சந்திர கண்டம் ,ஆயுள் கண்டத்தில் இருந்து விடுபட வைக்கும் திங்களூர் கைலாச சோமநாதர் ஆலயம்

temple for healthy life

சந்திர கண்டம் ,ஆயுள் கண்டத்தில் இருந்து விடுபட வைக்கும் திங்களூர் கைலாச சோமநாதர் ஆலயம்

Temple for Healthy Life

Remedies for Life-Threatening Accidents Such as Snake Bites and Accidents.

 விபத்து , விஷப்பாம்பு கடித்தல் போன்ற ஆயுள் கண்டத்தில் இருந்து விடுபட வைக்கும் திருத்தலம்

பகுதி-2

திங்களூர் கைலாச சோமநாதர் ஆலயம்

Temple for Healthy Life -கோடிகோடியாக பணம் சம்பாதித்தாலும் உடல் ஆரோக்யம் கெட்டுப்போனால் அந்த பணத்தை வைத்து ஆரோக்யத்தை விலைக்கு வாங்க முடியாது என்பார்கள்.

இவை பற்றி அனைவரும் நன்கு அறிந்தும் ஆரோக்யம் மற்றும் தனது ஆயுளில் சிறிதும் கவனம் செலுத்த மாட்டார்கள். எனவே பணத்தை விட ஆரோக்யம் முக்கியம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த ஆரோக்யத்தை பற்றி பேசும்பொழுது சிலருக்கு இளம் வயதிலேயே ஆயுளுக்கு பங்கம் வரலாம். அதாவுது விஷப்பாம்பு தீண்டுதல், சாலை விபத்து நேரிடுதல் , கிணற்றில் குளிக்கும் பொழுது விபத்து ஏற்படுவது , இயற்கை பேரிடரில் சிக்கி உயிர் பிரிதல் , விலங்களினால் ஆபத்து வருதல் போன்ற அகால மரணங்களில் நாமோ அல்லது நமது குடும்பத்தில் உள்ளோர்க்கு சில சமயம்  ஏற்படலாம். இது நம் ஜாதகத்தில் நமக்கு ஏற்பட இருக்கும் ஆயுள் கண்டம் ஆகும்.

இது போன்ற நிகழ்வுகள் நமக்கு ஏற்படாமல் இருக்கவும் , ஜாதகத்தில் ஆயுள் கண்டத்தில் இருந்து தப்பிக்கவும் சில கோவில்கள் மற்றும் பரிகார வழிபாட்டினை நம் இந்து தர்ம புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. கோவில் வழிபாடு மற்றும் பரிகாரமும் கண்டத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மனித வாழ்வின் பெரும் துணையாகவும் , அங்கமாகவும் இருக்கும் .

வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்றைய தலைப்பு “சந்திர கண்டம் ,ஆயுள் கண்டத்தில் இருந்து விடுபட வைக்கும் திங்களூர் கைலாச சோமநாதர் ஆலயம். விபத்து , விஷப்பாம்பு கடித்தல் போன்ற ஆயுள் கண்டத்தில் இருந்து விடுபட வைக்கும் திருத்தலங்களின் இரண்டாம் பகுதி.

அதாவுது ஆயுள் குறைவில்லாமல்  நீண்ட ஆயுளோடு வாழவைக்கும் திருத்தலங்கள்  நம் தாய் திருநாடான தமிழ்நாட்டில் எங்கு உள்ளன என விரிவாக பார்க்க உள்ளோம். வாருங்கள் தலைப்பிற்கு செல்வோம். பதிவினை முழுமையாக படிக்கவும்  .

திங்களூர் சோமநாதர் ஆலயம்THINGALUR SOMANAATHAR TEMPLE

ஆயுள் கண்டத்தில் இருந்து விடுபட மூன்றாவதாக பார்க்க போகும் கோவில் தஞ்சாவூர்  மாவட்டம் திங்களூரில் அமைந்திருக்கும் அருள்மிகு கைலாசநாதர் ஸ்வாமி திருக்கோவில் ஆகும்.

