத்திற்கு சென்றடையும் படியானது லாபத்தில் முடியும் படி கட்ட வேண்டும்.

staricase construction vastu

இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் ஒற்றை இலக்கை கொண்ட படிகள் லாப கணக்காகவும், இரட்டை படை இலக்கை கொண்ட படிகள் நஷ்டத்தில் முடியும் எனலாம்.

இதுவே படிகளுக்கான வாஸ்து விதி ஆகும். இந்த தொகுப்பின் மூலம் நம் முன்னோர்கள் அறிவுரைப்படி வீட்டின் படிகளை எப்படி வாஸ்து சாஸ்திரம் கொண்டு கட்டுவது என முழு தொகுப்பாக பார்த்தோம். உங்கள் கனவு இல்லத்தை வாஸ்து முறைப்படி கட்டுங்கள். வாழ்வில் வறுமையின்றி செழிப்போடு வாழுங்கள்.

shivanya herbal hair oil

நன்றி!! மீண்டும் வேற ஒரு நல்ல தலைப்புடன் அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.

மேலும் இது போன்ற தகவல்களுக்கு Astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை மின்னஞ்சல் (email) மூலம் subscribe செய்து கொள்ளுங்கள்.

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

மேலும் இது போன்ற  தகவல்களுக்கு  Astrologyinformation7.com வலைதளத்தை Subscribe

செய்து கொள்ளவும்.

சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.

To share with your friends please follow the links…

Rating: 5 out of 5.
Read more: படிக்கட்டு அறைகளுக்கான வாஸ்து குறிப்புகள்-VASTU TIPS FOR STAIRCASE ROOMS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

Leave a Reply