 கோவில் புராணம் KOVIL HISTORY

ஒரு முறை சந்திரபகவான் எம்பெருமான் ஈசனிற்கும் மாதா பார்வதி தேவிக்கும் பிறந்த மகனான விநாயகப்பெருமானை பார்ப்பதற்காக திருக்கயிலாயம் சென்றார். கையாலாயம் சென்ற பொழுது தனது அழகின் கருவத்தினால் விநாயகப்பெருமானை உருவ கேலி செய்தார். இதனால் கோபம் அடைந்த விநாயகப்பெருமானோ அழகு தேய்ந்து உன்னில் இருக்கும் பதினாறு களையும் இழந்து பொலிவற்று போவாய் என கடும் சாபம் சந்திரனுக்கு இழைத்தார்.

சாபத்திற்கு ஆளான சந்திரனோ தனது அழகு, இளமை, பொலிவு என அனைத்தும் இழந்ததால் கடுமையான மனவேதனை மற்றும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

சாபம் விமோச்சனம் அடைய வேண்டி பூலோகம் வந்தடைந்து ,ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தின் பலனாக ஈசன் கைலாசநாதராக எழுந்தருளி சாபத்தினை சந்திரனுக்கு போக்கினார். 

சந்திரன் சிவனை நோக்கி தவமிருந்து தனது சாபத்தில் இருந்து விடுபட்டதால் ஈசனிடத்தில் இன்னொரு விண்ணப்பமும் வைத்தார். அவை என்னவென்றால் ஈசன் இவ்விடத்தில் எழுந்தருளி அனைவருக்கும்  சாபம் போக்கும் ஸ்தலமாக இங்கே எழுந்தருள வேண்டும் என்றும் , அக்கோவில் தமது பெயர் கொண்டு திங்களூர் கைலாசநாதராக இடம் பெற வேண்டும் என்று ஈசனிடத்தில் கேட்டுக்கொண்டார்.

எம்பெருமான் ஈசனும் அதை ஏற்க, எனவே இக்கோவிலுக்கு திங்களூர் கைலாசநாதர் எனும் பெயர் பெற்றது . இத்தல இறைவனுக்கு சோமநாதர், சந்திரசேகரர், சந்திரமவுலி உள்ளிட்ட பெயர்களும் உண்டு. மேலும் இக்கோவிலுக்கு நவகிரஹ சந்திர பரிகார ஸ்தலம்  என்று மற்றொரு பெயரும் உண்டு.

எனவே உங்கள் ஜாதகத்தில்  சந்திர பலம்  கெட்டுப்போனால்   வேலையின்மை, சோம்பல் , மனஅழுத்தம் போன்றவை ஏற்படலாம். மேலும் தோல் வியாதி , சரும பிரச்சனை உள்ளவர்கள்  இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் நிச்சயம் குணம் அடைவீர்கள்.

விஷப்பாம்பு கடித்தல், விபத்து போன்ற ஆயுள் கண்டத்தில் இருந்து விடுபட வைக்கும் திங்களூர் கைலாச சோமநாதர் திருத்தலம்

Remedies for Life-Threatening Accidents Such as Snake Bites and Accidents.

கோவில் வரலாறு – Temple for Healthy Life

சந்திர பகவான் கேட்டு கொண்டதற்கு இணங்க திங்களூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் கைலாசநாதருக்கு சோழர்  மன்னர்களால் திருக்கோவில் கட்டப்பட்டு இன்று வரை மக்களால் பாதுகாக்க படுகின்றது.

ஒருமுறை முருக பக்தன் ஆன அப்பூதி அடிகள் திங்களூரில் வாழ்ந்து வந்த காலம் அது. இவர் சிவன் அடியார் திருநாவுக்கரசர் வாழ்ந்து வந்த சமகாலத்தை சேர்ந்தவர் ஆவார். திருநாவுக்கரசர் இக்கோவிலில் சிவனுக்கு செய்யும் தொண்டினை பார்த்து அப்பூதி அடிகள் அவர் மீது பெரும் பற்று கொண்டார்.

சிவனிற்கு தொண்டு செய்து வாழ்வதை விடவும் சிவனடிகளுக்கு தொண்டு செய்து வாழ்ந்து வருவது ஈசனிற்கு காட்டும் பக்தியின் அறம் என நினைத்தார்.  

இதன் காரணமாக அவர் தனக்கு பிறந்த இரண்டு மகன்களுக்கும் மூத்த திருநாவுக்கரசு , இளைய திருநாவுக்கரசு என இருவருக்கும் திருநாவுக்கரசு என அவர் பெயரை சூட்டினார். மேலும் அவர் பெயரிலேயே கல்வி கூடம், அன்னதானம் செய்தல் போன்ற தர்ம காரியங்களை செய்து வந்தார் அப்பூதி.

இவற்றை அறிந்த திருநாவுக்கரசர்  அப்பூதி அடிகளின் வீட்டிற்கு சென்று அவரை காண நினைத்தார். வீட்டிற்கு வந்த திருநாவுக்கரசரை கண்டு அப்பூதி மற்றும் அவரது மனைவி அருள்மொழி மிகவும் ஆனந்தப்பட்டனர். இறைவனிற்கு சேவை செய்வதை விடவும் சிவன் அடியாராக இருக்கும் தங்களுக்கு தொண்டாற்றுவதே சிறந்த செயல் ஆகும் என கூறி திருநாவுக்கரசரை தனது வீட்டில் உணவு அருந்தும்படி கேட்டுக் கொண்டார்.

திருநாவுக்கரசரும் சம்மதிக்க, உணவு உண்ணுவதற்காக தனது மூத்த மகனை வாழை இலையினை பறித்து வர சொன்னார் அப்பூதி.

வாழை இலை பறிக்க போன இடத்தில் மகனை பாம்பு கடித்து அங்கேயே இறந்து போனான். இருப்பினும் தங்களது  துயரத்தை  மறைத்து திருநாவுக்கரசருக்கு தம்பதிகள் இருவரும் உணவு படைத்தனர். 

இவற்றை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதி தம் மீது வைத்திருக்கும் உண்மையான பற்றினை கண்டு மெய்சிலிர்த்தார். மகன் மாண்டதை விடவும் தமக்கு தொண்டாற்றுவதை தலையாய கடமையாக நினைத்த அப்பூதிக்கு மீண்டும் மகனை உயிர் பித்து எழுந்தருள திருநாவுக்கரசர் எம்பெருமான் ஈசனை நாடினார்.

திங்களூரில் இருக்கும் சோமநாதர் சன்னதி முன்பு இறந்த அப்பூதி மகனை வைத்து திருப்பதிகம் பாடினார். என்ன ஆச்சர்யம் இறந்த மகன் மீண்டும் உயிருடன் எழுந்தான். திருநாவுக்கரசரின் புகழும் எட்டு திக்கும்  எங்கும் பரவியது.

திங்ளூர் தலமானது சிவபெருமானை சந்திர பகவான் வழிபட்ட ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். எனவே ஜாதகத்தில் மிருக தோஷம் உள்ளவர்கள் , விஷக்கடி ஏற்பட இருக்கும் வேலைகளை செய்வோர் , ஆயுள் கண்டம் உள்ளோர் இக்கோவில் வந்து வழிபட்டு திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகத்தைப் பாடினால் இதுபோன்ற பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

மேலும் இக்கோவிலின் மற்றோரு சிறப்பாக குழந்தைகளுக்கு பால்,நெய் கொண்டு முதல் அன்னபிரசன்னம் செய்வர். இதனால் ஜலதேவதை மற்றும் ஒளசித தேவதை அருள் குழந்தைக்கு கிடைக்கும் . இவ் ஆசியினால் குழந்தைக்கு  நீர் தோஷம் நீங்கும். மற்றும்  அடிக்கடி காய்ச்சல் , சளி , இருமல் போன்ற தொல்லைகள் இல்லாமல் குழந்தைகள் உடல் ஆரோக்யத்தோடு தீர்க்க ஆயுள் கொண்டு  வாழ்வார்கள் .

எனவே விஷக்கடி,ஆயுள் கண்டம்,உடல் நலக்கோளாறு உள்ளவர்கள்  தஞ்சாவூர் மாவட்டம் கைலாசநாதர் திருக்கோவில் சென்று வாருங்கள். நிச்சயம் நன்மை பயக்கும்.

மேலும் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் காணலாம்.……

நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம் 

சந்திக்கின்றோம். தகவலை உடனுக்குடன் பெற  astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

To share with your friends please follow the links…

Rating: 5 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

Leave a Reply